1) விடைகளை அல்குர்ஆனின் 35, 36, 37 வது (பாதிர் ,யாஸீன், அஸ்ஸாப்பாத்) ஸுராக்களில் மட்டுமே தேடவும்

2)  மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

3) விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்),வசன எண்(கள்) ஐ குறிப்பிடவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


1) சூரியனும் , சந்திரனும்

        a) நிலையாக உள்ளன.
        b) பறந்து செல்கின்றன.
        c) வட்டத்துக்குள் நீந்தி செல்கின்றன.
        d) நேர்கோட்டில் செல்கின்றன.

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-

               
2) இல்யாஸ் நபியின் கூட்டத்தினர் வணங்கிய விக்கிரகத்தின் பெயர்

        a) லாத்                        b) பஅல்       
        c) யஊத்                        d) மனாத்

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-


3) உலகின் எல்லா சமுதாயத்தவருக்கும்  அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர்கள் வந்துள்ளனர்.

a)   சரி                         b) தவறு

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-


4) அல்லாஹ் ஒரு ஊருக்கு இரு தூதர்களை அனுப்பினான். மக்கள் அவர்களை பொய்யாக்கியபோது அவ்விருவரையும் -----------ஐ கொண்டு வலுப்படுத்தினான்.

        a) வேதம்                               b) ஜிப்ரில்
        c) மழை                                d) மூன்றாவது தூதர்

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-


5) பூமிக்கு சமீபமாக உள்ள வானம் ----------ஆல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

        a) மலக்குகள்                   b) நட்சத்திரங்கள்

        c) கோள்கள்                    d) சந்திரன்

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-


6) என்றுமே நஷ்டமடையாத வியாபாரத்தை ஆதரவு வைப்பவர்கள் யார் ?

a)   அல்லாஹ்வின் வேதத்தை ஓதுபவர்
                b) தொழுகையை நிறைவேற்றுபவர்
              c) அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து செலவு செய்பவர்
               d) அனைத்தும் (a&b&c)

விடை-                  ஸுரா எண்-           வசன எண்-


7) “என் இரட்சகன் என்னை மன்னித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கி விட்டான்” இது யாருடைய கூற்று ?

        a) இப்ராஹிம் நபி
        b) நூஹ் நபி
        c) நிராகரிப்போரால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்
        d) இஸ்மாயில் நபி

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-

8) இப்ராஹீம் நபி “-------------ஐ ஒரு பார்வை பார்த்தார். நான் நோயுற்றிருக்கிறேன்” என்றார்.

        a) பெரிய விக்கிரகம்            b) தந்தை      
        c) சூரியன்                              d) நட்சத்திரம்

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-


9) லூத் நபி,அவரது மனைவி மற்றும் மகள்கள் அனைவரும் வேதனையிலிருந்து தப்பினர்.

a)   சரி                         b) தவறு

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-

10) “இன்ஷா அல்லாஹ் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் ஒருவராக காண்பீர்கள்” இது யாருடைய கூற்று ?

a) இப்ராஹிம் நபி
                b) லூத் நபி
                c) இஸ்ஹாக் நபி
                d) இஸ்மாயில் நபி

விடை-                  ஸுரா எண்-           வசன எண்-



11) ஸக்கூம் (நரக கள்ளிமரம்) ன் ----------- ஷைத்தானின் தலைகளை போன்றிருக்கும்.

        a) பழம்                         b) கிளை
        c) இலை                        d) வேர்

விடை-                  ஸுரா எண்-           வசன எண்-


12) “ஜுபுரு” என்றால் என்ன ?

 a)   சுவன மரம்
                b) சுவன கட்டில்
               c) தூதர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆகமங்கள்
               d) ஒரு ஊரின் பெயர்

விடை-                  ஸுரா எண்-           வசன எண்-

13) மலக்குகளின் இறக்கைகளின் எண்ணிக்கை

        a) இரண்டிரண்டு
        b) மும்மூன்று
        c) நன்நான்கு
        d) அனைத்தும் (a&b&c)

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-


14) யூனுஸ் நபி ---------- நபர்களுக்கு தூதராக அனுப்பப்பட்டார்.

        a) 10000
        b) 100  
        c) 50000
        d) 100000 அல்லது அதற்கும் அதிகம்

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-


15) சுவனத்தின் (மது) பானத்தின் நிறம்

a)   பச்சை     
              b) சிவப்பு      
              c) வெண்மை  
              d) கருப்பு

விடை-                 ஸுரா எண்-            வசன எண்-


0 comments:

Post a Comment

 
Top