10 துல்ஹஜ் 1433 ஹி (அ) 26 அக்டோபர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்…..
இடம்             : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு     : அய்யாமுத்தஷ்ரீக் சிறப்புக்களும், சட்டங்களும். 
இமாம்      :  ஹுஸைன் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ய்க்.
இமாம் அவர்கள்  அய்யாமுத்தஷ்ரீக் சிறப்புக்களும், சட்டங்களும் என்ற தலைப்பில் யவ்முந்நஹ்ர் மற்றும் அய்யாமுத்தஷ்ரீக் நாட்கள் அதன் சிறப்புக்கள், மற்றும் அதில் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களை எடுத்துக்கூறினார்கள். நபியவர்கள் ஹஜ்ஜதுல்வதாஃவில்  செய்த உபதேசங்களில் சிலதையும்  நினைவூட்டி உலகில் பல இடங்களில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கடுமையான சிரமங்களையும் நினைவூட்டி உபதேசித்தார்கள்.

o    3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
o    4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
o    33:70. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
o    33:71. (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.

ஈதுல் அழ்ஹாவுடைய இந்நாள் அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்புகுரியதாகும். இதனுடைய மகிமைகளையும் அந்தஸ்துக்களையும் எடுத்துக்காட்டுவதற்காகவே இத்தினத்திற்க்கு அல்லாஹ் யவ்முல் ஹஜ்ஜுல் அக்பர் '' மிகப்பெரிய யாத்திரை நாள்'' என பெயர்சூட்டியுள்ளான்.
o    ((நாட்களில் மிகவும் சிறப்புக்குறியது யவ்முந்நஹ்ர் - ஹஜ் பெருநாள் தினமாகும்.)) நபிமொழி
o    22:28. தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
o    ( வணக்கங்கள் செய்வதற்க்கு மிகவும் சிறந்த நாட்கள் துல் ஹஜ்மாத பத்து நாட்களாகும். இது எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியதும் அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்புக்குரியதுமாகும். எனவே இத்தினங்களில் தஹ்லீல்,தஹ்மீத்,தக்பீர் '' லாஇலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹுஅக்பர்'' இவைகளை அதிகமாகக்கூறுங்கள்.)) நபிமொழி நூல் - முஸ்னத்.
வணக்கங்கள் செய்து அல்லாஹ்வை நெருங்குவதற்கு இந்நாளை ஒரு சிறந்த பருவமாக எடுத்து செயல்படவேண்டும்.
o    57:21. உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு. வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
இந்நாளில் அல்லாஹ்க்கு வழிப்பட்டு முஸ்லிம்கள் (அறுத்துப்பலியிடுவார்கள்) இரத்தத்தை ஓட்டுவார்கள்.
o    108:2. எனவே உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
இஸ்லாமிய வணக்கங்களினூடாக எதிர்பார்க்கபடுகின்ற உயரியநோக்கத்தை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்துகொள்வது கட்டாயமாகும்.
ஏகத்துவக் கோட்பாட்டை நடைமுறையில் உறுதிப்படுத்துவதன் மூலம் பூரணமாக அல்லாஹ்வை நேசம்கொள்வது, அடிபணிவது போன்றவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
o    6:162. நீர் கூறும்: 'மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
o    6:163. 'அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).

ஹஜ்ஜுடைய விளக்கங்கள், அன்பளிப்பின் சட்டங்கள் பற்றி அல்குர்ஆனில்,
o    22:34. இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பான் கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
o    22:35. அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.
இவைகளினூடாக அல்லாஹ் கட்டளையிடுள்ள உண்மையான வணக்க வழிமுறைகளை அடைந்துகொள்ளலாம்.
உழ்ஹிய்யா  நடைமுறையில் உள்ள மிகப்பெரிய ஞானம் அல்லாஹ்வை ஓர்மைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதாகும்.
o    22:37. (எனினும்) குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
இத்தினங்களில் ஹாஜிகள் ஹஜ்ஜுடைய வணக்கங்களை நிறைவேற்றி அல்லாஹ்வை நெருங்குகிறார்கள். இஸ்லாமிய நாடுகளில்  ஏனையவர்கள் மகிழ்ச்சியுடன் அவர்களது இருப்பிடங்களில் அறுத்துப்பலியிடுவதன் மூலம் அல்லாஹ்வை நெருங்குகிறார்கள்.
இத்தினங்களில் ஒவ்வொருவரும் அவர்களது சக்திக்குட்பட்ட வகையில் அவர்களது கடமைகளை அறிந்துகொள்ளவேண்டும்.
இஸ்லாமிய உறவுகள் பல இடங்களளில் பல இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் உட்பட்டிருப்பதால் அவர்களுடைய விடிவுக்காக அல்லாஹ்விடம் பிராரத்திப்போமாக.
உயிர், உடமை, மானம் போன்றவைகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துக்களை உணர்ந்து இது போன்ற அநியாயங்களை ஒழிப்பதற்காகவும் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் ஆட்சியாளர்கள், அறிஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
o    49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டுஇ நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 
o    முஸ்லிம்கள் ஓருடலைப்போன்றவர்கள். நபிமொழி.
o    இறைவிசுவாசிகள் ஒரு கட்டிடத்தைப்போன்றவர்கள். நபிமொழி.
ஷாம் - சிரியா, பலஸ்தீன், பர்மா போன்ற நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடிய அவலநிலை நீங்குவதற்காக இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக ! நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்.
இத்தினத்தில் இஸ்லாமிய அடிப்படை விதிகளையும், விதிமுறைகளையும் போதிக்ககூடிய நபியவர்களின் ஹஜ்ஜதுல்வதாஃ உபதேசத்தை முஸ்லிம்கள் மீட்டிப்பார்ப்பார்கள்.
இந்த உபதேசத்தைக் கேட்டு நடப்பவர்கள் இரு உலகிலும்  ஈடேற்றம் பெறுவார்கள். 
o    (( அறிந்துகொள்ளுங்கள் உங்களிடம் நான் விட்டுச் செல்லக்கூடிய அல்குர்ஆனை பின்பற்றும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள்.)) நபிமொழி
இந்த சமுகம் அல்குர்ஆனைப் பின்பற்றுவதை விட்டுவிடும் போது கண்ணியம் கௌரவம் அனைத்தையும் இழந்து கேவலமாகவும் எதிரிகளின் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய நிலையை அடையும்.
o    ((அல்குர்ஆனை ஓதி அதன்படி நடந்தால் அவன் உலகில் வழிகெட்டுப் போகாமலும் மறுமையில் துர்பாக்கிய நிலையை அடையாமல் இருப்பதையும் அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான் எனக்கூறிய இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அவர்கள் இந்த வசனங்களையும் ஓதிக்காட்டினார்கள்.
o    20:123. நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
o    20:124. 'எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும் நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்' என்று கூறினான்.)) 

பெருநாள் தினத்தை அடுத்துவரக்கூடிய மூன்று (அய்யாமுதத்தஷ்ரீக்)நாட்களும் அருள்புரியப்பட்ட தினங்களாகும்.
o    குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்;
o     (( அய்யாமுத்தஷ்ரீக் (11,12,13) தினங்கள் உண்டு பருகி அல்லாஹ்வை நினைவுகூறும் தினங்களாகும்.)) நபிமொழி.
o    ((இந்நாட்களில் நோன்பு நோற்க வேண்டாம் இது உண்டு பருகி அல்லாஹ்வை நினைவுகூறும் தினங்களாகும்.)) நபிமொழி – முஸ்னத்
இத்தினங்களில் பொதுவாக எல்லாநேரங்களிலும் அல்லாஹ்வை நினைவுகூர்வதை மார்க்கமாக்கப்பாட்டுள்ளது.
o    குறிப்பாக இத்தினங்களில் கடமையான ஐவேளைத்தொழுகைக்குப்பின்னர் 13 ஆம் நாள் அஸர் தொழுகை வரை தக்பீர் சொல்வதை மார்க்கமாக்கப்பட்டுள்ளது.
சங்கைக்குரிய நாட்களின் மகிமையுணர்ந்து நன்மையடைந்தவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக. ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top