பச்சை நிறத்தில் உள்ளது சரியான விடையாகும்.


1) உம்முல் கிதாப், அஸ்ஸப்உல் மதானி, ஸூரதுஸ்ஸலாத் என அழைக்கப்படும் ஸூரா எது? 

             A) யாஸீன்                                                     B) அல்பாதிஹா

C) அல்பகரா                                                 D) அல்முல்க்

 

2) அல்குர்ஆனில் உள்ள ஒரு ஸூரா வீட்டில் ஓதப்பட்டால் ஷைத்தான் விரண்டோடுவான். அது...

A) அல்பகரா                                                  B) ஆலஇம்ரான்    

C)  அல்பலக்                                                 D)  அல்மாஇதா

 

3) ஆயதுல்குர்ஸி என்பது எந்த அத்தியாயத்தின் எத்தனையாவது வசனம்?

A)  அல்பகரா – 283                                       B) அல்பகரா -255

C)  ஸஜ்தா – 22                                              D) அல்பகரா - 155

 

4) ஸூரா அல்பகராவில் உள்ள இறுதி வசனங்கள் இரண்டும் உறங்கும் முன் ஓதவேண்டிய அவ்ராதுகளில் உள்ளதாகும். அது எவ்வாறு ஆரம்பிக்கும்?

A)  குல் அவூது                                              B) ரப்பனா ஆதினா

C)  ஆமனர்ரஸூலு                                      D) அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவ…

 

5) நுபுவ்வத்தின் முதல் வசனம் எது?

A)  அல்ஹம்துலில்லாஹி                          B) ஆமனர்ரஸூலு

 C) யாஸீன்                                                     D)   இக்ரஃ

 

6) அல்குர்ஆனில் மூன்றில் ஒன்றுக்கு சமமான ஒரு ஸூரா தவாபுடைய தொழுகையின் இரண்டாவது ரக்அத்தில் ஓதப்படும். அந்த ஸூரா எது?

A)  அல்இக்லாஸ்                                          B) அல்காபிரூன்

C)  அல்அஃலா                                             D)  அல்காஷியா

 

7) குதிரையின் சிறப்பை விவரிக்கும் அல் குர்ஆன் அத்தியாயம் எது?

A)  அல் ஆதியாத்                                           B) அல் கத்ர்

 C)  அல் பலக்.                                              D)  அல் மஸத்

 

8) கதைகளில் மிக அழகிய கதை என அல்லாஹ் வர்ணித்துக் கூறும் நபியின் கதை எது?

A)  யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்                B) மூஸா  அலைஹிஸ்ஸலாம்

C)  யூஸுப்  அலைஹிஸ்ஸலாம்                D)  ஆதம் அலைஹிஸ்ஸலாம்

 

9) பிஸ்மி இரண்டு முறை இடம்பெறும் அத்தியாயம் எது?

A)  அந்நம்ல் .                                                 B)  அந்நஹ்ல் 

C)  அத்தவ்பா.                                               D)  அல்பகறா

 

10) அல் குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்படும் நபித்தோழர் யார்? (ரலியல்லாஹு அன்ஹும்)

A)  அலீ பின் அபீ தாலிப்.                            B)  அபூ பக்ர் ஸித்தீக். 

C)  ஸைத் பின் ஹாரிஸா.                            D)  அம்மார் பின் யாஸிர்.

 

11)  அல் குர்ஆனில் பேசியதாகக் கூறப்படும் இரண்டு உயிரினங்களும் எவை?

A)  ஹுத்ஹுத் பறவை- தேனி.                 B)  ஹுத்ஹுத் பறவை - எறும்பு 

C)  தேனி- எறும்பு.                                       D)  ஒட்டகம்- மீன்

 

12)  உலகில் நடைபெறும் விஷயங்கள் களாகத்ரில் உள்ளதா?

A)  அனைத்தும் உள்ளது                              B) எதுவும் இல்லை

C)  சில விடையங்கள்  மட்டும் உள்ளது  D)  சிலவற்றைத் தவிர அதிகமானவை உள்ளது

 

13) காலத்தை ஏசுவது என்பது......

A)  வேதங்களை ஏசுவதாகும்                    B)  நபியை ஏசுவதாகும்

C) மலக்குகளை ஏசுவதாகும்                     D)  அல்லாஹ்வை ஏசுவதாகும்

 

14)  நிச்சயமாக முஃமின்கள் மறுமையில் அல்லாஹ்வை காண்பது என்பது....

A)  நடைபெறும்.                                          B)  நடைபெறாது.

C)  நடைபெறலாம்.                                    D)  சாத்தியமில்லை

 

15)  தூக்கம், சிறுதூக்கம் என்பது அல்லாஹ்வுக்கு

A)  50000 வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும்.             B)  ஏற்படவே செய்யாது.

C) சில நேரம் ஏற்படலாம்.                        D) அவன் நாடியபோது மட்டும் ஏற்படும்.

 

16) நிச்சயமாக அல்லாஹ் , தான்  .........பேசுவான்.

A)  நாடியதை                                                B) நாடியபோது

C) நாடியவாறு                                             D) அனைத்தும்.

17) ஸுர் ஊதும் வானவரின் பெயர் என்ன?

A)  மலக்குல் மவ்த்                                      B) மீகாயீல் 

C)  இஸ்ராபீல்.                                              D) ஜிப்ரீல்

 

18) பின்வருவனவற்றில் ஷீஆ மத வழிகேடுகளில் உள்ளது எது?

A)  ஸஹாபாக்களை சபித்தல்                    B) தகிய்யா 

C)  முத்ஆ திருமம்.                                  D)  அனைத்தும்.

 

19) அல் குர்ஆன் வசனங்களைப் பொதிந்துள்ள தாயத்துகளை அணியலாம். இக்கூற்று..

A)  சரி.                                                              B)  தவறு

 

20) அல் குர்ஆன் படைக்கப்பட்டது எனும் வழிகேட்டுக் கொள்கையை திணிக்க முயன்ற பிரிவினர் யார்?

A)  முர்ஜிஆக்கள்                                           B) அஷாஇராக்கள் 

C)  முஃதஸிலாக்கள்.                                    D) மாதுரீதிய்யாக்கள்

 

21) அல்ஹதீஸ் நபிமொழி என்பது நபியவர்களின் ..

A)  சொல்                                                       B) செயல்

C)  அங்கீகாரம்                                              D) அனைத்தும்

 

22) ஸஹீஹ் ,ளஈப் என்பது எக்கலையுடன் நேரடியாக தொடர்பாகும்?

A)  அல்குர்ஆனுடன்                                    B) அல்ஹதீஸுடன்

C)  சட்டக்கலையுடன்                                 D) வரலாற்றுடன்

 

23) நபிமொழியில் வரக்கூடிய நாவுக்கு இலகுவான,மீஸானில் கனமான,அல்லாஹ்வுக்கு விருப்பமான இரண்டு வார்தைகளாவன..

A)  ஸுப்ஸானல்லாஹி வபிஹம்திஹி .ஸுப்ஸானல்லாஹில் அழீம்

B)  லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்

C)  லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்

D)  அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ்..

24) நபியவர்களின்   மனைவியரில் அதிகமான ஹதீஸை அறிவித்தவர் யார்?

A)  ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா        B) ஸபிய்யா  ரலியல்லாஹு அன்ஹா

C)  ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹா      D)  ஸவ்தா ரலியல்லாஹு அன்ஹா

 

25) நபியவர்களின்    அடிச்சுவடுகளைத் தேடிப் பின்பற்றுவதில் பிரபலம் பெற்ற நபித் தோர் யார்? (ரலியல்லாஹு அன்ஹும்)

A)  இப்னு அப்பாஸ்.                                   B)  இப்னு மஸ்ஊத்

C)  இப்னு உமர்.                                            C)  இப்னுஸ் ஸுபைர்

 

26)  பலவீனமான ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு அமல் செய்யலாம். இக்கூற்று

A)  சரி.                                                              B) தவறு

 

27)  ரியாழுஸ் ஸாலிஹீன் எனும் நூலை தொகுத்த இமாமின் பெயர் என்ன?

A)  ஸுயூதி.                                                    B)  இப்னு கஸீர் 

C)  இப்னு ஹஜர்.                                         D)  நவவி

 

28)  பின்வருவனவற்றுள் அதிக எண்ணிக்கையிலான ஹதீஸ்களைப் பொதிந்துள்ள ஹதீஸ் கிரந்தம் எது?

A)  முஸ்னத் அஹ்மத்.                                  B)  அல் முவத்தா                             

C)  ஸுனன் அந்நஸாஈ .                              D)  ஸஹீஹ் முஸ்லிம்

 

29)  முஹம்மத் நபியவர்கள் நபியாகவும் ,தூதராகவும் இருந்த காலம் எத்தனை ஆண்டுகள்?

A)  23.                                                               B)   13.

C)  10.                                                              D)  40

 

30)  ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு நபியவர்களின் தலைமையில் நடைபெற்ற போர் எது?

A) கைபர் போர்                                            B) உஹத் போர்.

C)  கன்தக் (அகழ்)போர்                              D) பத்ர் போர்

 

31)  நபியவர்களது குழந்தைகள் எத்தனை பேர்?

A)  4 + 3 = 7.                                                    B)  5 + 2 =7

C)  6 + 2 =8                                                     D) 5 + 6 = 11

32) நபி அவர்களினால் மதீனா வாசிகளுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க அனுப்பி வைக்கப்பட்ட நபித் தோர் யார்? (ரலியல்லாஹு அன்ஹும்)

A)  ஸைத் பின் ஹாரிஸா.                             B)  ஸைத் பின் ஸாபித் 

C)  இப்னு அப்பாஸ்.                                   D)  முஸ்அப் பின் உமைர்.

33) ஒரு நபித் தோழரின் மரணித்திற்காக அர்ஷ் நடுங்கியது. அந் நபித் தோர் யார்? (ரலியல்லாஹு அன்ஹும்)

A)  முஆத்பின் ஜபல்.                                    B) ஸஃத் பின் முஆத். 

C)  அப்துல்லாஹ் பின் ரவாஹா.               D)ஸஃத் பின் உபாதா.

 

34) அல்லாஹ்வினால் உருவப்பட்ட வாள் என நபிகளாரால் பெயர் சூட்டப்பட்ட நபித் தோர் யார்? (ரலியல்லாஹு அன்ஹும்)

A)  பராஃ பின் மாலிக்.                                B)  அபூ துஜானா  

C)  காலித் பின் வலீத்.                                  C)  அபூ தல்ஹா

 

35) தாருல் ஹிஜ்ரா என அழைக்கப்படுவது எதை?

             A)  மக்கா                                                         B) மதீனா     

C) பலஸ்தீன்                                                  D)  அரேபிய தீபகற்பம் .

                                                      

36)  மஸ்ஜிதுந்நபவியில் ஒரு தொழுகையை தொழுவதானது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட  ( மஸ்ஜிதுல் ஹராம் தவிர) எத்தனை மடங்கு சிறந்தது?                                                                  

A)  10                                                               B) 2000        

C) 1000                                                              D) 4000

 

37)  உலகில் சுவர்கத்துப் பூஞ்சோலை அமைந்துள்ள இடம் எது?

              A)  மஸ்ஜிதுந்நபவி                                      B) மஸ்ஜிதுல் ஹராம்         

C)  மஸ்ஜிதுல் அக்ஸா                                  D) மஸ்ஜித் ஷூஹதாஉ உஹத்.

 

38)  நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் முதல்முதலாக வந்திறங்கிய இடம்:

A)  ஜுருப்.                                                     B)  அவாலி 

C)  குபா.                                                         D)  குர்பான்

 

39)  பிஃரு உஸ்மான் என அறியப்படும் கிணற்றின் இயற்பெயர்:

A)  பிஃருர் ரவ்ஹா.                                      B)  பிஃரு ரூமா 

C)  பிஃரு மஊனா .                                      D)  பிஃரு (غ)கர்ஸ்

40)  ஸப்உ மஸாஜித் எனப்படும் பள்ளிவாயில்கள் எந்த யுத்தத்தை நினைவுகூறும் முகமாக நிருவப்பட்டன?

A)  உஹத் .                                                     B)  கைபர் 

C)  ஹுனைன்.                                              D)  கன்தக்

   41) ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் மீது நோன்பு நோற்பது தடைசெய்யப்படாத நாள் எது?                      

 A)  ஈதுல் பித்ர்.                                              B)  ஈதுல் அழ்ஹா 

C)  அய்யாமுத்தஷ்ரீக்.                                 D)  யவ்மு அறபா (அறபா தினம்.)    

 

42) பிரயாணத்தின் போது தொழுகைகளில் சலுகை கொடுக்கப்பட்ட விடயங்கள் என்ன?.

 A)  அல் கஸ்ரு (சுருக்குதல்) மட்டும்.       

B) அல்ஜம்உ (சேர்த்தல்) மட்டும்.   

 C)  அல்கஸ்ரு வல்ஜம்உ (சேர்த்தல் மற்றும் சுருக்குதல்)           

C)  தொழுகையை களா செய்யலாம்.

 

 43)  ஸகாத் கடமை என்பது பொதுவாக நிறைவேற்றப்படுவது

               A)  நாளாந்தம்.        B)  மாதாந்தம்           C) வருடாந்தம் .        D)  வாழ்வில் ஒரு முறை

     

44)  அபூ பக்ர் (ரழி) அவர்களுக்கு முதலாம் பைஅத் நடைபெற்ற இடம் எது?

A)  ஸகீபது பனீ ஸாஇதா .                          B)  அல் மஸ்ஜிதுந் நபவி 

C)  குபா .                                                        D)  பைரஹா

 

45)  காதிஸிய்யா யுத்தத்தைத் தலைமைதாங்கிய நபித் தோழர் யார்?

A)  அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ்          B) அல்அலா இப்னுல் ஹழ்ரமி 

C)  ஸஃத் பின் அபீ வக்காஸ்.                      D)  உத்பா பின் ஃகஸ்வான்

46)  20 வருடங்கள் அமீராகவும், 20 வருடங்கள் கலீபாவாகவும் பனியாற்றிய நபித் தோழர் யார்?

A)  அம்ரிப்னுல் ஆஸ்;.                                B)  முஆவியா பின் அபீ ஸுப்யான் 

C)  இப்னுஸ் ஸுபைர் .                               D)  இப்னு அப்பாஸ்

47) கிறிஸ்வர்களிடமிருந்து குத்ஸை மீட்டெடுத்த இஸ்லாமிய மன்னர் யார்?

A)  ழாஹிர் பைப்ரஸ் .                                 B)  நஜ்முதீன் அய்யூப் 

C)  ஸலாஹுதீன் அய்யூபி                          D)  முஹம்மத் பின் கலாவூன்

48) ஈதுல் பித்ர் கொண்டாடப்படும் மாதம் எது?

A)  ரமளான்               B) துல்ஹஜ்                C)  ஷவ்வால்                         D)  முஹர்ரம்

49) முஹம்மது நபி க்கு மாமனார் முறை வரும் ஸஹாபி யார் ?  (ரலியல்லாஹு அள்ஹும்)

A)  ஹம்ஸா               B) உமர் .                     C)  அப்பாஸ்             D) இவர்களில் யாருமில்லை.

50) கஃபாவை இடிக்க வந்த மன்னன் யார்?

A)  நஜ்ஜாஷி             B) நம்ரூத்.                  C)  பிர்அவ்ன் .                       D)  அப்ரஹா.

-


1 comments:

  1. உங்கள் மார்க்கப் பணி சிறக்க அல்லாஹ்(சுபு) த ஆலா மென் மேலும் அருள் புரிவானாக/எஸ்.கசாலி, மதினா

    ReplyDelete

 
Top