1) விடைகளை அல்குர்ஆனின்  ஸுரா 3 வசனம் 92 முதல் ஸுரா 4 வசனம் 23 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

2)  மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

-------------------------------------------------------------------------------

1   (வணக்கத்திற்கான) முதல் வீடு இருப்பது

        a) குபா         b) மதீனா       c) பக்கா                d) பலஸ்தீன்

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)


2   விசுவாசிகளிடம் “உங்களுக்கெதிராக மனிதர்கள் யுத்தத்திற்கு ஒன்று கூடியிருக்கிறார்கள் என்ற போது

a) விசுவாசம் அதிகரித்தது              b) வணக்க வழிபாடு அதிகரித்தது

c) பயம் அதிகரித்தது                    d) தவ்பா அதிகரித்தது

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)


3   பிள்ளைகள் இன்றி இறந்த மனைவியின் சொத்தில் கணவனின் பங்கு

        a) 1 / 3         b) 2 / 3         c) 3 / 7         d) 1 / 2

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)


4   முஹம்மது நபி மென்மையாக நடந்து கொள்வது

a) அல்லாஹ்வின் அருளால்            b) அவர்களின் வளர்ப்பு முறையால்

c) ஸஹாபாக்களின் தன்மையால்       d) விவேகத்தால்

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)


5   பெண்கள் மானக்கேடான செயலை செய்தால் அதை நிரூபிக்க அவர்களுக்கு எதிரான சாட்சி---------தேவை

        a) 1             b) 2             c) 3             d) 4

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

6   யுத்தத்தில் துக்கத்திற்கு பிறகு அல்லாஹ் அமைதியளிக்க கூடிய------ஐ இறக்கி வைத்தான்

        a) 5000 மலக்குகள்                      b) மழை

        c) தூக்கம்                              d) 3000 மலக்குகள்

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

7   விசுவாசிகளே! ------- ஆக அன்றி மரணித்து விட வேண்டாம்

        a) கடனற்றவராக                       b) முஸ்லிமாக

        c) மறுமையை நம்பியவராக            d) ஷஹீது

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

8   இறந்தவருக்கு 3 பெண்கள் மட்டும் இருந்தால் அவர்களின் வாரிசுரிமை பங்கு

        a) 1 / 2         b) 2 / 3         c) 1 / 3         d) 1 / 6

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)


9   தவ்ராத்திற்கு முன்னர் மக்களுக்கு ஹராமாக்கப் பட்ட உணவுகள்

a) பன்றி இறைச்சி              b) இஸ்ராயீல் தனக்கு விலக்கி கொண்டவை

c) செத்த பிராணி , இரத்தம்             d) a & c

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)


10   முஹம்மது ----- அன்றி வேறில்லை . இதற்கு முன்னர் பலர் சென்றிருக்கின்றனர்.

        a) மனிதர்                      b) ரஸுல்

        c) முஸ்லிம்                    d) தலைவர்

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)


11  தவ்பா அங்கீகரிக்க படுவது

        a) அறியாமையால் பாவம் செய்து சமீபத்தில் தவ்பா செய்பவர்

        b) முஸ்லிம்களுக்கு மட்டுமே

        c) வணக்க வழிபாடு அதிகம் செய்வோருக்கு மட்டுமே

        d) அனைத்தும்

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

12   3000 மலக்குகளை கொண்டு உதவி செய்தது போதாதா?- இது 

        a) நபியானவர் விசுவாசிகளை நோக்கி கூறியது

        b) ஜிப்ரீல் ஆனவர் நபியை நோக்கி கூறியது

        c) விசுவாசிகள் மற்ற விசுவாசிகளை நோக்கி கூறியது

        d) அல்லாஹ் நபியை நோக்கி கூறியது

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

13   அநாதைகளின் பொருட்களை அநியாயமாக தின்பது ------ ஆகும்

a) ஏழைகளுக்கு ஆகுமானது            b) நெருப்பை தின்பது

c) 40 சவுக்கடிக்கான குற்றம்            d) மற்ற அநாதைக்கு ஆகுமானது

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

14  யுத்தம் பற்றி நாங்கள் அறிந்திருந்தால் உங்களை பின்பற்றியிருப்போம் – இதை கூறியது

a) காஃபிர்       b) யூதர்கள்     c) முஸ்லிம்கள் d) முனாஃபிக்கள்

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)


15  கழுத்தில் செல்வத்தை மாலையாக போட்டு மறுமையில் வருபவர்கள்

        a) வட்டி உண்பவர்              b) உலோபி (கஞ்ச) தனம் செய்தவர்

        c) ஜகாத் கொடுக்காதவர்                d) b & c

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

16  மிக்க மேன்மையான சமுகத்தாரின் பண்புகள்

        a) நன்மையை ஏவுதல்                  b) தீமையை தடுத்தல்

        c) அல்லாஹ்வை விசுவாசித்தல்                d) a & b

        e)  a & b &c

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)


17 முஸ்லிம்கள் சகோதரர்கள் ஆனது

a) அல்லாஹ்வின் பேரருளால்  b) முஹம்மது நபியின் கட்டளையால்

c) நன்மையை நாடி             d) அனைத்தும்

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

18  “அல்லாஹ்வே எங்களுக்கு போதுமானவன்.அவனே பாதுகாவலர்களில் மிக்க மேலானவன்இது இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது

        a) சரி                   b) தவறு

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)


19  அறிவுடையோர் வானங்கள், பூமி பற்றி சிந்திப்பது

        a) நின்ற நிலையில்                             b) இருப்பில்

        c) விலாப்புறங்களில் சாய்ந்த நிலையில்         d) அனைத்தும்

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

20  நிராகரிப்போரின் வேதனையை அல்லாஹ் தாமதப்படுத்துவது

a) இவ்வுலக சுகத்திற்காக                       b) நேர்வழி காட்ட வேண்டி

c) பாவத்தை அவர்கள் அதிகப்படுத்த வேண்டி   d) அனைத்தும்

விடை          ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

0 comments:

Post a Comment

 
Top