Ø             விடைகளை அல்குர்ஆன் 2 ; 01 முதல் 2 ; 141 முடிய உள்ள வசனங்களில் மட்டுமே தேட வேண்டும்.
Ø            விடை கண்டுபிடித்த ஸுரா , வசன எண்(கள்) எழுத வேண்டும்.

Ø    மிகப் பொருத்தமான ஒரு விடையை தேர்ந்தெடுக்கவும்.
--------------------------------------------------------

1) சில வார்த்தைகளைக் (கட்டளைகளை) கொண்டு சோதிக்கப்பட்டதாக கூறப்படும் நபி யார்?
A) நூஹ் நபி B)  ஆதம் நபி
C)  இப்ராஹிம் நபி D) மூஸா நபி
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-


2) எக்கூட்டத்தாரின் மீது இறைவனின் கோபப்பார்வை இறங்கியது?
A) கிருத்தவர்கள் B)  யூதர்கள்
C)  ரோமானியர்கள் D) பாரசீகர்கள்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

3) எந்நபியின் சமூகத்தினர் மாட்டின் மூலம் பரிகாரம் செய்யப்பட்டனர்?
A) லூத் நபி B)  ஹூத் நபி
C)  நூஹ் நபி D) மூஸா நபி
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

4) மூஸா நபிக்கு வாக்களிக்கப்பட்ட இரவுகள்?
A) 20 B)  40
C)  30 D) 70
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

5) மூஸா நபி எந்த சமூகத்திற்கு நபியாக அனுப்பப் பட்டனர்?
A) ஆது B)  பனூ இஸ்ராயீல்
C)  ஸமூத் D) கிருத்தவர்கள்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
6) ஹாரூத், மாரூத் இருந்த நகரம்
A)  பலஸ்தீன் B)  மதீனா முனவ்வரா
C)  பாபிலோன் D)  அபிசீனியா
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

7) வானவர்களில் எவரை யூதர்கள் விரோதியாக கருதுகின்றனர்?
A) முன்கர் B)  மாலிக்
C)  ரிள்வான் D) ஜிப்ரீல்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

8) அதிகமாக தொழுகையோடு சேர்த்து கூறப்படும் நற்கிரிகை எது?
A) ஹஜ் B)  ஸகாத்
C)  நோன்பு D) ஜிஹாத்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

9) ஸுரா பகராவில் ஆரம்பமாகக் கூறப்படும் கூட்டத்தினர் யாவர்?
A) காபிர்கள் B)  பயபக்தியுடையவர்கள்
C)  முனாபிக்கள் D) முஷ்ரிக்கள்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

10) இறைவன் உள்ளத்தை ---------- க்கு ஒப்பிடுகிறான்
A) மலை B)  நெருப்பு
C)  கல் D) முட்கள்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

11) நபிமார்களை அதிகம் கொலை செய்த சமூகத்தினர்?
A) யூதர்கள் B)  கிருத்தவர்கள்
C)  ஸபஃவாசிகள் D) ஜாஹிலிய்யா மக்கள்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

12) ”அவர்கள் விசுவாசிகளை சந்தித்தால் நாங்களும் விசுவாசம் கொண்டோம் என்பர். ஷைத்தான்களுடன் சேர்ந்தால் நாங்கள் உங்களோடு உள்ளோம் என்பர்” – இறைவன் வர்ணிக்கும் இக்கூட்டம் யாவர்?
A) முஸ்லிம்கள் B)  முஷ்ரிக்கள்
C)  முனாபிக்கள் (நயவஞ்சகர்கள்) D) காபிர்கள்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

13) இப்ராஹீம் நபி தம் புதல்வர்களுக்கு செய்த உபதேசம்
A) முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம் B)  தொழுகைகளை நிலை நிறுத்தி தர்மமும் செய்யுங்கள்
C)  இதுதான் நேர்வழி. இதனை ஒருபோதும் விட்டு விடாதீர் D) ஏதுமில்லை
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

14) தொழுகையையும் ----------- ஐயும் கொண்டு உதவி தேடுங்கள்?
A) ஸகாத் B)  பொறுமை
C)  நற்குணம் D) நல்லமல்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

15) யூதர்கள் எதன் மீது அதிகம் ஆசைப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான்?
A) செல்வம் B)  பெண்
C)  ஆட்சி D) உலக வாழ்க்கை
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்



0 comments:

Post a Comment

 
Top