02 முஹர்ரம் 1434 ஹி (அ) 16 நவம்பர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்….
இடம் : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு : ஒரு அடியானின் ஈடேற்றம் இறைவழிபாட்டில் உள்ளது.
இமாம் :  அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி.
இமாம் அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி அவர்கள் ஒரு அடியானின் ஈடேற்றம் இறைவழிபாட்டில் உள்ளது எனும் தலைப்பில் அல்லாஹ்வுக்கு வழிப்படுவது பற்றி உபதேசித்தார்கள். அல்லாஹ்வுக்கு வழிப்படுவனால்  நஷ்டமடைந்த எவருமில்லை மேலும் அல்லாஹ்வுக்கு மாறுசெய்த எவரும் ஈடேற்றமடையமாட்டார்கள். கடந்த நாட்கள், இரவுகள் எத்தனையோ நல்ல கூட்டத்தினரையும் கெட்ட கூட்டத்தினரையும் கண்டுள்ளது. அல்லாஹ்வுடைய அருள்களால் மறுமைக்காக எதனையும் சேமித்து வைக்காமல் அழிந்துபோன எத்தனையோ மனிதர்கள் உள்ளனர்.  எனவே புத்தி உள்ளவர்ளே சிந்தித்து படிப்பினை பெறுங்கள் என உபதேசித்தார்கள்.


அல்லாஹ்வை அஞ்சி வழிப்படுங்கள். அவனுக்கு வழிப்படுவது அவனது தண்டனைகளை விட்டும் பாதுகாத்து வெற்றியைத் தரும்.
அல்லாஹ்வுடைய (திருலிகாஃவை) சந்திப்பை  மறந்து ஈருலகிலும் நஷ்டமடைந்தவர்களைப் போன்று   ஆகிவிடவேண்டாம்.
அடியார்களே  ! அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்ட எவரும் நஷ்டமடைந்ததோ மாறுசெய்தவர்கள் ஈடேற்றமடைந்ததோ இல்லை.
o    24:52. இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
o    72:23. 'எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்' என (நபியே!) நீர் கூறும்.
மனிதர்களே ! நிச்சயமாக உங்களது ரப்பு, அவனது திருநாமங்கள் தூய்மையானது, அருளாளன், சக்தியுடையவன், ஞானமிக்கவன், பேரறிஞன், கேட்பதற்க்கு செவிப்புலனையும், பார்ப்பதற்க்கு கண்களையும், சிந்திப்பதற்க்கு இதயத்தையும், மேலும் உடலுறுப்புக்களையும் தந்த அல்லாஹ்வுக்கு  வணக்கத்தின் மூலம் நன்றி செலுத்துங்கள்.
o     உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான்.
-------------------------------
அல்லாஹ் , அவனது கருணையால் அறிவுடையவர்கள் சிந்தித்து,  அவர்களுடைய ரப்பை அறிந்து, அவனது ஏவல்களுக்கு கட்டுப்பட்டு விலக்கப்பட்டவைகளை தவிர்ந்து கொள்வதற்காக பிரபஞ்ச அத்தாட்சிகளையும் , நுட்பமான படைப்பினங்களையும் உருவாக்கியுள்ளான்.
o    10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
o    10:6. நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
o    36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகி விடுகிறார்கள்.
o    36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
o    25:62. இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.
அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் கூறுகையில் :- இரவும், பகலும் மாறி மாறி வருவது அடியார்கள் அல்லாஹ்வை வணங்குவதற்கான நேர அட்டவனையாகவும். இரவில் தவறிப்போகும் செயலை பகலிலும், பகலில் தவறிப்போகும் செயலை இரவிலும் அடைந்து கொள்வதற்காகவும் அமைத்துள்ளான்.
இரவும் பகலும் அல்லாஹ்வுடைய இரண்டு அத்தாட்சிகள். வானம் பூமி படைக்கப்பட்ட நாள் முதல் இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கிறது. இவ்விரண்டிலும் மனிதர்களால் மட்டிட முடியாத அளவுக்கு பல நன்மைகளையும், படிப்பினைகளையும், அறிவுரைகளையும் வைத்துள்ளான்.
இரவு பகல் மாறிமாறி வருவதன் மூலம் மாதமாகிறது. மாதங்கள் மாறிமாறி வருடமாகின்றது. வருடங்கள் மாறிமாறி வருவதன் மூலம் மனித வாழ்கை இவ்வுலகில் முடிவடைந்து பின்னர் மறுமையில் அவர்களை எழுப்பி அவரவருடைய செயல்களுக்கு ஏற்ப கூலிகள் வழங்கப்படும். அல்லாஹ் எவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.
o    4:40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.
கடந்த கால சமுகம் இரவு பகல் இரண்டையும் சந்தித்து அவர்களது செயல்கள் கெட்டதாக இருந்ததின் காரணத்தினால் அவர்களது இருப்பிடம் கெட்டதாக அமைந்தது. இன்னும் சில சமுகம் இரவு பகல் இரண்டையும் சந்தித்து அவர்களது செயல்கள் நல்லதாக இருந்ததின் காரணத்தினால் அவர்களது இருப்பிடம் நல்லதாக அமைந்தது.
எனவே படிப்பினைக்குரிய விடயங்களை சிந்தித்து பாவங்களை விட்டுவிட்டு அல்லாஹ்வின் பாவமன்னிப்பை எதிர்பார்த்து தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து மரணம் வருவதற்க்கு முன்னர் தவ்பா எனும் பாவமன்னிப்புக் கேட்பாயாக !.
 
வாழ்நாள் கடந்து செல்கின்றது. மறுமைக்காக பல நன்மையான செயல்களைச் செய்து கொள்வீராக.
கடந்த வருடங்கள் கடந்து செல்வதன் மூலம் படிப்பினை பெற்று எதிர்காலங்களை சீர்செய்து கொள்வீராக !.
o    9:88. எனினும், (அல்லாஹ்வின்) தூதரும்,அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
o    9:89. அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்னாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.
தூதர்களுடைய எதிரிகள் அவர்களது காலங்களை இறைநிராகரிப்பிலும் பாவங்களிலும் செலவு செய்து உலகில் சிறு இன்பங்களை அனுபவித்து  மறுமையில் எந்த பங்குமில்லாத கைசேதகாரர்களானார்கள்.
o    23:42. அப்பால், நாம் அவர்களுக்குப் பின் வேறு தலைமுறையினர்களையும் உண்டாக்கினோம்.
o    23:43. எந்த ஒரு சமுதாயமும் அதற்குரிய தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
o    23:44. பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்.
o    7:40. எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்
o    7:41. அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
 
------------------------------------
வருடாவருடம் நினைவு கூறக்கூடிய முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது ஹிஜ்ரத் மக்காவிலிருந்து மதீனாவுக்கு அல்லாஹ்வின் கட்டளைப்படி ஏற்படுத்தப்பட்ட பயனமாகும். இதனூடாக அல்லாஹ் நபியவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தான். 

o    9:40. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால் (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது (நம் தூதர்) தம் தோழரிடம் 'கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்' என்று கூறினார்.
யுகமுடிவு நாள் வரை இந்த ஹிஜ்ரத்தின் மூலம் இஸ்லாத்திற்க்கு வெற்றியை அல்லாஹ் வழங்குவானாக.
இக்கால மக்கள் ஹிஜ்ரத்தின் மகிமையை அடைந்துகொள்ள முடியாவிட்டாலும் வேறு பல நன்மைகளை அடைந்து கொள்ளக்கூடிய வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
-   உதாரணம்:-
-   1- ஷிர்க் எனும் இணைவைத்தலை விட்டும்  தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தின் பக்கம் ஹிஜ்ரத் செய்தல்.
-   2- பாவத்தை விட்டும் வழிப்படுவதின் பக்கம் ஹிஜ்ரத் செய்தல்.
-   3- இறைவழிபாட்டுக்கு தடையாகவுள்ளவைகளை விட்டும் இறைவழிபாட்டுகாக அக்கறை காட்டுதல்;.
-   4- பித்அத் எனும் நூதன செயல்களை விட்டும் ஸுன்னத் எனும் நபிவழியை பின்பற்றுதல்.
-   5- பேராசை, கற்பனைகளை விட்டுவிட்டு அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்பக் கூடியவைகளை செய்தல்.

o    (( பித்னா ('குழப்பமான) க்காலங்களில் அல்லாஹ்வை வழிபடுவது என்னளவில் ஹிஜ்ரத் செய்வதைப்போன்றதாகும் )) நபிமொழி
o    ((முஸ்லிம் என்பவன் தனது நாவு,கை ஆகியவைகளினால் ''தீங்குசெய்யாமல்'' பிற முஸ்லிம்களை ஈடேற்றமடையச் செய்பவனாவான்.)) நபிமொழி

திருக்குர்ஆன் வசனங்கள் இதயங்களை நேர்வழிப்படுத்தும், உள்ளுணர்வுகளை ஒளிபெறச்செய்யும், மனினை நெறிப்படுத்தும், இலட்சியங்களை உயர்வு பெறச்செய்யும், வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும், ஈமான் எனும் இறைவிசுவாசத்துக்கு உயிரோட்டம் அளிக்கும், நேரான வழியின்பால் நிறை பெறச்செய்யும்.

திருக்குர்ஆன் வசனங்களை செயல்படுத்துவதுடன்  பிரபஞ்ச அத்தாட்சிகளின் மூலம் பயன் பெறுவது, படிப்பினை பெறுவதானது மனிதனை இழிவுகளை விட்டும் விலக்கி மனிதனை முழுமை பெறச்செய்யும்.
o    17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது;
அல்குர்ஆனை நபித்தோழர்கள், முன்னோர்களான நல்லவர்கள் அணுகிய வழிமுறையில் சிந்தித்து விளங்குவதன் மூலம் மாத்திரமே பயன் பெற முடியும்.
அல் குர்ஆன் மனிதர்கள் அனைவருக்குமான அத்தாட்சியாகும்.
o    45:6. இவை அல்லாஹ்வுடைய வசனங்கள். இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே ! உண்மையான நிரந்தரமான மறுமை வாழ்கைக்காக இவ்வுலக வாழ்கையை பயன்படுத்திக்கொள்ளவும்.
o    89:22. உம்முடைய இறைவனும் ,வானவரும் அணியணியாக வரும்போது,
o    89:23. அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
o    89:24. 'என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!' என்று அப்போது மனிதன் கூறுவான்.
o    89:25. ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
o    89:26. மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
o    89:27. (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
o    89:28. நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
o    89:29. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
o    89:30. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).

நபியவர்களது ஹஜ்ஜதுல் வதாஃஉ உபதேசத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
o    ((மனிதர்களே ! அல்லாஹ்வை அஞசிக்கொள்ளுங்கள்.)) அஹ்மத் ((அல்லாஹ்வை அடிபனியுங்கள், ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள், ரமழான் மாதம் நோன்பை கடைபிடிக்கவும், உங்களது சொத்துக்களுக்குறிய ஸகாத் கடமையை நிறைவேற்றுங்கள்)) (( ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள், உங்களது பொறுப்பாளருக்கு கட்டுப்படுங்கள், உங்களது ரப்பு ஏற்படுத்தியுள்ள சுவர்க்கத்தில் நுழையுங்கள். )) அஹ்மத் - திர்மிதி.
o    இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கையில் :- ((ஐந்து விடயம் வருவதற்க்கு முன் ஐந்து விடயத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Ø  வயோதிபம் வருமுன் வாலிபத்தையும்
Ø  வறுமை வருவதற்க்கு முன் செல்வத்தையும்
Ø  நோய்வாய்ப்படுமுன் ஆரோக்கியத்தையும்
Ø  வேலைப்பளு வருமுன் ஓய்வு நேரத்தையும்
Ø  மரணம் வருமுன் வாழ்கையையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.)) நபிமொழி

அல்லாஹ்வுக்கு முழுமையாக வழிப்படுவதற்க்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top