1) மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

2) விடைகளைக் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தேடவும்.

ஜுஸ்வு 12
(ஸுரா 11வசனம் 06 முதல் ஸுரா 12  வசனம் 52 வரை)
1)  அர்ஷ் ----------மீது இருந்தது
                a) வானம்                                b) சொர்க்கம்
                c) தண்ணீர்                              d) தங்க தட்டு
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

2)  இப்ராஹிம் நபி தன்னிடம் வந்த தூதர்களுக்கு கொடுத்த உணவு
                a) பழங்கள்                             b) குளிர்ந்த நீர்
                c) பால்                                    d) பொரித்த கன்று
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

3)  யஃகூப் நபி , யூசுப் நபியை ------ கொன்று விடும் என பயந்தார்
                a) சிங்கம்                                b) புலி
                c) காட்டெருமை                     d) ஓநாய்
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

4) “இவர் மனிதரல்ல! இவர் ஒரு மலக்கே தவிர இல்லைஎன யார்,யாரை பார்த்து கூறியது?
                a) இப்ராஹிம் நபி ,,,,, தூதர்களை பார்த்து
                b) எகிப்திய பெண்கள் ,,,, யூசுப் நபியை பார்த்து
                c) லூத் நபி ,,,,,தூதர்களை பார்த்து
                d) ஸமூது ,,,,, ஸாலிஹ் நபியை பார்த்து
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

5)  “எந்த ஜீவராசியும் அதன் முன்நெற்றி உரோமத்தை அல்லாஹ் பிடித்து கொண்டே தவிர இல்லைஎன கூறியது
                a) ஸாலிஹ் நபி             b) ஹுத் நபி
                c) முஹம்மது நபி           d) நூஹ் நபி
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

6)  யூசுப் நபிக்கு அல்லாஹ் கொடுத்தது
                a) கனவுகளின் விளக்கம்    b) சட்ட நுணுக்கம்
                c) கல்வி                                  d) அனைத்தும்
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

7) “நான் மறைவானவற்றை அறிய மாட்டேன்! நான் மலக்கு என்று கூற மாட்டேன்”  -கூறியது
                a) முஹம்மது நபி                  b) ஸாலிஹ் நபி
                c) நூஹ் நபி                            d) ஹுத் நபி
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

8)   ஏழு கொழுத்த பசுக்களை ஏழு இளைத்த பசுக்கள் உண்ணுதல்- இக்கனவை கண்டது
                a) யூசுப் நபி                             b) சிறைவாசி
                c) அரசர்                                  d) அமைச்சர்
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

9)  லூத் நபியும் அவரது மனைவி , பெண் மக்களும் அழிவிலிருந்து காப்பாற்றப் பட்டனர்
                a) சரி                                       b) தவறு
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

10)  வர்த்தக கூட்டத்தினரால் யூசுப் நபி ----- க்கு விற்கப்பட்டார்
                a) தங்க காசுகள்                     b) வெள்ளி காசுகள்
                c) கோதுமைக்கு பதிலாக      d) அரிசிக்கு பதிலாக
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

11)  ஸமூது கூட்டம் ஒட்டகத்தை அறுத்தபின் ---- நாட்கள் தண்டனையின்றி சுகமடைய விடபட்டனர்
                a) 0                                          b) 1          
                c) 3                                          d) 7
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

12)  அதிகமான நற்செயல்கள் செய்தால் தீமைகள் அழிக்கப்படும்
                a) சரி                                       b) தவறு
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

13)  ஷுஐப் நபி தன் கூட்டத்தினரிடம் ஆது,ஸமூது,பிர்அவ்னின் அழிவை ஞாபகமூட்டினார்
                a) சரி                                       b) தவறு
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

14)  அடுப்பு பொங்கியது என கூறப்படுவது எப்போது?
                a) ஸமூது கூட்ட அழிவின் போது
                b) நூஹ் நபி கூட்ட அழிவின் போது
                c) ஆது கூட்ட அழிவின் போது
                d) மத்யன் கூட்ட அழிவின் போது
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

15)  நூஹ் நபியின் கப்பல் நிலைபெற்றது
                a) ஆல்ப்ஸ் மலை                 b) துர்கிஷ் மலை
                c) ஜுதி மலை                         d) எகிப்தில்
விடை         ஸுரா எண்(கள்)                                   வசன எண்(கள்)

(continued)




0 comments:

Post a Comment

 
Top