08 ஸபர் 1434 ஹி (அ) 21 டிசம்பர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்…

இடம் : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு: அல்லாஹ்வுக்கு அஞ்சுதலும் அடியானிடம் ஏற்படும் மாற்றங்களும்.
இமாம் : அலி இப்னு அப்துர்ரஹ்மான அல் ஹுதைபி.

இமாம்  அலி இப்னு அப்துர்ரஹ்மான் அல் ஹுதைபி அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுதலும், அடியானிடம் ஏற்படும் மாற்றங்களும் எனும் தலைப்பில்  அல்லாஹ்வைப்பற்றிய பயம் கட்டாயமாக இருக்கவேண்டுமென்பதை எடுத்துக்கூறி அதனுடன் சம்பத்தப்பட்ட அறபு வார்த்தைகளுக்கான வேறுபாடுகளையும் விளக்கிக்கூறியதுடன், அல்குர்ஆன் அல்ஹதீஸ் மற்றும் முன்னோர்களான ஸாலிஹீன்களின் படிப்பினைகளையும் எடுத்துக்கூறினார்கள். 



புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே ! ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக.
முஸ்லிம்களே ! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களது உள்ளத்தில் உள்ளவைகளையும் நன்கறிவான்.
o    3:5. வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
      நிச்சயமாக  உள்ளத்துடன் தொடர்பான வணக்கங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அத்துடன் அதன் கூலியும் வலிமையானதாகும். மேலும் அதன் தண்டனையும் வலிமையானதாகும்.
      உடலுறுப்புக்களால் செய்யப்படும் வணக்கங்கள் உள்ளத்துடன் தொடர்பான வணக்கங்களைத் தொடர்ந்ததாகும். இதனால்தான் '' உள்ளம் உடலுறுப்புக்களின் அரசன், ஏனைய உறுப்புக்கள் அதன் படைவீரர்களாகும்.'' என்று கூறப்படுகின்றது.
o    ((உள்ளம் உறுதியாகும் வரை ஒரு அடியானுடைய இறைவிசுவாசம் உறுதியாகமாட்டாது.)) நூல் அஹ்மத் அறிவிப்பாளர் அனஸ் ரலியல்லாஹுஅன்ஹு.
உள்ளம் நிலைபெறுவது என்பது :- அல்லாஹ்வை ஓர்மைப்படுத்துவது, சங்கைப்படுத்துவது, அன்புகொள்வது, அச்சம் கொள்வது, ஆதரவுவைப்பது, அவனுக்கு வழிப்படுவதை விரும்புதல், அவனுக்கு மாறுசெய்வதை வெறுத்தல் போன்றவைகளாகும்.
o    ((நிச்சயமாக அல்லாஹ் உங்களது உருவங்களையோ, சொத்துக்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்களது உள்ளங்களையும், வணக்கங்களையுமே பார்க்கின்றான்.)) நபிமொழி  முஸ்லிம்.
o    ஹஸன் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :- '' உனது உள்ளத்துக்கு சிகிச்சை செய்வாயாக ! அல்லாஹ் அடியார்களிடம் எதிர்பார்ப்பது அவர்களது உள்ளம் சீர்திருந்துவதையாகும்.''
      நல்லமல்கள் செய்வதற்கு மற்றும் மறுமையை விரும்புவதற்கு, கெட்ட செயல்களை வெறுப்புக்கொள்வதற்கு, உலகில் பரதேசியாக இருப்பதற்கு, கெட்ட செயல்களைவிட்டும் தன்னை தடுத்துக்கொள்வதற்கு அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம், பயம் இவைகள் காரணிகளாகும்.
அல்லாஹ்வின் மீதுள்ள பயம்
o    எல்லாவிதமான நல்லமல்கள் செய்வதற்கான உந்துசக்தியாகும்,
o    எல்லாவிதமான தீங்குகளை விட்டும் தடுப்பதற்கான தடுப்புச்சுவராகும்.
o    சுய ஆசைகளை விட்டும் தடுக்கக்கூடியதாகும்.
o    வெற்றி,சீர்திருத்தம் ஆகியவைகளின் பால் வழிகாட்டும்.
      தவ்ஹீத் எனும் ஏகத்துவக்கிளைகளில் அல்லாஹ்வுக்கான அச்சமும் ஒரு கிளையாகும்.       அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயப்படவேண்டிய விடயங்களில் பிறருக்குப் பயப்படுதல் என்பது ஷிர்க் எனும் இணைவைத்தலின் கிளைகளில் ஒரு கிளையாகும்.
o    3:175. ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.
o    5:44.  முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்.
o    2:40.  மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.
o    ((நான் அறிந்திருப்பதை நீங்கள் அறிவீர்களாயின் சிறியதாக சிரித்து அதிகமாக அழுவீர்கள்.)) என்று நபியவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் தங்களது முகத்தை மூடிக்கொண்டு அழுதார்கள். நபிமொழி புகாரி முஸ்லிம்.
அல்லாஹ்வுக்கு பயப்படுதல் என்பதின் அர்த்தம்
 ஹராமான தடுக்கப்பட்ட செயலை செய்யும் போதோ அல்லது கடமையான ஒன்றை விடும் போதோ அல்லது விரும்பத்தக்கவைகளில் பொடுபோக்காக இருக்குப் போதோ அல்லாஹ்வின் தண்டனைகளைப்பயந்து உள்ளம் திடுக்கிட்டு தடுமாற்றமடைவதாகும். மேலும் நன்மையானவைகளின் பால் விரைந்து தடுக்கப்பட்டவைகளை விட்டும் வெறுத்து ஸாலிஹான நல்லமல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசைகொள்வதாகும்.

இதுபற்றி வரக்கூடிய அனைத்து அறபு வார்த்தைகளும் பொதுவாக பொருளால் அண்மித்தவைகளாகும்.  இருப்பினும் சில சில வேறுபாடுகளும் உள்ளன.
இப்னுல் கய்யிம் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில் :-
கவ்ப்        : எனும் அச்சம் இது பொதுவாக இறைவிசுவாசிகளுக்குரியதாகும்.
கஷ்யா      : எனும் அச்சம் இது அறிஞர்களுக்குரியதாகும்.
ஹைபா     : எனும் அச்சம் இது அன்புகொள்ளக்கூடியவர்களுக்குரியதாகும்.
இஜ்லால்    :எனும் மரியாதை இது மிகவும் நெருக்கமானவர்களுக்குரியதாகும்.
கவ்ப், கஷ்யா இவையிரண்டும் அறிவின் அடிப்படையில் அல்லாஹ்வை மாத்திரம் பயப்பபடுவதாகும்.
கஷ்யா என்பது  அல்லாஹ்வுடைய பண்புகளை அறிந்து அவனுக்கு அஞ்சுவதாகும்.  இவ்வகுப்பினரைப்பற்றி அல்குர்ஆனில்......
o    35:28.  நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
o    (( அறிந்து கொள்ளுங்கள் ! நிச்சயமாக தக்வாவைக் கொண்டு மிகவும் அல்லாஹ்வைப் பயப்படக்கூடியவன் நானாகும்.)) நபிமொழி.
      அல்லாஹ்வை  முறையாக அஞ்சி இச்சைகளைக் கட்டுப்படுத்தி நன்மையின்பால் விரையக்கூடியவர்களுக்கு அல்லாஹ் பல வகையான நன்மைகளை வாக்களித்துள்ளான்.
o    55:46. தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
o    55:47. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
o    55:48. அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
அப்னான் என்பது சாறு நிறைந்த அழகிய கிளைகளைக்கொண்டதாகும்.
அதாஉ அவர்கள் கூறுகிறார்கள்- ஒவ்வொரு கிளைகளும் பல வகையான பழங்களைக்கொண்டதாகும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் ......
o    79:40. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ.
o    79:41. நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
o    52:25. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
o    52:26. 'இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
o    52:27. 'ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
o    52:28. 'நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.

அல்லாஹ்வை முறையாக அஞ்சுபவர் வெறுக்கத்தக்கவைகளை விட்டும் பாதுகாப்புப்பெறுவார். அல்லாஹ்வே அவனுக்குப்போதுமானவன். மேலும் அவனது இறுதி முடிவு அழகானதாக அமையும்.
o    இப்னு அபீஹாதிம் கூறுகையில் நபியவர்கள் கீழ்வரும் வசனத்தை ((66:6. முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும் )) ஓதியபோது உடன் சில தோழர்களுடன் ஒரு வயது முதிர்ந்தவரும் இருந்தார். அப்பொழுது அவர் நபியவர்களிடம் நரகிலுள்ள கற்கள் உலகிலுள்ள கற்கள் போன்றவையா ? என வினவியபோது  நரகிலுள்ள பாறைகளில் ஒரு பாறை உலகிலுள்ள அனைத்து மலைகளையும் விட மிகப்பெரியதாகும் என நபியவர்கள் பதிலளித்ததும் அந்தப்பெறியவர் சுயநினைவை இழந்துவிட்டார். உடன் நபியவர்கள் அவரது இதயத்தில் கைவைத்துப்பார்த்தபோது அவர் உயிருடன் இருந்தார். அப்பொழுது நபியவர்கள் அவரை அழைத்து பெரியவரே ! லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள் என்றதும் அவர் அதனைக்கூறினார். அப்பொழுது நபியவர்கள் சுவர்க்கத்தைக் கொண்டு அவருக்கு நன்மாராயம் கூறினார்கள்.  அங்கே இருந்த சில தோழர்கள் எங்களிலும் உள்ளனரா ? என வினவியபோது கீழ்வரும்   (14:14. - இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்' (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்) திருவசனத்தின் மூலம் பதிலளித்தார்கள்.
முன்னோர்களான நல்லவர்கள் அல்லாஹ்வை அஞ்சியதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்ததனால் அவர்களது செயல்கள் மற்றும் நிலைமைகள் எண்ணங்கள் அனைத்தும் அழகிய முறையில் அமைந்திருந்தது.

உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் இரவில் உலாவரும்போது ஒரு மனிதர் ஸுரதுதத்தூரை ஓதுவதைக்கேட்டு தனது கழுதையிலிருந்து இறங்கி ஒரு சுவர் ஓரமாக அமர்ந்துவிட்டார்கள். அதன் பின்னர் ஒரு மாதமாக நோய்வாய்பட்டிருந்தார்கள். ஆனால் நோய்க்கான காரணம் அறியப்படவில்லை.

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஜ்ர் தொழுகையின் ஸலாம் கூறியதன் பின்னர்  தங்களது கைகளைப் புரட்டியவாறு கூடிய சிந்தனையுடன் பார்வையை உயர்த்தியவர்களாக (( நான் அன்று நபியுடைய தோழர்களை பார்த்தது போன்று இன்று அவர்களைப்போன்ற எதனையும் நான் காணவில்லை.........)) என்றார்கள்.

      புகழுக்குரிய பயம் என்னவெனில் அது பாவத்தை விட்டும் தடுத்து நன்மைகள் செய்வதற்கு ஆர்வமூட்டக்கூடியதாகும். அளவு கடந்த பயம் அல்லாஹ்வுடைய ரஹ்மத் எனும் அருளின் மீது ஒரு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். இது பெரும் பாவங்களில் உள்ளவையாகும்.

      இப்னு ரஜப் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில் ((கட்டாயமாக பயப்படவேண்டிய அளவு என்னவெனில் : கட்டாயக்கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற விடயத்திலும், தடுக்கப்பட்டவைகளை தவிர்ந்து கொள்வேண்டும் என்ற விடயத்திலும் உள்ள பயமாகும்.

      அபூ ஹப்ஸ் அவர்கள்; (( பயம் என்பது அல்லாஹ்வுடைய சாட்டையாகும். இது வேலி தாண்டுபவர்களை நேர்வழிப்படுத்தும். மேலும் பயம் என்பது இதயத்தின் ஒளிவிளக்காகும்.)) என கூறினார்கள்.

      அபூ ஸுலைமான் அவர்கள்; ((எவருடைய உள்ளத்தில் பயம் இல்லையோ அது பாழாகிவிடும்.)) என கூறினார்கள்.

ஒரு முஸ்லிம் இரண்டு பயத்துக்கு மத்தியில் உள்ளான்.
      1-கடந்து சென்ற விடயம் அதில் அல்லாஹ் என்னசெய்யப்போகின்றான் என்ற பயம்.
      2-நடக்க இருக்கும் விடயம் அதில் அல்லாஹ் எவ்வாறு தீர்ப்பு வழங்கப்போகினறான் என்ற பயம்.

ரஜாஉ என்பது  நல் அமல்களின் மூலம் அல்லாஹ்வுடைய நற்கூலியை எதிர்பார்த்து பேராசை கொள்வதாகும்.
ரஜாஉ எனும் ஆதரவு வைத்தலின் நிபந்தனையாவது: தடுக்கப்பட்டவைகளைத்தடுத்து அல்லது பாவமன்னிப்புக்கோருவதுடன் அழகிய நல்ல செயல்களை முற்படுத்துவதாகும்.  ஆனால் மாற்றமாக கடமையானவைகளை விட்டு விட்டு ஆசைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்விடம் எதிர்பார்த்து  ஆதரவுவைப்பது என்பது அது எதிர்பார்ப்பு மட்டுமேயாகும். ஆதரவு வைப்பதாக அது அமையப்பெற மாட்டாது.  இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் ...
o    7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.   

ஆதரவு வைப்பது என்பது அழகிய நல்ல செயல்களை முற்படுத்துவதனால் மாத்திரமே முடியும்.
o    35:29. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
o    35:30. அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான்,
o    2:218. நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்; மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
ரஜாஉ எனும் ஆதரவு வைப்பது வணக்கமாகும். இதனை அல்லாஹ்விடம் மாத்திரமே எதிர்பார்கவேண்டும்.  மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களிடம் எதிர்பார்தால் அது ஷிர்க் எனும் இணைவைத்தலாகிவிடும்.
o    18:110. (நபியே!) நீர் சொல்வீராக: 'நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.'
ரஜாஉ எனும் ஆதரவு வைப்பது அல்லாஹ்வை நெருங்குவதற்கான உபகரணமாகும்.
o    (( எனது அடியான் என்னைப்பற்றி எண்ணி என்னை நினைவுகூறும்போது நான் அவனுடன் இருக்கின்றேன்.))
ரஜாஉ, மற்றும் கவ்ப் எனும் இரண்டையும் இணைத்து செயல்படுவது கட்டாயமாகும்.
இதுவே ஒரு அடியானிடம் உள்ள நிலைமைகளில் நீதமானதாகும். இவ்வாறுதான் நபிமார்களுடையவும் இறைவிசுவாசிகளுடையவும் நிலைமைகளும் இருந்தன. இது பற்றி அல்குர்ஆனில் ....
o    21:90.  நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் – இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
o    32:16. அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.
ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுடைய விசாலமான அருள்களையும், சுவர்க்கத்தின் விசாலத்தையும், நரகத்தையும், அதனுடைய வேதனைகளையும் அறிந்து கொண்டால் அவனது உள்ளம் விரிவடைந்து அல்லாஹ்வுடைய அன்பையும் கருணையையும் அடைந்து கொள்வதற்காக முயற்சிசெய்வான்.

  • 13:6. நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான்.

o    ((நிச்சயமாக மறுமையில் ஒரு மனிதனுக்கு வழங்கப்படக்கூடிய வேதனைகளில் குறைந்த வேதனையாவது இரு பாதங்களுக்கும் நெருப்புக்கட்டிகள் வைக்கப்படும் அதன் காரணமாக அவனுடைய மூளை கொதிக்கும். இதனைவிடப் பெரிய தண்டனை எதனையும் யாரும் காணமாட்டார்கள். ஆனால் நிச்சயமாக இதுதான் வேதனைகளில் மிகவும் குறைவானதாகும்.)) புகாரி, முஸ்லிம் - அறிவிப்பாளர் நுஃமான் இப்னு பஷீர் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்.
((நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் சுவர்கத்தில் மிகவும் குறைந்த தரத்தில் இருக்கக்கூடிய தரம் எது என வினவியபோது ? சுவனவாதிகள் சுவரக்கத்தில் நுழைவிக்கப்பட்டதற்க்குப்பின்னர்  ஒரு மனிதனை கொண்டுவரப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவாயாக ! என கூறப்படும் போது யா ரப் ! மனிதர்கள் அவர்களுக்குரியவைகளை எடுத்துக்கொண்டு தங்களது இடங்களுக்கு சென்றுவிட்டார்களல்லவா ?  என்பான். அப்பொழுது உலக அரசர்களில் ஒரு அரசனுக்குரியவைகள் போன்றதை கிடைக்கப்பெற்றால் அதனை நீ பொருந்திக்கொள்வாயா என கேட்கப்படும் போது ஆம் யாரப் என்பான். மீண்டும்  இது போன்று ஐந்து மடங்குகள் என்று கூறப்படும் போது எனது ரப்பே இதனை நான் பொருந்திக்கொண்டேன் என்று கூறுவான்.  அப்பொழுது இதுவும் இது போன்று பத்து மடங்குகள் உனக்கு கிடைக்கும். உனது ஆத்மா ஆசை கொள்ளக்கூடிய மற்றும் உனது கண்கள் இன்பமடையக்கூடிய அனைத்தும் உனக்கு கிடைக்கும் எனக்கூறப்படும்போது அம்மனிதன் கடவுளே ! நான் பொருந்திக்கொண்டேன் என்று கூறுவான்.)) முஸ்லிம் - அறிவிப்பாளர் முகீரா இப்னு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்.

சமகாலத்தில் மக்கள் மத்தியில்  மறதியும், வறண்ட உள்ளமும், உலக பேராசையும் அதிகரித்து விட்டதனால் அதிகமானவர்கள் மறுமையை மறந்து அல்லாஹ்வுடைய தண்டனைகளை சர்வசாதாரணமாக்கி பாவத்தில் தைரியமாக இறங்கிவிட்டார்கள்.

அல்லாஹ்வுக்கு முறையாக பயப்படுவது என்பது அவனது கடமைகளில் பொடுபோக்கின்றி முறையாக நிறைவேற்றுவதனைக் குறிக்கும். மேலும்  அடியார்களுக்கு அநியாயம் செய்தல், தீங்குசெய்தல் போன்றவைகளிலிருந்தும் தடுக்கப்பட்டவைகள் அனைத்திலிருந்தும் தன்னைக்கட்டுப்படுத்திக்கொள்வதுடன் சுவர்க்கத்தை ஆசை வைப்பதாகும்.

அல்லாஹ் எம் அனைவரையும் முறையாக அவனை அஞ்சி பயப்படக்கூடிய நல்லவர்களாக ஆக்கிவைப்பானாக !!! ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top