1) விடைகளை அல்குர்ஆனின்  ஸுரா 4 வசனம் 24 முதல் ஸுரா 4 வசனம் 147 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

2)  மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
---------------------------------------------------------------------------------------------------------------------

1)  மணமகன் கொடுக்கும் மஹர்
a) முஸ்தஹப் b) சுன்னத் c) கட்டாய கடமை d) தேவையில்லை
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)


2)  விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தால்______ கிடைக்கும்
a) அல்லாஹ்வின் கோபம் b) அல்லாஹ்வின் சாபம்
c) நிரந்தர நரகம் d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

3)  ஆராய்ந்துணர , சிந்திக்க (ய ததப்பர்)வேண்டிய விசயம்
a) குர்ஆன் b) கடல் வாழ் உயிரினம் c) மழை d) கரு வளர்ச்சி
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

4)  முஹம்மது நபியை ----- ஆக ஏற்று கொள்ளாத வரை முழுமையான விசுவாசியாக முடியாது
a) நீதிபதி b) அதிபதி c) இமாம் d) படை தலைவர்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

5)  ”ராயினா“ என கூறியது
a) கிருத்தவர்கள் b) யூதர்கள்
c) முனாஃபிக்கள் d) காஃபிர்கள்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

6)  அல்லாஹ் உங்களுக்கு இலேசானதை நாடுகிறான். மனிதன் ------ஆக படைக்கப்பட்டுள்ளான்
a) புத்திசாலி b) பலவீனன்
c) ஆத்திரகாரன் d) விவேகமற்றவன்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

7)  ஷைத்தானின் சூழ்ச்சி
a) மனிதனின் இரத்த நாளங்களில் உள்ளது b) இரவில் அதிகம்
c) பலவீன (லயீஃப்) மானது d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

8)  முனாஃபிக் களின் பண்புகள்
a) தொழுகையில் சோம்பேறித்தனம்
b) மனிதர்களுக்கு காண்பிக்க வணக்கம் செய்தல்
c) குறைந்த அளவு அல்லாஹ்வை நினைவுகூரல்
d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

9)  பெண்கள் தவறு செய்தால் திருத்த வேண்டிய வழிமுறை
a) நல்லுபதேசம் பிறகு அடித்தல் பிறகு படுக்கையிலிருந்து விலக்கல்
b) நல்லுபதேசம் பிறகு படுக்கையிலிருந்து விலக்கல் பிறகு செலவு தொகையை குறைத்தல்
c) நல்லுபதேசம் பிறகு செலவு தொகையை குறைத்தல் பிறகு படுக்கையிலிருந்து விலக்கல்
d) நல்லுபதேசம் பிறகு படுக்கையிலிருந்து விலக்கல் பிறகு அடித்தல்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

10)  அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா?-இது யாருடைய கூற்று
a) அல்லாஹ் b) முஹம்மது நபி c) மலக்குகள் d) விசுவாசிகள்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

11)  நரக வேதனையை தொடர்ந்து அனுபவிக்க வேண்டி
a) மலக்குகள் நெருப்பை அணையவிடாமல் பாதுகாப்பர்
b) தோல்கள் கருகாமல் செய்யப்படும்
c) நெருப்பு சங்கிலியால் கட்டப்படுவர்
d) தோல்கள் கருகும்போது புது தோல் மாற்றப்படும்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

12)  முனாஃபிக்கள் நரகத்தின் --------ல் இருப்பர்
a) மேல் தளம் b) நடு தளம் c) அடித் தளம் d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

13)  அல்லஹ்வின் சிருஷ்டிக (ளின் கோலங்க) ளை அவர்கள் மாற்றிவிடுவர்- யாருடைய கூற்று
a) அல்லாஹ் b) முஹம்மது நபி c) மலக்குகள் d) ஷைத்தான்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

14)  ”தயம்மும்”  செய்ய தடவ வேண்டிய உறுப்புகள்
a) மணிக்கட்டு,வாய்,நாசி,முகம்,கைகள்,தலை,கால்கள்
b) மணிக்கட்டு,முகம்,கைகள்,தலை,கால்கள்
c) முகம்,கைகள்,தலை
d) முகம்,கைகள்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

15)  அமானிதங்களை திரும்ப ஒப்படைப்பதும், ------ம் அல்லாஹ்வின் கட்டளைகள்
a) நீதமாக தீர்ப்பளிப்பது b) தேவையுடையோருக்கு உதவுவது
c) இரவு தொழுகை d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

16)  அல்லாஹ்வை நிராகரித்து தூதருக்கு மாறு செய்வோர் மறுமையில் இவ்வாறு நினைப்பர்
a) நாம் தூசியாக்கப்பட்டிருக்க கூடாதா?
b) நாம் மிருகமாக இருந்திருக்க கூடாதா?
c) நாம் பூமியோடு சமமாக்கப்பட்டிருக்க கூடாதா?
d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

17)  பெரும் பாவங்களில் இருந்து நாம் விலகிக் கொண்டால்
a) மோட்சம் கிடைக்கும் b) வாழ்வாதாரம் பெருகும்
c) சிறிய தீமைகளை அல்லாஹ் போக்கி விடுவான்
d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

18)  ஸலாமுக்கு பதில் சொல்லும் முறை
a) அதே போன்று b) அதை விட கூடுதலாக
c) அதை விட குறைவாக d) a & b
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

19) நாம் கீழ்படிய வேண்டியவர்கள்
a) அல்லாஹ் மற்றும் ரஸுல் மட்டும்
b) அல்லாஹ் மற்றும் ரஸுல் மற்றும் அதிகாரமுடையோர்
c) அல்லாஹ் மற்றும் ரஸுல் மற்றும் மார்க்க பற்றுள்ள ஆலிம்
d) அல்லாஹ் மற்றும் ரஸுல் மற்றும் அவ்லியாகள்
விடை ஸுரா எண்(கள்)   வசன எண்(கள்)

20)  மற்றவரை நன்மை செய்ய வைப்பதால்
a) நம் பாவம் மன்னிக்கப் படும் b) நாம் வெற்றியாளர்கள்
c) a & b d) நமக்கு நன்மையில் பங்கு உண்டு

2 comments:

 
Top