17 துல்ஹஜ் 1433 ஹி (அ) 02 நவம்பர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்..
இடம் : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு : பேராபத்துக்களும் நோய்களும் இறைவிதிப்படியே ! 
இமாம் :  அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி.
இமாம் அவர்கள் பேராபத்துக்களும் நோய்களும் இறைவிதிப்படியே ! எனும் தலைப்பில் நிச்சயமாக மனிதர்களுக்கு ஏற்படும்  ஒவ்வொரு நிகழ்வுகளும் இறைவிதிப்படியே நடைபெறுகின்றன என்பதை ஆணித்தரமாக எடுத்துக்கூறியதுடன்,இணைவைப்பாளர்களின் அனுகுமுறைகளை எச்சரிக்கை செய்தார்கள். மேலும் இணைவைப்பாளர்களது கோட்பாடுகளான நல்லசகுனம் பார்த்தல், கெட்டசகுனம் பார்த்தல், ''தொற்றுநோய்'' போன்ற தவறான கொள்கைகளை எடுத்துக்கூறி இவைகளை இஸ்லாம் முற்று முழுதாக ஒழித்துகட்டியுள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினார்கள். எனவே அனைத்து விடயங்களிலும் அல்லாஹ்வின் மீதே பரம் சாட்டவேண்டும் என உபதேசித்தார்கள்.


 முஸ்லிம்களே ! உங்களது அனைத்து கருமங்களையும் அல்லாஹ்விடம் பரம்சாட்டி அவன் மீதே முழுமையான நம்பிக்கை கொள்ளுங்கள். எவர் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறாரோ அல்லாஹ் அவனுக்குப் போதுமானவன். அதன் மூலம் சுவர்க்கத்தையும் அவனது திருப்பொருத்தத்தையும் பெற்றுக்கொள்வார்.
இஸ்லாம் அனுதித்துள்ள காரணிகளைப் பயன்படுத்தி உங்களது வேலைகளைச் செய்து கொள்ளுங்கள்.
எவர் எல்லா விடயங்களிலும் மார்க்கத்தை நடைமுறைப்படுத்துகிராரோ அவர் வெற்றியாளர்களில் உள்ளவராவார். ஏவர் அல்லாஹவின் வேதமான அல்குர்ஆனையும் தூதரின் வழிமுறைகளையும் மறுக்கிராரோ அவர் நஷ்டமடைந்தவர்ளில் உள்ளவராவார்.
அடியார்களே ! நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் பூமிகள் அனைத்தையும் படைப்பதற்க்கு ஐம்பதாயிரம் வருங்களுக்கு முன்பே அனைத்து விடயங்களையும் தீர்ப்பாக்கி நிர்ணயம் செய்து எழுதி வைத்துள்ளான்.
o    (( அல்லாஹ் , வானங்கள், பூமிகள் படைக்கப்படுவதற்க்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே ஏற்பாடுகளை நிர்ணயம் செய்து வைத்துள்ளான்.))நபிமொழி நூல் -முஸ்லிம்,திர்மிதி-அறிவிப்பாளர்-அப்துல்லாஹ் இப்னு அமர் ரலியல்லாஹு அன்ஹு
அல்லாஹ் நாடியதை செய்கிறான்.  முழுமையான சக்தி, நிறைவேற்றும் அதிகாரம், பெரிய ஞானம், அனைத்து அறிவியல், பொதுவான் அருள், படைக்கப்பட்டவைகள் அனைத்தும் அவனுக்கே உரியது. அனைத்து விடயங்களும் அவனிடமே மீளக் கூடியது.
o    21:23. அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.
அல்லாஹ் இவ்வுலகை நன்மைகள், தீமைகள் உள்ளதாக உருவாக்கி இவைகள் அல்லாஹ்வுடைய விதிப்படி அவன் ஏற்படுத்தியுள்ள காலம் வரை நடைபெற்றுக்கொண்டே இருக்கும்படி செய்துள்ளான்
வாழ்க்கை– மரணம், அன்பு– வெறுப்பு, நன்மை– தீமை, மகிழ்ச்சி- பெரும்மகிழ்ச்சி– விசனம்- கவலைகள், ஆரோக்கியம்- நோய், ஆரோக்கியம்- சோதனை, வழிப்படுதல்- மாறுசெய்தல், சோதனை- விடிவு, கஷ்டம்- இலகு, பூரணம்-குறைவு, இயலாமை– புத்திக்கூர்மை இவைகள் அனைத்தையும் உருவாக்கியுள்ளான். எனவே இப்பிரபஞ்சத்தைப்படைத்தவன் வல்லமை மிக்கவன் அனைத்துக் குறைகளை விட்டும் தூய்மையானவன், முழுமையானவன் என்பதை அறிந்து  அவனை மாத்திரமே வணங்கவேண்டும். அவனுக்கு இணைவைப்பதை முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். இம்மை மறுமை நன்மையான விடயங்கள் அனைத்தையும் அவனிடமே ஆதரவு வைக்கவேண்டும். ஈருலக கெடுதிகளை விட்டும் பாதுகாப்பை அல்லாஹ்விடமே கேட்கவேண்டும். அல்லாஹ் சக்தியுள்ளவன்.
o    10:107. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
தென்படக்கூடிய இப் பிரபஞ்சத்தில் தீமைகள் இல்லாமல் நன்மைகள்    மட்டுமே இருக்க வேண்டும் என எவர் கற்பனை செய்கிறாரோ அவர் இருக்கமுடியாத சாத்தியமற்ற ஒரு பிரபஞ்சத்தைப் பற்றி கற்பனை செய்கிறார். அவ்வாறு யாராகிலும் கற்பனை செய்வாராயின் வேறொரு பிரபஞ்சம் வேண்டும். அல்லாஹ் அனைத்துக்கும் சக்தி பெற்றவன்.
ஆனால் மறுமையில் தீங்குகள் அற்ற நிரந்தர ஆனந்தத்தையும் , நன்மைகளையும் சுவர்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.  ஆனந்தமற்ற நிரந்தர வேதனைகளையும், துன்பங்களையும் நரகில் கண்டுகொள்ளலாம்.
எவர் சுவர்க்கத்தில் நுழைகிராரோ அவர் கவலையற்ற நிரந்தர இன்பத்திலும், எவர் நரகில் நுழைகிராரோ அவர் உலகில் சேர்த்துவைத்த மகிழ்ச்சியின் மூலம் எந்தப் பயனையும் அடையாத நிரந்தர நஷ்டவாதியாகவும் இருப்பார்.
o    (( உலகில் மிகவும் இன்பம் அனுபவித்த நரகத்துக்குரிய ஒருவரை கொண்டுவரப்பட்டு நரகில் ஒருமுறை முங்கி எடுத்து ஆதமுடைய மகனே ! உலகில் இன்பங்கள், நன்மைகளை அனுபவித்துள்ளீரா என வினவப்படும். அப்போது இல்லை அல்லாஹ்வின்மீது ஆனையாக எந்த இன்பங்களையும் காணவில்லை எனக் கூறுவார். மேலும் உலகில் மிகவும் சிரமங்களை அனுபவித்த சுவர்கத்துக்குரிய ஒருவரை கொண்டுவரப்பட்டு சுவர்கத்தில் ஒருமுறை முங்கி எடுத்து ஆதமுடைய மகனே ! உலகில் ஏதாவது துன்பங்கள் ஏதும் அனுபவித்துள்ளீரா என வினவப்படும் அப்பொழுது யா அல்லாஹ் எந்தத் துன்பங்களையோ சிரமங்களையோ நான் அனுபவிக்கவில்லை எனக்கூறுவார்.))நபிமொழி அறிவிப்பாளர்- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு-   நூல் முஸ்லிம். 
உலகில் எத்தனை துன்பங்கள் துயரங்கள் ஏற்பட்டபோதும் இஸ்லாம் - ஈமான் உடையவர்களின் இறுதி முடிவு நல்லதாகவே அமையும்.
o    (( ஆச்சரியம் !!! ஒரு முஃமினுடைய எல்லா விடையங்களும் நன்மையானதாவே உள்ளது. இது இறைவிசுவாசியைத்தவிர வேறு யாருக்கும் இல்லையே ! நன்மைகள் எதனையும் அடைந்துகொண்டால் நன்றி செலுத்துவார். அது அவருக்கு நன்மைக்குரியது. தீங்குகள் ஏதும் ஏற்பட்டால் பொறுமை கொள்வார். அதுவும் அவருக்கு நன்மைக்குரியது.)) நபிமொழி முஸ்லிம் - அறிவிப்பாளர் - ஸல்மான் ரலியல்லாஹு அன்ஹு.
அடியார்கள் நோயின் மூலம் சோதிக்கப்படுவதானது சில காரணங்களுக்காவும் இருக்கலாம் காரணமில்லாமலும் இருக்கலாம். அல்லாஹ் அவன் நாடியவர்களை சில காரணஙகளால் அல்லது காரணமில்லாமலே  குணப்படுத்துகிறான்.
o    85:15. (அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
o    85:16. தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
சோதனைக்குட்படுத்தப் பட்டவர்கள் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து பொறுமையுடன் இஸ்லாம் அனுமதித்த காரணிகளைப் பயன்படுத்தி சிகிச்சை செய்யவும்.
o    (( சிகிச்சை செய்யுங்கள். நிச்சயமாக முதுமையைத்தவிர உள்ள அனைத்துக்கும் அல்லாஹ் மருந்துகளை வைத்துள்ளான்.)) நபிமொழி அபூதாவூத் - திர்மிதி அறிவிப்பாளர் - உஸாம் இப்னு ஷரீக் ரலியல்லாஹுஅன்ஹு.
o    ((நிச்சயமாக அல்லாஹ் நோயையும் இறக்கி மருந்துகளையும் இறக்கிவைத்துள்ளான். எனவே அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதைத் தவிர்த்து அனுமதிக்கப்பட்டவைகளால் சிகிச்சை செய்யுங்கள்.)) நபிமொழி அபூதாவூத் - அறிவிப்பாளர் - அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு.

பிரார்த்தனை அனைத்து தடங்கல்களையும் இல்லாமல் செய்துவிடும். இது அனைத்து நன்மைகளையும் பெற்றுக்கொள்வதற்கான காரணியாகவும், அனைத்துக் கெடுதிகளை விட்டும் பாதுகாக்கும் கேடயமாகவும் உள்ளது.
o    40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: 'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்.
அல்லாஹ்வின் நாட்டப்படியே நோய்கள் நோயாளியிடமிருந்து ஆரோக்கியமானவர்களுக்கும் கடந்துசெல்கிறது என்பதை மனிதர்கள் அறிவார்கள்.
அறியாமைக்கால மக்களது கோட்பாடுகளாவன நிச்சயமாக நோய்கள் தானாகவே நகர்ந்து செல்கின்றது, நோயாளியிடமிருந்து நோயற்றவர்களுக்கு பற்றிக்கொள்கிறது, நோயாளிகள் மக்களுடன் கலந்து இருக்கும்போது தொற்றுநோயாக பரவுகின்றது போன்றவைகளாகும்.
அறியாமைக்கால கோட்பாடுகளை இஸ்லாம் ஒழித்துக்கட்டியது என்பதற்கு நபியவர்களின் பொன்மொழி (( தொற்றுநோய் என்பது இல்லை )) சான்றாக அமைகின்றது.
o    (( தொற்றுநோய், சகுனம் பார்த்தல், ஸபர் மாதப்பீடை என்பது ''இஸ்லாத்தில்'' இல்லை.)) நபிமொழி புகாரி முஸ்லிம் அறிவிப்பாளர் அபூஹுரைரா ரலியல்லாஹுஅன்ஹு.
சகுனம் பார்த்தலில் பலவகைகள் உள்ளன. அவைகள் அனைத்தையும்  இஸ்லாம்  முற்றுமுழுதாக ஒழுத்துக்கட்டியது.
இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிரார்கள். நாங்கள் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது ஒரு பறவை உரக்கக் கத்தியவாறு பறந்து சென்றது. உடன் இருந்த ஒருவர் நல்லது நல்லது என்று கூற உடன் இப்னு அப்பாஸ் அவர்கள் அதில் நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்பதை உணர்த்தி தவறான கோட்பாட்டை மறுத்தார்கள்.
-      நபியவர்கள் நற்சகுனம் , நல்லவார்த்தைகள் கூறப்படுவதை கேட்டு மகிழ்ச்சியுறுவார்கள். இதன் மூலம் ஒருசெயலை செய்வதை அல்லது விடுவதை உறுதி கொள்வதால் எத்தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. நிச்சயமாக அது அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்வதாகும். இது நல்லதொரு செயலாகும். ஆனால் கெட்டெண்ணம் கொள்வது தடுக்கப்பட்டதாகும்.
o    ((நபியவர்கள் தொற்றுநோய் இல்லை என்று கூறியபோது ஒரு நாட்டுப்புறத்து அரபியொருவர் யாரஸுலல்லாஹ் ! ஒட்டகத்தின் உடலில் உள்ள சிரங்கின் ஒரு புள்ளி ஏனைய ஒட்டகங்கள் அனைத்துக்கும் சிரங்கு நோயைப் பரப்புகின்றதல்லவா என்று கூறியபோது நபியவர்கள் முதலில் உள்ளதுக்கு சிரங்கை ஏற்படுத்தியது யார் ? எனக்கேட்டுவிட்டு  தொற்றுநோய், சகுனம் பார்த்தல், இஸ்லாத்தில் இல்லை. அல்லாஹ் அனைத்து ஆத்மாக்களையும் படைத்து அதன் வாழ்நாள், துரதிஷ்டங்கள், உணவு போன்றவைகளை எழுதிவைத்துள்ளான்.)) நபிமொழி அஹ்மத் - திர்மிதி அறிவிப்பாளர் இப்மஸ்ஊத் ரலியல்லாஹுஅன்ஹு.
தடுப்புக் காரணங்கள் பற்றி வரக்கூடிய நபிமொழிகள் அனைத்தும் தொற்றுநோய் பற்றி அறிவிக்கவில்லை மாறாக தீங்குகளுக்கான காரணிகளை விட்டும் தூரமாகுதல் பற்றியே அறிவிக்கிறது. ஏனெனில் மனிதன் தானாகவே நெருப்பில் விழுவதையும்;, வெள்ளத்தில் குதிப்பதையும், விஷம் குடிப்பதையும், கூரைமீது இரவைக்கழிப்பது போன்ற தீங்குவிளைவிக்கக்கூடிய அனைத்தையும்  தடுத்துள்ளது.
o    ((நோயாளி நோயற்றவரிடம் செல்லவேண்டாம்.)) நபிமொழி முஸ்லிம்
o    ((சிங்கத்தைக்கண்டு விரண்டோடுவதுபோன்று குஷ்டரோகியிடமிருந்து விரண்டோடுவீராக.)) நபிமொழி அஹ்மத், முஸ்லிம்.
o    ((கொள்ளை நோய் '' வாந்திபேதி '' உள்ள இடத்தைக் கேள்விப்பட்டால் அவ்வூருக்குச்செல்லவேண்டாம். அந்தநோய் ஏற்பட்ட ஊரிலிருப்பவர்கள் அதனைவிட்டு வெளியேறவேண்டாம்.)) நபிமொழி புகாரி.
இந்த நபிமொழிகள் மற்றும் இதுபோன்ற ஏனைய நபிமொழிகள் அனைத்தும் தொற்றுநோய் உள்ளது என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே உள்ளது. கலந்திருப்பதன் மூலம் ஆரோக்கியமானவர்கள் நோய்வாய்ப்பட காரணமாக இருக்கலாம். இவைகளனைத்தும் கெடுதிகள்,சேதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான காரணிகளாகும்.
மேலும் ஷைத்தான் மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாடி அவர்களுடைய அடிப்படை கோட்பாடுகளில் தலையிட்டு நான் அவ்வாறு செய்திருந்தால் எனக்கு இப்படி நடந்திருக்கமாட்டாதே  போன்ற வார்த்தைகள், குழப்பங்களை தடுப்பதற்கான அணைக்கட்டாகும்.
எவர் அல்லாஹ்வின்மீது முழுமையாக நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு எல்லா நிலைமைகளும் நல்லதாகவே அமையும்.
o    65:3. மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன்.
அனுமதிக்கப்பட்ட காரணிகளில் சில…
1-     தடுப்பூசி ஏற்றுதல்.
2-     தனிமையில் இருத்தல்.
3-     அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பதே முழுமையானது. 

தட்டம்மை, பெரியம்மை ஏற்பட்டவர்களுடன் கலந்திருந்தவர்களுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்பதையும் ஹாஜிகள் எந்தவித ஆபத்துக்களுமின்றி மீண்டு செல்வதையும் காண்கிறோம். பொறுமை முஃமின்களின் உடனிருக்கும் கலவையாகும்.
o    57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
o    57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
களா,கத்ர் எனும் இறையேற்பாட்டை முழுமையாக ஏற்று ஈடேற்றமடைந்தவர்களாக நம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கியருள்புரிவானாக !!! ஆமீன்!!

0 comments:

Post a Comment

 
Top