01 ஸபர் 1434 ஹி (அ) 14 டிசம்பர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்….
இடம்       : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு     : அறிவுள்ள மக்களுக்கு ஒரு மடல்.
இமாம்      : ஹுஸைன் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷைய்க்.
இமாம் ஹுஸைன் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷைய்க் அவர்கள் அறிவுள்ள மக்களுக்கு ஒரு மடல் எனும் தலைப்பில் ஒற்றுமையின் சிறப்பையும், பிரிவு, வேற்றுமையின் துரதிஷ்டத்தையும் எடுத்துக் கூறியதுடன், சமுகப்பற்று, ஒற்றுமை இவைகள் மூலம் வெற்றியும், சீர்திருத்தமும் ஈருலகிலும் கிடைக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள். மேலும் ஆட்சியாளர்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள், சிந்தனையாளர்கள் அனைவரும் கூட்டாக சமுக ஒற்றுமைக்கும், நிலையான ஸ்திரத்தன்மைக்கும் முயற்சிக்க வேண்டியதின் அவசியத்தையும் போதனையாகக் கூறினார்கள்.
 
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே ! ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்,தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக.
o    3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
எவர் முறையாக அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவர் எல்லாவிதமான கெடுதிகளை விட்டும் பாதுகாப்புப் பெறுவார். மேலும் எல்லாவிதமான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேறுவதற்கான வழிமுறைகளையும் அடைந்துகொள்வார்.
      ஒற்றுமை அத்தியாசியத்தேவை என்பது  புத்திஜீவிகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.
      வெற்றியையும், சீர்திருத்தத்தையும் எதிர்பார்க்கும் சமுகம் ஒற்றுமையாக இருப்பது கட்டாயமாகும்.
      இஸ்லாமிய சமுக ஒற்றுமையின் அவசியத்தையும் அதற்காக நன்மையின் பால் ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தலையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.  மேலும் சமுக நலன்களை பாதுகாப்பதற்கும், சமுக சீர்சேடுகளை தவிர்ப்பதற்குமாக ஒருவருக்கொருவர் இஸ்லாமிய சகோதரத்துவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
      சம காலத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும்  எல்லாவிதமான பிரச்சினைகளுக்குமான காரணம் சமுகப்பிளவுகளும் ஒற்றுமையின்மையுமேயாகும். எனவே அல்லாஹ்வை அஞ்சி எப்படிப்பட்ட கருத்துவேற்றுமையானாலும் சமுக ஒற்றுமையின் நிமித்தம்  ஒன்றுபடவேண்டும்.  அந்த ஒற்றுமைக்கான வழிமுறையை அல்குர்ஆன் இவ்வாறு போதனை செய்கின்றது............
o    3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்.

      ஆட்சி மாற்றம் வேண்டுமென்று புயல் போன்று போராடும் இயக்கங்கள் நாட்டு மக்களுடன் இரக்கமாகவும் அன்பாகவும் நடந்து கொள்ளவேண்டும். பிரிவினைக்கான எல்லாவிதமான காரணிகளையும் தவிர்ந்து கொள்வதோடு சமுக ஒற்றுமைக்கான வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.
      வெற்றியும், ஈடேற்றமும் இஸ்லாமிய உம்மாவின் கருத்தொற்றுமையில்தான் உள்ளது.
o    11:118. உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
o    11:119. (அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்.
ஸலபுஸ்ஸாலிஹீன் எனும் முன்னோர்கள் இந்த வசனத்துக்கு விளக்கம் கூறுகையில் : கருணையாளர்கள் அவர்களுக்கு பாதகம் வருமளவுக்கு வேற்றுமைப்படமாட்டார்கள். அவ்வாறு வேற்றுமைப் பட்டால் அது பல குழுக்களாகப் பிளவுபட்டு அல்லாஹ்வுடைய அருளை ஈருலகிலும் இழக்கும் நிலையே ஏற்படும் என்கின்றனர்.
      இஸ்லாத்தில் வேற்றுமை என்பது ஒரு பிளவுக்கான அல்லது விரோதத்துக்கான காரணியாக அமையப்பெறாது.
      இஸ்லாத்தில் வேற்றுமை சமுக ஒற்றுமையைக் குழப்புவதற்காகவோ, சமுக இயக்கத்தை முடக்குவதற்காகவோ இருக்கமாட்டாது.
      இக்கட்டான நிலைமைகளில் கருத்து வேற்றுமைப்படுவதென்பது சமுக நலன்களுக்காக சமுக அபாயங்களை இல்லாமல் செய்வதற்கும், பயன்பாடுகளை சமுகத்துக்கு கிடைக்கச்செய்வதற்குமாகும். இதனால்  சமுகததில் வேற்றுமை பிளவுகள் மறைந்து ஒற்றுமையும் இரக்கமும் ஒளிரும்.
o    ((நிச்சயமாக உங்களுக்கு அல்லாஹ் மூன்று விடயங்களை பொருந்திக்கொள்வான் அவைனளில் உள்ளவைதான்..... நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடதீர்கள்.)) என்பதாகும். நபிமொழி முஸ்லிம்.
      இஸ்லாமிய நாடுகளிலே அபிவிருத்தி மற்றும் பல நன்மைகள் ஏற்படுவதென்பது சமுக நலன் கருதி கருத்துவேற்றுமைகளின் போது பல விட்டுகொடுப்பினாலாகும்.
o    ((அபிவிருத்தி மூன்று விடயங்களிலாகும். ஆதில் உள்ளதுதான்......  ஒற்றுமையாகும். )) நபிமொழி முஸ்லிம்.
      பிளவுகள், போட்டி பொறாமை, கட்சி வெறி, இணக்கமின்மை ஆகியவைகளை எச்சரிக்கின்றேன்.
o    8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
      முஸ்லிம்களின் கோட்பாடுகளிலே ஜமாஅத் எனும் ஒற்றுமை சரியானதாகவும் பிரிவு எனும் வேற்றுமை இழிவானதாகவும் வேதனை தரக்கூடியதாகும் உள்ளது.
இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் சமுகத்தில் பிளவும் வேற்றுமையும் உள்ள நேரத்தில் அதுபற்றி கூறுகையில் '' சமுகம் பிளவுபட்டால் அவர்கள் அழிந்து நாசமாகி விடுவார்கள். அவர்கள் ஒற்றுமைப்பட்டால் சீர்திருத்தம் பெற்று ஆட்சிசெய்வார்கள். நிச்சயமாக ஒற்றுமை அருளாகும். பிளவு வேதனையாகும்.''
      எகிப்து, பலஸ்தீன், தூனிஸ், லிபியா, யமன், மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்டுள்ள திடுக்கிடும் நிலைமைகளிலிருந்து மீள்ச்சிபெறுவதற்கு ஒன்றுபடுங்கள். பிரிவினையைக் கைவிடுங்கள். இஸ்லாம் காட்டும் மஷுரா எனும் ஆலோசனை, விட்டுக்கொடுத்தல் மற்றும் திறந்த மனதுடன் ஆலேசனையில் ஈடுபடல் போன்றவைகளை பின்பற்றி மீள்ச்சி பெறுங்கள்.
      பித்னா எனும் பிரச்சினையின் போது இஸ்லாம் காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் - வெற்றிபெறுவீர்கள்.
o    17:53. (நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.

      ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். பிரச்சினைகளை வளர்க்காமல் அதனை அனைக்கும் பணியை மேற்கொள்ளவேண்டும்.
      நபிமார்களைத்தவிர உள்ள மற்ற அரசர், பொறுப்பாளர் அனைவரும் அறியாமை, பேராசை, வழிதவறுதல் போன்றவைக்கு உள்ளானவர்களே !  எனவே நல்ல எண்ணத்துடன், சமுக நலன் கருதி, சிறந்த ஆலோசனை, அறிவுரைகள் வழங்குவதன் மூலம் உங்களது பிளவுகளை சுமுகமாக தீர்த்துக் கொள்ளுங்கள்.
      முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமைத்துவத்துக்கு எதிராக செயல்படுவது மிகவும் ஆபத்தானதாகும்.  இதன் மூலம் பல சீர்கேடுகளே உருவாகும்.
      உங்களுக்கு மத்தியிலே தீர்வுத்திட்டங்களாக அலகுர்ஆனும் நபியுடைய வழிகாட்டலும் இருக்கின்றது. இவைகள் மூலமாக ஈருலக ஈடேற்றத்தை அடைந்து கொள்வீர்கள்.
      இவ்விரு வழிமுறைகளையும் தவிர்த்து வேறு வழிமுறைகளைத் தேடுகின்றபோது ஷைத்தானுடைய வழிகாட்டலில் சிக்கித்தவிப்பார்கள்.
o    ((எனக்குப்பின்னால் இறைநிராகரிப்பாளர்களாக மாறி ஒருவர் இன்னொருவருடைய பிடரியை வெட்டுமளவுக்கு நீங்கள் சென்றுவிடாதீர்கள்.)) நபிமொழி முஸ்லிம்.
      சமுகத்தில் பிளவுகள் உருவாகின்றபோது ஆட்சியாளர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் அனைவருமாக சேர்ந்து இதன் அபாயத்தையும், அழிவையும் தடுப்பதற்கான எல்லாவிதமான வழிமுறைகளைக்கையாண்டு தனது கடமையை நிறைவேற்ற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.
      அல்குர்ஆன்; மற்றும் நபியுடைய வழிகாட்டல் ஆகிய இரண்டின் மீதும் ஒன்றுபடுவதை இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது.
      இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளில் உள்ளது பிறரின் கருத்தை மதித்து அதனை காது கொடுத்துக் கேட்பதாகும்.
      கருத்து முரண்பாடுகள் என்பது இஸ்லாமிய சட்டவாக்கத்தில் உள்ள ஒற்றுமை எனும் ஒன்றியத்தை எந்தவகையிலும் வீணடிக்கப்படமாட்டாது.
      வேற்றுமையின் போது எவ்வாறு கருத்தொற்றுமைப்படவேண்டும் மற்றும் விவாதங்களின் போது கடைபிடிக்கப்படவேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றிய முதலாவது நூல் இஸ்லாமிய அறிஞர்களால் எழுதப்பபட்டுள்ளது.
      கலந்துரையாடல்களை மேலாண்மை செய்கின்றபோது அதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சொல் செயல் சார்ந்த எந்த பலாத்காரமும் மற்றும் இஸ்லாம் அனுமதிக்காத சூழ்ச்சி, சதிமோசம் போன்ற கெட்டவைகள் அனைத்தும்  தீர்வுத்திட்டமாக  அமையக்கூடாது என்பதாகும்.

      நிச்சயமாக இஸ்லாமிய சமுகத்தில் பல நெருக்கடிகள் கஷ்டங்கள் ஏற்படுகின்றபோது அது பலதரப்பட்ட கருத்துக்களை உருவாக்கும். இந்த சந்தர்ப்பத்தில்  தனது மனக்கிளர்ச்சிக்கு அடிமைப்பட்டால் அது சகிப்புத்தன்மையற்ற பல கேடுகளையே ஏற்படுத்தும்.

      இந்நிலையில் கலந்துரையாடல்கள் நடைபெறும்போது மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு தனது கருத்து வெற்றியடைய வேண்டுமென்பதற்காக பல ஏச்சுக்கள் பேச்சுக்கள் மற்றும் சுலோகங்கள் எல்லாம் தரக்குறைவாக பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். 
      எனவே இதுபோன்ற கலந்துரையாடல்கள் மூலம் ஒற்றுமையை இழந்து, பிளவுகளையே உறுதிப்படுத்தி அதற்கு உரமூட்டுவதாகவே அமைந்துவிடும். இது போன்ற கலந்துரையாடல்கள் இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் கேவலமாகவே கணிக்கப்படும்.
இஸ்லாமியர்கள் அல்குர்ஆன் வழிகாட்டலை  எவ்வாறு நோக்குகிறார்கள் ?
o    3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்
      முஸ்லிம்கள் இஸ்லாமிய விழுமியங்களை கடைபிடித்தால் வேற்றுமைகள் மக்களுக்கு ஒரு சாதகமான நிலையை ஏற்படுத்தும். பிறரின் கருத்துக்களை மதித்து கலந்துரையாடலில் ஈடுபடும்பொழுது சமுகத்துக்கு பயன்மிக்க பல விடயங்களை உருவாக்கும்.
இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ((நான் ஒருவரிடம் விவாதத்தில் ஈடுபடும் போது  யா அல்லாஹ் ! அவரது நாவில் சரியானதை உதிப்பாக்குவாயாக ! என்று பிரார்த்திப்பேன்;.)) எனக் கூறுகின்றார்கள்.
      ஆனால் இன்று விவாத மேடைகளில் மாற்றுக்கருத்துடையவர்களை நிரந்தர எதிரியாக எண்ணி வாதிடுவதைக் காணலாம். 
      விவாதமேடைகளில் இஸ்லாமிய வழிமுறைகளைப்பேணி உலகத்துக்கு இஸ்லாத்தின் நற்பண்புகளை அறிமுகம் செய்யுங்கள். இஸ்லாத்துக்கு மாற்றமாக நடந்து இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய சாபத்தைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
      சொல்லிலும் செயலிலும் மென்மையைக் கடைபிடிக்கவேண்டுமென்பது இஸ்லாத்தின் மிகப்பெறிய அடிப்படைகளில் ஒன்றாகும்.
      நீதி, நேர்மை, ஒழுக்கம், மென்மை, பணிவு ஆகியவைகள் இஸ்லாதின் அடிப்படைகளில் உள்ளவைகளாகும்.
      இஸ்லாமிய ஷுரா எனும் அடிப்படையை மையமாக வைத்து கலப்படமற்ற எண்ணத்துடனும், ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடல்களை அமைத்துக் கொள்வதன் மூலம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ளவைகளை அடைந்துகொள்ளலாம்.
o    சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
      ஒற்றுமைக்கான உழைப்பின் கூலியும் அதன் அந்தஸ்தும் மிகவும் வலிமையானதாகும்.
      இஸ்லாத்தில் ஆமுல் ஜமாஆ ஒற்றுமை ஆண்டு என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். சுவர்க்கத்து வாலிபர்களின் தலைவர் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஆட்சிப்பொறுப்பை முஆவியா ரலியல்லாஹுஅன்ஹு அவர்களுக்காக விட்டுக்கொடுத்ததன் மூலம் இதற்கு ஆமுல் ஜமாஆ என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்று ஸ்திரமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
      அன்று ஸலாஹுத்தீன்  அவர்கள் தலைமையில் எகிப்து மற்றும் ஷாம் ஒன்றுபட்டதனால் பைத்துல்முகத்திஸை  ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.
      இமாதுத்தீன் தலைமையில் மூஸில் மற்றும் ஹலப் ஒன்றுபட்டது.
      நூறுத்தீன் மஹ்மூத் தலைமையில் ஷாம் தேசம் அனைத்தம் ஒன்றுபட்டது.
      வரலாறுகள் மிகவும் படிப்பினையாகவும், போதகராகவும் உள்ளது.
      நிச்சயமாக முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார,  கலாச்சார, பண்பாட்டு ரீதியாக முன்னேற்றம் பெற வேண்டுமாயின் திறந்த மனதுடனும் விட்டுக் கொடுப்புடனும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கவேண்டும்.
o    5:2.  இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்.
      இந்த நாட்டைச் சேர்ந்தவர்களே ! அல்லாஹ்வை அஞ்சி அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள அருள்களுக்கு நன்றியுடையவர்களாக இருங்கள். மேலும் இங்கு பிரிவினையை ஏற்படுத்த முனைகின்ற குழுக்களையும்  எச்சரிக்கின்றேன். 
      ஆட்சியாளர்கள்;, மற்றும் உறுப்பினர்கன், கவர்னர்கள் அனைவரும் அல்;லாஹ்வுக்கு அஞ்சி  நடந்து கொள்ளவேண்டும்.
      மக்களுக்கான உரிமைகளை கவனிக்கும் விடயத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். பொறுப்புணர்வுடன் அனைவரும் நடப்பது கட்டாயமாகும்.
o    ((தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவன் பரிபூரண விசுவாசியாக மாட்டான்.)) நபிமொழி.
      மேற்கூறப்பட்டுள்ள நபிமொழியை உணர்ந்து அதன்படி செயல்படுவதற்கும் செயல்படுத்துவதற்கும் அனைவரும் முன்வரவேண்டும்.
      ஆட்சியாளர்கள் தங்களது சுயஇலாபத்துக்காக மக்களை கூறுபோட்டு பிளவுபடுத்திவிடாமல் ஒற்றுமைப்படுத்துவதோடு நன்மையை ஏவி தீமையைத் தடுத்து  சமுகத்தை சீர்படுத்துவது தலையாய கடமையாகும்.
முஸ்லிம் சமுகத்தை விவேகமுள்ளவர்களாக்கி பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து முன்மாதிரியான சமுகமாக அல்லாஹ்  ஆக்கிவைப்பானாக.  

0 comments:

Post a Comment

 
Top