1) விடைகளை அல்குர்ஆனின் 38, 39, 40வது (ஸாத், அல்ஜுமர், அல்முஃமின்) ஸுராக்களில் மட்டுமே தேடவும்

2)  மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

3) விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்),வசன எண்(கள்) ஐ குறிப்பிடவும்.
---------------------------------------------------------------------------------------------------------------
1) அல்லாஹ் , தாவூது நபிக்கு எதை வசப்படுத்தி கொடுத்தான்?

              a) மலை
              b) பறவைகள்
              c) ஷைத்தான்
              d) a & b

விடை-                 ஸுரா எண்-             வசன எண்-


             
2) இப்லீஸ் --------------------- லிருந்து படைக்கப்பட்டவன்.

       a) நெருப்பு                 
       b) ஒளி
       c) மண்             
       d) காற்று

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


3) நித்திரையின் போது உயிர் அல்லாஹ்வால் கைப்பற்றப்படுகிறது.

          a) சரி               
   b) தவறு

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


4) நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது ---------------- ஐ படைப்பதை விட மிகப் பெரியதாகும்.

              a) மலக்குகள்       
              b) மலைகள்
              c) கடல்      
              d) மனிதன்

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


5) மாலை நேரத்தில் ஸுலைமான் நபியிடம் என்ன கொண்டுவரப்பட்டது?

              a) மலக்குகள்       
              b) ஜின்கள்
              c) குதிரைகள் 
              d) ஹூத்ஹூத் பறவை

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


6) வானம் மற்றும் பூமியை படைத்தது அல்லாஹ்தான் என குரைஷி காபிர்கள் நம்பினர்.

        a) சரி              
   b) தவறு

விடை-               ஸுரா எண்-        வசன எண்-


7) மறுமையில் பூமி தன் இரட்சகனின் ----------- ஐ கொண்டு பிரகாசித்து விடும்.குறிப்பேடு வைக்கப்பட்டுவிடும்.

              a) அருள்    
              b) கோபம்
              c) கட்டளை         
              d) நூர் (ஒளி)

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


8) ஹாமானை மாளிகை கட்டும்படி ஏவியது யார்?

       a) மூஸா நபி              
       b) பிர்அவ்ன்  
       c) ஸுலைமான் நபி        
       d) அய்யூப் நபி

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


9) உலகத்திற்கு அனுப்பப்பட்ட எல்லா தூதர்களின் வரலாறும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.

  a) சரி               
  b) தவறு

விடை-              ஸுரா எண்-          வசன எண்-


10 ) “அல்யஸஉ” என்பது ஒரு -------------------  பெயர்.

       a)  நல்லடியாரின்                 
       b)  ஊரின்
                      c)  மலக்கின்
                      d)  வேதத்தின்

விடை-               ஸுரா எண்-        வசன எண்-


11) “உம்முடைய காலால் பூமியில் அடியும்” என யாருக்கு கூறப்பட்டது?

      a) ஹாஜர்                  
                      b) அய்யூப் நபி
                      c) இஸ்மாயில் நபி  
                      d) ஜிப்ரீல்

விடை-               ஸுரா எண்-        வசன எண்-


12) எங்கள் இரட்சகனே ! நீ ------------------ எங்களை மரணமடையச் செய்தாய். -------------- எங்களை உயிர்பித்தாய்.

                     a) ஒருமுறை ….., இருமுறை              
                      b) இருமுறை ….., ஒருமுறை
                      c) இருமுறை ….., இருமுறை              
     d) பலமுறை ….., ஒருமுறை

விடை-               ஸுரா எண்-        வசன எண்-



13) அல்லாஹ் மனிதனை -------------- இருள்களில் (தாயின் வயிற்றில்) படைக்கிறான்.

       a) இரண்டு   
       b) மூன்று
       c) நான்கு           
       d) பத்து

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


14) தாவூது நபியிடம் வந்த இரு வழக்காளிகளில் ஒருவருக்கு ----------- பெண் ஆடுகளும் மற்றவருக்கு ------------- பெண் ஆடுகளும் இருந்ததாக கூறினர்.

         a) 50……, 50    
       b) 60……, 40    
       c) 90 ……., 10         
       d) 99 ……, 1

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


15) அல் குர்ஆனின் 38 வது , 39 வது, 40 வது ஸூராக்களின் முதல் வசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை எழுதவும்.

0 comments:

Post a Comment

 
Top