16 முஹர்ரம் 1434 ஹி (அ) 30 நவம்பர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்….
இடம்             : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு     : கடினமான நேரங்களில் மீட்சி பெறுவது எப்படி ?.
இமாம்      :  ஹுஸைன் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷெய்க்.

இமாம் அவர்கள் கடினமான நேரங்களில் மீட்சி பெறுவது எப்படி ? எனும் தலைப்பில் இன்றைய முஸ்லிம்களின் நிலைமை பற்றியும், அதிகமான இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்டுள்ள  சீற்றங்கள் பற்றியும் கூறினார்கள். இவ்வாறான துன்புறுத்தும் நெருக்கடிகளிலிருந்தும், இருண்ட பேராபத்துகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான வழிமுறை அல்குர்ஆனையும், அல் ஹதீதையும்  பின்பற்றுவதுதான்  எனவும் அல்குர்ஆனிலிருந்தும் அல் ஹதீதிலிருந்தும் ஆதாரங்களை முன்வைத்து தெளிவுபடுத்தினார்கள்.


      நிச்சயமாக மனிதர்கள் தனியாகவும், கூட்டாகவும் இவ்வுலகில் துன்பம், துயரம், கஷ்டம், சோதனைகள், பலதரப்பட்ட கவலைகள் போன்ற பல நிலைகளை கடந்து செல்கின்றனர். இதுதான் நிலையற்ற இவ்வுலகின் நிலைமையாகும்.
      சமகால முஸ்லிம்களின் கஷ்டமான நிலைமைகளோ எண்ணிலடங்காது. அல்லாஹ் ஒருவனிடமே முழுமையான நம்பிக்கை வைத்து முறையிடுவோம். அவனே உதவி செய்வதற்கு சக்தியுள்ளவன்.
      இன்றைய முஸ்லிம்கள் அல்குர்ஆனும் நபிவழிமுறையும் காட்டும் தெளிவான வழிமுறைகளை மறந்துள்ளனர்.
      முஸ்லிம்கள் சோதனையிலிருந்து விடுதலை பெற அல்குர்ஆன், அல்ஹதீஸ் வழிமுறையைத் தவிர வேறு வழிமுறை கிடையாது.
      முஸ்லிம்கள் தெளிவான கோட்பாடுகளையும், தூதுத்துவத்தையும் கொண்டவர்கள். அனைத்துவிடயங்களையும் முழுமையாக அல்லாஹ்விடம் பரம் சாட்டவேண்டியவர்கள்.

திடீர் அனர்த்தங்களின் போது கடைபிடிக்கவேண்டியவைகள் !
Ø  அல்லாஹ்வுடன் கலப்படமற்ற நேரடித்தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்.
Ø  எல்லாச் சந்தரப்பங்களிலும், பூரண விடுதலை என்பது அல்லாஹ்வால் மாத்திரமே முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளல்.
Ø  அதிகமாக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்.

o    6:63. (நபியே!) நீர் கூறும்: நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) 'எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?'
o    6:64. 'இதிலிருந்தும் இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே; பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே' என்று கூறுவீராக.
o    27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
இப்னு அபீ ஹாதிம் அவர்கள் கூறுகையில் :- ஒரு நாள் மாலிக் அஷ்ஜஈ அவர்கள் நபியவர்களிடம் வருகை தந்து எனது மகன் அவ்ஃப் சிறைபிடிக்கப்பட்டுள்ளான் என முறையிட்டார். அதற்கு நபியவர்கள் சிறையிலிருப்பவரிடம் '' லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹி '' என்பதை அதிகமாக கூறும்படி சொல்லச் சொன்னார்கள். தூதர் மூலம் அவ்ஃப் அவர்களுக்கு இது எத்தி வைக்கப்பட்டு அவரும் அந்த திக்ரை கூறிக் கொண்டிருந்தார்.  ஏதிரிகள் அவரை இறுக்கமாக கட்டி வைத்தார்கள். அக்.கட்டு தானாக அவிழ்ந்தது.. அவர்  அவர்களது ஒட்டகம் ஒன்றில் ஏறியவராக வீட்டை வந்தடைகிறார். வீட்டினர் அவரை வரவேற்றனர். உடன் இந்த செய்தி நபியவர்களுக்கு எத்திவைக்கப்படுகிறது. அதற்கு நபியவர்கள் '' உனது ஒட்டகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் விரும்பியதை செய்துகொள் என்றரார்கள். அதன் பின் அல்லாஹ்வின் இறைவசனம் இறங்குகிறது.
o    65:2. அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது – தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
o    65:3. அ(த்தகைய)வருக்கு- அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
      கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு இதில் படிப்பினை உள்ளது.

      ஏன் மனிதர்கள் மறந்தவர்களாக இருக்கின்றனர் ?  என சிந்திக்கவும்.

கஷ்டத்தின்போது நூஹ் நபி ?

o    21:76. இன்னும் நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.

கஷ்டத்தின்போது யூனுஸ் நபி ?

o    21:87. இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்' என்று பிரார்த்தித்தார்.
o    21:88. எனவே நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.

கஷ்டத்தின்போது அய்யூப் நபி ?

o    21:83. இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் 'நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்' என்று பிரார்த்தித் போது-
o    21:84. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.

கஷ்டத்தின்போது நபியவர்கள் காட்டிய வழிமுறை:-

o    (( அல்லாஹும்ம ரஹ்மதக அர்ஜு பலா தகில்னீ இலா நப்ஸீ தர்பத ஐன், வஅஸ்லிஹ் லீ ஷஃனீ குல்லஹு லாஇலாஹ இல்லா அன்த)) நபிமொழி
o    பொருள் :- '' யா அல்லாஹ் ! நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன். கண் இமைக்கும் நேரத்திக்குக் கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து) என் பொறுப்பில் விட்டு விடாதே ! என் விவகாரங்கள் அனைத்தையும் உனக்காக நீ சீர்படுத்துவாயாக ! வணக்கத்துக்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறில்லை. )

      எல்லா வகையான சோதனைக்குட்பட்டவர்களும் அல்லாஹ்விடமே முறையிட்டு மன்றாடவும், அவனிடமே பொறுப்புச் சாட்டவும் வேண்டும்.. அவனையன்றி வேறு யாரிடமும் ஆதரவு வைத்தால் ஏமாந்துவிடுவான். அல்லாஹ்வையன்றி வேறு யாரிடமும் ஒதுங்கினால் கானல் நீர் போன்றாகிவிடுவான்.
o    (( எவர் ஏதாவதொன்றை கட்டித் தொங்கவிடுகிறாரோ அதனிடமே அவர் பரம் சாட்டப்படுவார்)) நபிமொழி

அபூ யஸீத் அல் பிஸ்தாமீ அவர்களின் கூற்று:-
ஆதமுடைய மகனே மனிதனிடம் எதையும் வேண்டாதே !
                   என்றும் வாசல்கள் மூடப்படாதவனிடமே வேண்டுவீராக !
அல்லாஹ் அவனிடம் கேட்காவிடின் கோபிக்கிறான்.
                    மனிதனோ அவனிடம் கேடக்கும்போது கோபிக்கிறான்.

      எனவே ஆட்சியாளர்கள், ஆளப்படுபவர்கள் அனைவரும் சுயபரிசோதனை செய்து  அல்லாஹ் அல்லாத தொடர்புகளை அறுத்து, அல்லாஹ்வின் பால் மீண்டு, அல்லாஹ்விடம் நேரடித்தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
o    ((ஒரு மனிதர்  நபியவர்களிடம்  வருகை தந்து “யாரஸுலல்லாஹ் ! நான் யாரிடம் பிரார்த்திக்க வேண்டும்?” என வினவியபோது '' உனக்கு தீங்கு ஏற்படும் போது அதனை நீக்குவதற்கு சக்தியுள்ளவனாக, அழிந்து போன உனது நிலத்தை மீட்டிக் கேட்கும்போது மீட்டித் தருபவனான, வறட்சியிலிருந்து மீட்சி கேட்கும்போது முளைக்கச் செய்பவனான  அல்லாஹ்விடமே வேண்டுவீராக!” என  பதிலளித்தார்கள். ))

உபைத் இப்னு அபூஸாலிஹ் அவர்கள் கூறுகையில்-- ஒருநான் தாவூஸ் அவர்கள் என்னை நோய் விசாரிக்க வந்தபோது அவரிடம் நான எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பீராக ! என்றதும், அவர் நீ உனக்காக பிரார்த்திப்பீராக ! நிச்சயமாக சங்கடத்துக்குள்ளானவன் அல்லாஹ்விடம் வேண்டும் போது, அவன் விடையளிப்பான் எனக் கூறினார்கள்.
o    2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக.

ஹாபிழ் இப்னு அஸாகிர் அவர்கள் ஒரு மனிதனைப் பற்றிக் கூறுகையில் '' அம்மனிதர் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது இடையில் ஒரு கயவனால் கைதியாக்கப்பட்டிருந்த வேளையில் அம்மனிதர் தொழுகைக்காக அனுமதி கேட்டு தொழுகையில்      (( 27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.))  என்ற வசனத்தை ஓதியதும் அல்லாஹ்வின் உதவி கிடைத்து பாதுகாக்கப்பட்ட வரலாறு படிப்பினைக்குரியதாகும். ''
ஒருபோதும் அல்லாஹ்வுடைய அருளில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். 
o    29:65. மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.
o    12:87. 'என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்' என்றும் கூறினார்.
      எதிரிகளிடம் வெற்றிபெற, கவலைகள் நீங்க, கஷ்டங்களிலிருந்து விடுதலைபெற இஸ்லாம் அனுமதித்துள்ள அனைத்துவிதமான முயற்சிகளையும் செய்யவும்.

o    8:60. அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
o    (( அடியார்களே நீங்கள் அனுமதிக்கப்ட்டவைகள் மூலம் வைத்தியம் செய்யுங்கள். ஹராமான தடுக்கப்பட்டவைகளின் மூலம் வைத்தியம் செய்வதை தவிர்ந்துகொள்ளுங்கள்.)) நபிமொழி
      இஸ்லாமிய உம்மாவின் ஈமானிய உறுதி வலுவடையும்பொழுது அனைத்துக்குமான தீர்வை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.
      முஃமின் பிரார்த்தனையில் என்றும் சடைவடைய மாட்டான். சடைவடையக் கூடாது. இதில் உறுதியாக இருப்பது அவன் அல்லாஹ்வுடைய அடியான் என்பதை தெளிவுபடுத்துகிறது.
யா அல்லாஹ் ! எங்களது கஷ்டங்களை நீக்கி எம்மை உனது பொருத்தத்துக்குரியவர்களாக ஆக்கியருள்புரிவாயாக !

0 comments:

Post a Comment

 
Top