அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்
நாள் - 09 ரபிய்யுல் அவ்வல் 1435 ஹி (அ) 10 ஜனவரி 2014
இடம்  - மஸ்ஜிதுந்நபவி
இமாம் - அப்துல் பாரி அல் துபைதீ
தலைப்பு      - பிரபஞ்சத்தை ஆய்வு செய்வது படிப்பினையும் உபதேசமுமாகும்.
இமாம் அப்துல் பாரி அல் துபைதீ அவர்கள் “பிரபஞ்சத்தை ஆய்வு செய்வது படிப்பினையும் உபதேசமுமாகும்” எனும் தலைப்பில்,  அல்லாஹ்வுடைய பிரபஞ்சங்கள் பற்றியும், அதனை ஆராய்வதின் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறியதுடன், எவ்வளவு காலமானாலும் மாற்றமடையாத பல பிரபஞ்சங்களை உதாரணமாகக் கூறினார்கள். மனிதர்களுடைய நிலைமைகள் மாற்றமடைந்துவிட்டன. அல்லாஹ்வுடைய ஏற்பாட்டின் பிரகாரம், அவனுடைய நாட்டப்படி, எவ்வித மாற்றமுமின்றி பிரபஞ்சம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எனவே இதன் மூலம் படிப்பினைகளையும் உபதேசங்களையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதையும் நினைவூட்டினார்கள்.
·         33:70. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
·         33:71. (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.
உலகில் அனைத்தும் இருப்பதற்கு  அல்லாஹ்விடம் சில வழிமுறைகள் உள்ளன. அவைகள் அனைத்தும் எவ்வித தடங்கலுமின்றி, ஒழுங்குமுறையில் செல்லும் வகையிலேயே இப்பிரபஞ்சத்தை படைத்துள்ளான்.
·         54:49. நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.

அல்லாஹ்வுடைய வழிமுறைகளை அறிந்து கொள்வது கட்டாயமாகும். அது படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்குமான ஒரு குறிப்பிடத்தக்கவையாகும். அவைகளை அறிந்து கொள்வது மார்க்கத்தில் சிலதை அறிந்துகொண்டது போன்றாகும்.
·         16:89. மேலும் இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.

உலகம் பல படிமுறைகளில் அமையப்பெற்றுள்ளது. இவைகளை அறிந்து கொள்ள முயற்சிப்பவன் பல செய்திகளை அறிந்துகொள்வான்.
பயன்மிக்க அறிவுகளில் உள்ளதுதான் அல்லாஹ்வுடைய வழிமுறைகளைப்பற்றிய அறிவாகும். இதன் மூலம் அவனது அறிவும் சக்தியும் அதிகரிப்பதோடு, இழிவுநிலையை விட்டும் பயன்பெறுவதோடு, அல்லாஹ்வுடைய வழிமுறைக்கேட்ப புவியை நிர்வாகம் செய்து தனது அறிவு, உணர்வு சக்தியை விரிவுபடுத்திக்கொள்வான்.
பிரபஞ்சம் பற்றிய ஆய்வானது நிகழ்வுகளுக்குப்பின் உள்ள ஞானங்களை வெளிப்படுத்தும். இது நாட்டையும், மார்க்கத்தையும் பாதுகாக்கக்கூடியதாகும். வாழ்வின் பலதரப்பட்ட நிலைகளிலும் சக்தியை ஏற்படுத்திக்கொள்வதானது மார்க்கம் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாகும்.
பிரபஞ்சம் பற்றிய ஆய்வில் பொடுபோக்காக இருப்பது முஸ்லிம்களை சமுகத்தில் ஒரு பின்தங்கிய சமுகமாக எடுத்துக்காட்டப்படும். மேலும் பிரபஞ்சம் மூலம் பெறவேண்டிய படிப்பினைகளையும் இழக்கநேரிடும்.

நபியவர்களை நிராகரித்தவர்களைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடுகையில்...
·         64:5. இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? பின்னர்; அவர்கள் தங்கள் (தீய) காரியத்தின் பலனை அனுபவித்தனர் - அன்றியும் அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
·         64:6. இதற்குக் காரணம்: நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர்; ஆனால் அப்போது அவர்களோ: (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?' என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள்; அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன்; அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன்.
பிரபஞ்சம் (கடந்தகால சமுகம், மக்கள், நாடுகள்) பற்றிய ஆய்வு படிப்பினையும் உபதேசமுமாகும்.
·         10:13. (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
·         10:14. நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.
அல்குர்ஆன் மனிதர்களை அல்லாஹ்வுடைய வழிமுறைகளை அறிந்து கொள்வதற்காக அழைக்கின்றது. அதுவே நிரந்தர அடித்தளமாகும். எனவே உலகில் ஏற்படக்கூடிய அனைத்திலும் படிப்பினை உள்ளது. கடந்த காலத்தில் நடந்தவைகள் எதிர்காலத்தில் நடக்க இருப்பவைகளுக்கான தீர்வாகும். கடந்தவைகள் எதிர்காலத்தில் நடக்க இருப்பவைகளுக்கான ஆதாரமாகும்.
கடந்தகால சமுகம் பற்றி அல்குர்ஆனில்....
·         59:2. வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே; எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை; அவர்களும் தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான்; அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர்; எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.

அல்லாஹ் அல்குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதியை வரலாறுக (கதைகளாக)ளாக முஸ்லிம்கள் படிப்பினை பெறுவதற்காகவே ஆக்கிவைத்துள்ளான்.
·         7:176.  ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.

அல்குர்ஆனை தொடராக நோட்டமிடுதல் பிரபஞ்சம், ஆத்மா பற்றிய அமைப்புக்களில் தெளிவை ஏற்படுத்தும். 
·         21:37. மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.
வரலாறு என்பது அல்லாஹ்வுடைய வழிமுறைகளை  மிகவும் தெளிவாக வெளிப்படுத்தக்கூடியதாகும். வரலாறுகள் மூலம் பயன்பெறுவதை  அல்குர்ஆன்  உறுதிப்படுத்துகின்றது.
·         3:137. உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.

வரலாறு மற்றும் பிரபஞ்சம் பற்றிய அறிவும் முன்னோர்கள் செய்த தவறுகளை விட்டும் பாதுகாக்கும்.
சில வழிமுறைகள் உண்மையின் பாலும் நேர்வழியின்பாலும் நேர்வழிகாட்டும்.
·         4:26. அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும் உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும்இ ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
சில வழிமுறைகள் வழிகேடு மற்றும் அழிவின் பால் இட்டுச்செல்லும்.
·         14:28. அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
·         (( எவர் இஸ்லாத்தில் கெட்டதொரு வழிமுறையை அறிமுகம் செய்தின்றாரோ அவருக்கு அதனுடைய பாவமும் அவருக்குப்பின்னர் செய்யக்கூடிய பாவங்களும் செய்தவர்களுடைய பாவத்தில் எவ்விதக் குறைவுமின்றி இவருக்கும் கிடைக்கும் ) நபிமொழி முஸ்லிம்.
அல்லாஹ்வுடைய வழிமுறைகள்  எவ்வித மாற்றமோ திருத்தமோ இல்லாமல் ஸ்திரத்தின் பால் ஏனையவைகளுக்கு மாற்றமாக வித்தியாசமாக இருக்கும்.
·         35:43 அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.

உலகில் கூலி வழங்கும் விடயத்தில் முஃமின் காபிர் என   அல்லாஹ்வுடைய வழிமுறையில் மாற்றங்கள் இருக்கமாட்டாது. நன்மைகள் செய்தவர் கூலி வழங்கப்படுவார். நன்மைகள் செய்யாதவர் அதனை இழப்பார். இதனால் முஃமின்கள் நன்மையின் பால் ஈர்க்கப்படுவார்கள்.
அல்லாஹ்வுடைய சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். இதனால் மனிதன் தனது நிலையை நன்மையின் பால் மாற்றிக்கொள்ள வேண்டும்.
உலகில் முயற்சி செய்யக்கூடியவர்களுக்கான கூலி அவர் காபிராக இருந்தபோதும் செயல்களின் அளவு நன்மைகள் வழங்ப்படும். ஆனாலும் காபிர்களுக்குறிய கூலி இவ்வுலகுடன் முற்றுப்பெறும்.
·         11:15. எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
·         11:16. இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!
அல்லாஹ்வுடைய வழிமுறைக்கு மாற்றம் செய்பவர் முஸ்லிமாக இருப்பினும் தண்டிக்கப்படுவார்.
·         4:123. (முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ  துணை செய்பவனாகவோ காண மாட்டான்.
·         54:51. (நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

படைப்பினங்களில் நபிமார்களுக்கு அடுத்ததாக சிறப்புக்குரியவர்கள் ஸஹாபாக்கள் எனும் நபியவர்களின் தோழர்களாகும். இவர்களுக்கே உஹத் யுத்தத்தில் துயரம் ஏற்பட்டது.
·         42:30. ( மேலும் துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும், உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட(காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்க வேண்டியவற்றிலிருந்து)பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகின்றான்.)
அல்லாஹ்வுக்கும் அவனது படைப்பினங்களுக்குமிடையில்  எந்த உறவுபந்தங்களும் இல்லை. ஆனால் தக்வா எனும் இறைபக்தியும், வழிப்படுதலுமாகும்.
அல்லாஹ்வுடைய வழிமுறைகளிலிருந்து......
அல்லாஹ்வுடைய வழிமுறைகளை விட்டும் வழிதவறுவது அவனது தண்டனைகளை இழுத்துவரக்கூடியதாகும்.  எவர் தியாகத்துடன் வழிப்படுகின்றனரோ அவர்களுக்கு பொக்கிஷங்கள் திறக்கப்படும். எவர் பொடுபோக்காக இருக்கிறாரோ அவருக்கு வறட்சியும், துயரமும் ஏற்படும்.
வாழ்வு மற்றும் ஆத்மாவில் மாற்றங்களை ஏற்படுத்துதல், வணக்கங்கள் செய்வதில் படித்தரங்களாக இருக்கும்.
·         (( நிச்சயமாக முதலாவதாக இறக்கப்பட்ட இறைவசனங்களில்  சுவர்கம், நரகம் சம்பந்தமாகவே கூறப்பட்டது. மனிதர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்ட்டபோது ஹலால், ஹராம் சம்பந்தமான வசனங்கள் இறங்கியது. ஆரம்பத்திலே மது அருந்துதல், விபச்சாரம் போன்றவற்றைப் பற்றிய தடைகள் வந்திருந்தால் அதனை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)) அறிவிப்பாளர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
((உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களுடைய மகன் அப்துல் மலிக் அவர்கள் தனது தந்தையிடம் எஞ்சியிருந்த வழிகேடுகள், சரிவுகள், அநியாயங்கள் பற்றிய விடயங்களை நீக்குவதில் அவசரம் காட்டாமை பற்றி முறையிட்டபோது மார்க்க அறிஞரான தந்தை மகனுக்கு பதிலளிக்கும் போது எனது சிறிய மகனே ! அவசரப்படவேண்டாம்.  நிச்சயமாக அல்லாஹ் மதுவைப்பற்றி அல்குர்ஆனில் இரண்டு விடுத்தம் இழிவுபடுத்திக் கூறியுள்ளான். மூன்றாவது விடுத்தமே மதுவை ஹறாமாக்கியுள்ளான். உன்மையின் பால் மக்களை ஒரேதடவையில்  அழைத்து சுமக்கவைப்பது பித்னாவாக ஆகிவிடுமோ என நிச்சயமாக நான் அஞ்சுகின்றேன் என்றார்கள்.))
உலக முடிவு காலம் வரை முஃமினான ஒரு கூட்டம் மார்க்கத்தை நிலைநாட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களது செயல் மக்களுக்கு மத்தியில் சாதாரணமாக தோற்றமளித்தாலும் மறுமைநாள் தராசில் மிகவும் கனமானதாக இருக்கும்.
சோதனைக்குட்படுத்தல் ...
·         29:2. 'நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்' என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
·         29:3. நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
முஃமின்கள் சோதனைக்குப் பின்பே அவர்கள் இலகுத் தன்மையை அடைந்து கொள்வார்கள். ஏனெனில் சோதனையில் பல படிப்பினைகள் உள்ளன. மாற்றமாக அவர்கள் முஃமின்களுடைய சந்ததியினர் என்பதற்காக மாத்திரம் எந்த சலுகைகளும் வழங்கப்படமாட்டாது.
முஸ்லிம்கள் ஸ்திரமாக இருந்தால் மாத்திரமே புவியில் அல்லாஹ்வுடைய இலகுபடுத்தல்கள் அவர்களுக்கு கிடைக்கும்.
உண்மையின் மூலம் தீமையைத் தடுத்தல். 
·         2:251. அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால்இ (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
அல்லாஹ் உண்மையாளர்கள் மூலம் வழிகேடர்களை நேர்வழிப்படுத்துவான்.
கெட்டவைகளுக்கு ஒரு சுற்றுப்பயணம். உண்மைக்கு பல சுற்றுப்பயணங்களாகும். அல்லாஹ் தனது அடியார்களை அவனது எதிரிகளிலின் ஆக்கரமிப்பிலிருந்து பாதுகாப்பான்.
·         4:141.  மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.
காலங்கள் பல கடந்தபோதும் உண்மையே வெல்லும்.
·         13:17. இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
காபிர்களான இறைநிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் அவநம்பிக்கையில் இருக்கும் காலமெல்லாம் மறுமையில் அவர்களுடைய பாவச்சுமைகளை முழுமையாக சுமப்பதற்காக  உலகில் அனைத்தையும் அவர்களுக்கு திறந்து கொடுப்பான்.
·         3:178. இன்னும் அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.

-     உயர்வையும் அந்தஸ்தையும் எதிர்பார்ப்பவர் தக்வா எனும் இறைபக்தியைக் கடைபிடிக்கட்டடும்.
-     பாவங்களும், நூதன செயல்களும் இழிவையே பெற்றுத்தரும்.
-     முஸ்லிம்களுடைய ஒற்றுமையே வெற்றியாகும்.
-     முஸ்லிம்களுடைய பிளவுகள் அழிவும் தோல்வியுமாகும்.
-     அறிவைத்தேடுவது மேன்மையும்; வெற்றியுமாகும்.
-     அறிவுள்ள சமுகம் செல்வம், தொழில்வாய்ப்பு, விழிப்புணர்வு ஆகிவைகளால் முன்னேறலாம்.
எனவே அல்லாஹ்வுடைய வழிமுறைகளை ஆராயும் போது முஸ்லிம் சமுதாயம் ஈமான் எனும் இறைவிசுவாசத்துடன் கூடிய ஞானம், வீரம், அறிவு, பிளவுகளை விட்டு விட்டு நன்மையிலும் இறைபக்தியிலும் ஒன்றுபட்டு அல்லாஹ்வுடைய மார்கத்தை நிலைநாட்டக்கூடிய ஒரு சமுகத்தை கட்டியெளுப்பவேண்டிய கடமையுணர்வை வேண்டப்படுகின்றார்கள்.
இவ்வுயரிய நிலையை வெறுமனே எண்ணத்தால் மாத்திரம் அடைந்து கொள்ளமுடியாது.
மாரக்கம் மற்றும் அல்லாஹ்வுடைய பிரபஞ்ச வழிமுறைகளுக்கு அமையவே இதனை அடைந்து கொள்ளலாம்.

·         13:11.  எந்த ஒரு சமூதாயத்தவரும் தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில்இ அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.


பிரபஞ்சத்தை ஆய்வு செய்வது படிப்பினையும் உபதேசமும் பெற்ற சமுகமாக எம்மை ஆக்கிவைப்பானாக. ஆமீன் !!!.

0 comments:

Post a Comment

 
Top