1) விடைகளை அல்குர்ஆனின் ஸுரா 4 வசனம்
148 முதல் ஸுரா 5 வசனம் 89 வரையுள்ள இடைப்பட்ட
வசனங்களில் மட்டுமே தேடவும்.
2) மிகப்
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1) இவர்களை தவிர மற்றவர்கள்
தீய வார்த்தைகளை பகிரங்கமாக கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்
a) போர்வீரர் b)
ஹிஜ்ரத் செய்தவர்
c) அநீதி (லுள்ம்) இழைக்கப்பட்டவர் d) நபிமார்கள்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
2) அல்லாஹ்வுடனும் அவனுடைய
தூதருடனும் போர் தொடுத்து, குழப்பம் செய்பவர்களின் தண்டனை
a) கொல்லப்படல் b)
சிலுவையில் அறையப்படல்
c) மாறுகால் மாறுகை துண்டித்தல் d) நாடு கடத்தல்
e) ஏதேனும் ஒன்று
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
3) சத்தியத்தை முறித்தால் செய்ய
வேண்டிய பரிகாரம்
a) ஆறு ஏழைகளுக்கு உணவு b) ஆறு ஏழைகளுக்கு ஆடை
c) மூன்று நோன்புகள் d)
ஏதேனும் ஒன்று
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
4) குர்ஆனுக்கு சாட்சி கூறுபவர்கள்
a) அல்லாஹ் b) மலக்குகள் c) முஹம்மது நபி d) a & b
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
5) வேட்டையாடக்கூடாத நேரம்
a) 4 புனித மாதங்கள் b)
இஹ்ராமுடைய நிலையில்
c) ரமலானில் நோன்பு வைத்திருக்கும் நிலையில்
d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
6) அல்லாஹ்வை பகிரங்கமாக காண்பிக்க
வேண்டி கூறியவர்கள்
a) காபீல் , ஹாபீல் b)
ஸமூது கூட்டம்
c) பனீ குரைளா d)
மூஸா நபியின் கூட்டம்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
7) அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டு
இருக்கிறது – இதை கூறியது
a) முனாஃபிக்கள் b)
யூதர்கள்
c) மூஸா நபியின் கூட்டம் d)
இன்ஜீலையுடையவர்கள்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
8) இந்த ஜுஸ்வுவில் இதை பற்றி
கூறப்பட்டுள்ளது
a) ஒளு b)
தயம்மும் c) a & b
d) திருட்டு குற்றத்தின் தண்டனை e) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
9) இஸ்ராயீலின் மக்களில் நிராகரித்தவர்கள்
------ மற்றும் ---- ன் நாவினால் சபிக்கப்பட்டு விட்டனர்
a) அல்லாஹ் , மலக்குகள் b)
தாவூது நபி , ஈஸா நபி
c) யாகூப் நபி , ஈஸா நபி d)
அல்லாஹ் , முஹம்மது நபி
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
10) சிங்கம் ஒன்று, ஆட்டின்
ஒரு பகுதியை கடித்து தின்றுவிட்டது. ஆனால் அந்த ஆடு உயிரோடிருக்கிறது. இப்போது அந்த
ஆட்டை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து உண்ணலாம்.
a) சரி b)
தவறு
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
11) மறுமையில் -----------க்கு
பாதகமான சாட்சியாளராக ---------------- -இருப்பார்
a) முனாஃபிக்கள்,,, முஹம்மது நபி b) வேதத்தையுடையவர் ,,,, ஈஸா நபி
c) வேதத்தையுடையவர் ,,,, மூஸா நபி d) இப்லீஸ் ,,,, ஆதம்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
12) இஸ்லாம்
a) முஹம்மது நபி ஏற்படுத்திய
மார்க்கம் b) இப்ராஹிம் நபி ஏற்படுத்திய
மார்க்கம்
c) அல்லாஹ் பொருந்தி கொண்ட
மார்க்கம் d) a & c
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
13) பிரேதத்தை புதைக்கும் முறையை
மனிதனுக்கு கற்று கொடுத்தது
a) ஜிப்ரீல் b)
நாய் c)
காகம் d) மலக்குல் மவ்த்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
14) ஈஸா இப்னு மர்யம்
a) அல்லாஹ்வின் ரஸூலும் , வாக்கும் b) ஜபூர் வேதம் கொடுக்கப் பட்டவர்
c) அல்லாஹ்விலிருந்து ஓர் ஆன்மா (ரூஹ்) d) a & c
e) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
15) ”நிச்சயமாக நான் உங்களுடனேயே
இருக்கிறேன்” –இதை கூறியது யார்? யாரிடம் கூறப்பட்டது?
a) ஷைத்தான் ,,,,, காஃபிர்களிடம் b) மூஸா ,,,, இஸ்ராயீலின் மக்களிடம்
c) இஸ்ராயீல் ,,,. தன் மக்களிடம் d) அல்லாஹ் ,,,, இஸ்ராயீலின் மக்களிடம்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
16) மூஸா நபியின் கூட்டம் போரிடாமல்
தயங்கியதால் ------ ஆண்டுகள் தட்டழைக்கப் பட்டனர்
a) 70 b)
40 c) 30 d) 100
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
17) ”என்னுடைய இரட்சகனும்,உங்களுடைய
இரட்சகனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்”- இதை கூறியது
a) முஹம்மது நபி b)
மூஸா நபி c) ஈஸா நபி d) இப்ராஹிம் நபி
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
18) ”நீரும் உமது இரட்சகனும்
சென்று போர் புரியுங்கள்” - இதை கூறியது
a) மூஸா நபியின் கூட்டம் b)
மதீனாவின் முனாஃபிக்கள்
c) தாவூது நபியின் கூட்டம் d)
ஸமூது கூட்டம்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
19) ரிப்பியூன்கள் / ரப்பியூன்கள்
என்பவர்கள்
a) ஹவாரியூன்களை பின்பற்றுவோர் b) ரிபா (வட்டி) தொழில் செய்வோர்
c) தவ்ராத்தை கொண்டு தீர்ப்பளிப்போர் d) ரிப்பன் தொழில் செய்வோர்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
20) தாவூது நபிக்கு கொடுக்கப்
பட்டது
a) ஜின்களை கட்டுப் படுத்தும் ஆற்றல் b) ஜபூர் வேதம்
c) பிராணிகளின் பேச்சை கேட்கும் சக்தி d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
0 comments:
Post a Comment