அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.

நாள்   : 19 முஹர்ரம் 1435 ஹி (அ) 22 நவம்பர் 2013
இடம்  : மஸ்ஜிதுந்நபவி
இமாம் : ஸலாஹ் அல்புதைர்
தலைப்பு: நபி வழிமுறையைப் பினபற்றுங்கள் நூதன செயல்களை விட்டுவிடுங்கள்.

இமாமவர்கள் “நபி வழிமுறையைப் பினபற்றுங்கள் நூதன செயல்களை விட்டுவிடுங்கள்” என்ற தலைப்பில் ஸுன்னா எனும் நபி வழிமுறையும், அதனைப்பின் பற்றுவதின் அவசியம் பற்றியும் கூறி, அதுதான் நேரான சீரான வழியாகும் என  எடுத்துரைத்ததுடன், நூதன செயல்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுமாறு ஆர்வமூட்டினார்கள். மேலும் இதுபற்றி வரக்கூடிய பல நபிமொழிகளையும் முன்னோர்களின் சான்றுகளையும் கூறினார்கள்.




இறைவிசுவாசிகள் மற்றும் ஏகத்துவ வாதிகளின் பண்பாடு ஸுன்னாவைப் பற்றிப்பிடித்து, முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதோடு மட்டுமின்றி, நூதன செயல்களையும் புராணங்களையும் களைந்தெரிவதோடு அவைகளை மறுத்து அதிலிருந்தும் அவைகளைச் சார்ந்தவர்களை விட்டும் தங்களை விடுவித்துக் கொள்வதாகும். இதே வழிமுறையிலேதான் ஸஹாபாக்களும் தாபிஈன்களும் அவர்களைத் தொடர்ந்தவர்களும் ஸுன்னாவுடைய உலமாக்களும் உடன்பட்டு ஒற்றுமையாக இருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகையில் ..
       ((நிச்சயமாக அல்லாஹ்வுடைய மிகவும் கோபத்துக்குறியதானது நூதன செயல்களாகும்.))

அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகையில் ...
       ((மனிதர்கள் அழகாக கண்டபோதும் நூதன செயல்கள் அனைத்தும் வழிகேடாகும்.))
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறுகையில் ...

       ((நபி வழிமுறையைப் பினபற்றுங்கள் நூதன செயல்களை விட்டுவிடுங்கள். இதுவே உங்களுக்கு போதுமானதாகும். நூதன செயல்கள் அனைத்தும் வழிகேடாகும். மேலும் அறிவைப் பற்றிப்பிடிக்குமாறு போதிக்கின்றேன். நூதன செயல்களையும் ஆழமாக துருவுவதைம், மனதை துன்புறுத்துவதையும் எச்சரிக்கின்றேன். மேலும் ஸுன்னாவுக்காக முதலீட்டுவதானது நூதன செயல்களில் முயற்ச்சிப்பதை விட சிறப்புக்குறியதாகும்.))

ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகையில் ...
       ((அல்லாஹ்வின் தூதருடைய தோழர்கள் இபாதத் எனும் வணக்கமாகக் கொள்ளாத எதனையும் நீங்கள் வணக்கமாக எடுத்துக் கொள்ளவேண்டாம். நிச்சயமாக முன்னையவர்கள் ஏனையவர்களுக்கு  சொல்வதற்காக எதனையும் விட்டுவைக்கவில்லை)).

ஒரு மனிதர்  உமர் இப்னு அப்துல் அஸீஸ் றஹ்மதுல்லாஹி அலைஹி  அவர்களுக்கு கத்ர் பற்றி விளக்கம் கேட்டு எழுதியபோது 
       ((அல்லாஹ்வைப் பயந்து கொள்வதையும்,  அதற்காக முயற்சிப்பதையும், நபிவழியைப் பின்பற்றுவதையும், நூதன செயல்களை விட்டுவிடுவதையும் உங்களுக்குப் உபதேசிக்கின்றேன்.)) என்று எழுதினார்கள்.

இமாம் அபூஹனீபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில்.
       ((நபி வழிமுறையையும் முன்னோர்களான நல்லவர்களின் வழிமுறைகளையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நூதன செயல்கள் அனைத்தையும் எச்சரிக்கின்றேன். அவைகள் பித்அத்தாகும்.))

இமாம் மாலிக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில்..
       ((எவர் இஸ்லாத்தில் அழகாகக் கூடியவைகளை புதிதாக உருவாக்குகின்றாறோ அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தூதுத்துவத்தில் சதிமோசம் செய்துவிட்டதாக உறுதிகொள்கின்றார். அல்லாஹ் திருமறையில் கூறுகையில் ((5:3 இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன் ))  அன்று மார்க்கமாக இல்லாத எந்த செயல்களும் இன்று மார்க்கமாக இருக்கமுடியாது என்பதாகும்.))

இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில்..    
   ((நபியவர்களுடைய கட்டளைக்கு முரண்படக்கூடிய அனைத்தும் விழுந்துவிடும். எவருடைய கருத்துக்களும் அல்லது உடன்பாடுகளும் நபியவர்களுடன் நிலைத்திருக்கக்கூடியதல்ல.))

இமாம் அஹ்மத் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில்
       ((எங்களிடத்தில் ஸுன்னா எனும் நபிவழிமுறையின் அடிப்படை என்றால் அல்லாஹ்வின் தூதருடைய தோழர்கள்  பின்பற்றியவைகளைப் பற்றிப்பிடித்து பின்பற்றுவதுடன், பித்அத் எனும் நூதன செயல்களை விட்டுவிடுவதாகும். ஏனெனில் அனைத்து நூதன செயல்களும் வழிகேடாகும்.))

இமாம் அல்அவ்ஸாஇய்யு றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில்.. 
       ((ஸுன்னா எனும் நபிவழிமுறையை அதன் வட்டத்தினுள் சுற்றிவருவதாகும்.))

இப்னு அவ்ன் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மரணவேளையில் உபதேசிக்கும் போது..
       ((அஸ்ஸுன்னா- நபிவழிமுறையைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நூதன வழிமுறைகளை எச்சரிக்கின்றேன். அஸ்ஸுன்னா நபிவழிமுறையைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நூதன வழிமுறைகளை எச்சரிக்கின்றேன்.)) என்றார்கள்.

இமாம் அல் ஆஜுர்ரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில்..
       ((அல்லாஹ்வுடைய உதவியை வேண்டியவனாக, நேரான வழியைக் கேட்டவனாக முன்னோர்களின் நல்வழிமுறையைப் பற்றிப்பிடித்து, நூதன செயல்களை விட்டு நபிவழிமுறையைப் பின்பற்றி, பித்அத்துக்களையும் வழிகெட்ட கூட்டத்தினரையும் தவிர்ந்து கொண்ட அடியானுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக !)) என்றார்கள்.

இமாம் அல்அவ்ஸாஇய்யு றஹ்மதுல்லாஹி அலைஹி  அவர்களிடம் ஒரு மனிதன் தன்னைப் பற்றி((நான் அஹ்லுஸ்ஸுன்னா எனும்  நபிவழிமுறையைப் பினபற்றக்கூடியவர்களுடனும் அமர்ந்திருப்பேன். இன்னும் சில வேளைகளில் அஹ்லுல் பித்அஃ எனும் நூதன செயல்களைப் பின்பிற்றக் கூடியவர்களுடனும் அமர்ந்திருப்பேன். என்று கூறப்பட்டபோது ஆம் அந்த மனிதன் ஹக் எனும் உண்மையையும் பாதில் எனும் வழிகேட்டையும் சமம்ப்படுத்தக்கூடியவனாகும்,என்றார்கள்.))

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹீ அன்ஹுமா அவர்கள்         
 ((3:106. அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும். என்ற அல்குர்ஆன் வசனத்துக்கு விளக்கம் கூறுகையில் ...
       இதில் முதலாவது வகுப்பினரான முகம் பிரகாசமுடையவர்கள்தான் அஹலுஸ்ஸுன்னா எனும் நபிவழிமுறையைப் பின்பற்றக் கூடியவர்களாகும். இரண்டாவது வகுப்பினரான முகம் கருத்தவர்கள்தான்  அஹ்லுல் பித்அஃ எனும் நூதன செயல்களைப்பிற்றக்கூடியவர்களாகும் )) என்றார்கள்.

ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள்    
       ((நபியவர்கள் குத்பாப் பிரசங்கம் செய்யும் போது இருகண்களும் சிவந்து விடும் சத்தம் உயர்ந்து விடும் கோபம் கடுமையாகிவிடும். அவர்கள் கூறுவார்கள் ... நிச்சயமாக பேச்சுக்களில் சிறந்தது அல்லாஹ்வுடைய பேச்சாகும். வழிகாட்டுதல்களில் சிறந்தது நபியுடைய வழிகாட்டலாகும். கருமங்களில் மிகவும் கெட்டது நூதன செயல்களாகும். நூதன செயல்கள் அனைத்தும் வழிகேடாகும். ஏன்பார்கள். )) நபிமொழி முஸ்லிம்.

முஸ்லிம்களே ! இதே வழிமுறையைப் பினபற்றுங்கள் சுவர்க்கத்தை சன்மாமனமாகப் பெற்றுக் கொள்வீர்கள்.


இன்று வழிகேடர்களின் பொய்களும், புரட்டல்களும் சமூகத்தில் தலை விரித்தாடுவதைக் காணலாம். இவர்கள் நூதன செயல்களையும். செய்திகளையும். ஷிர்கிய்யாத் எனும் இணைவைத்தல்களையும் பாமர மக்களுக்கு மத்தியில் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாயிலாகவும், இன்னும் பல யுக்திகளைக் கையாண்டும், மக்களின் வறுமையையும் அறிவீனத்தையும்; ஏகத்துவவாதிகளின் மறதியீனத்தையும் காரணமாக வைத்துக் கொண்டு முன்னேறுவதைக் காணலாம்.

இவர்கள் தான் ஸுன்னா எனும் நபிவழிமுறைக்கு மிகவும் பாரதூரமான எதிரிகளாகும். மேலும் ஸுன்னாவைப் பின்பற்றக்கூடியவர்களையும், போதனை செய்பவர்களையும் அடக்கி ஆக்கிரமித்து சித்திரவதை செய்து துன்புறுத்தி கொலை செய்து விடுவார்கள். போதனைசாலைகளை பொய்யான காரணிகளை முன்வைத்து முடக்கிவிடுவார்கள்.

இவைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளில் சில ......

முஹம்மத் நபியைப் பின்பற்றக்கூடிய சமுதாயமே !
Ø  ஸுன்னாவை பாதுகாப்பதற்குப் புறப்படுவீராக ...
Ø  ஸுன்னாவை வாழ்க்கையில் எடுத்து நடப்பீராக ...
Ø  ஸுன்னாவை ஏனையவர்களுக்கு கற்றுக் கொடுப்பீராக ...
Ø  ஸுன்னாவை பல வழிகளிலும் அறிமுகம் செய்வீராக ...

ஸுன்னாவைப் பற்றிப்பிடித்துக் கொள்வது பாதுகாப்பும், அபிவிருத்தியுமாகும். அதனை விடுவது கேவலமும், பித்னாவும், அழிவுமாகும்.
·         24:63.  ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

இர்பால் இப்னு ஸாரிய்யா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  அறிவிக்கின்றார்கள்     ((நபியவர்கள் உருக்கமான ஒரு உபதேசம் செய்தார்கள். உள்ளம் உருகியது கண்கள் கண்ணீரை வடிக்கின்றது. அப்பொழுது நாங்கள் யாரஸுலல்லாஹ் ! இறுதி உபதேசம் போன்றுள்ளது எங்களுக்கு உபதேசம் செய்வீர்களாக என்றதும் .... ஆவர்கள் கூறினார்கள் (( அல்லாஹ்வை அஞ்சி வழிப்படுவதை போதிக்கின்றேன். மேலும் உங்களுக்கு தலைவராக ஒரு ஹபஷா நாட்டைச் சேர்ந்த அடிமை தலைவராக இருந்தாலும் அவருக்கு வழிப்படுங்கள். உங்களில் எவராவது அக்காலத்தில் இருந்தால் அதிகமாக கருத்து வேற்றுமைப் படுவதைக் காண்பீர்கள். அந்நேரத்தில் எனது வழிமுறைகளையும் நேர்வழி பெற்ற குலாபஉர்ராஷிதூன்களான நேர்வழி பெற்ற கலிபாக்களையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நூதன செயல்களை எச்சரிக்கின்றேன். நிச்சயமாக நூதன செயல்கள் அனைத்தும் வழிகேடுகளே ! )) நூல் அஹ்மத் - அபூதாவூத் - திர்மிதி.


இமாம் அல் அவ்ஸாஇய்யு றஹ்மதுல்லாஹி அலைஹ  அவர்கள் கூறுகையில்...
       ((நபியவர்களுடைய தோழர்கள் ஐந்து விடயங்களை பற்றிப்பிடித்துக்கொள்வார்கள்.
1- ஜமாஅத்தை கடமையாக்கிக் கொள்ளல்
2- ஸுன்னாவைப் பின்பற்றல்
3- பள்ளிவாயில்களை  கட்டி நிர்வாகம் செய்தல்
4- அல்குர்ஆனை ஓதுதல்
5- அல்லாஹ்வின் பாதையில் போர்செய்தல்.)) ஆகியவைகளாகும்.


ஸுன்னாவைப் பின்பற்றி, அதனைப் பாதுகாக்கக்கூடிய காவலர்களாக எம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top