19 துல்கஃதா 1433 ஹி (அ) 05 அக்டோபர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்…..

இடம்       : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு : அமல் (வேலை)செய்யுமுன் அது பற்றிய அறிவை கற்றுக்கொள்.
இமாம் : ஸலாஹ் அல்புதைர்.

இமாம் அவர்கள்  அறிவு கற்பதன் சிறப்பு, அவசியம் அதிலும் குறிப்பாக அல்லாஹ்வுடைய ஏகத்துவம் பற்றிய அறிவு, சுத்தம், தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற விடயங்களில் தெளிவு பெற்றுக்கொள்வதின் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் அறியாமல் வணங்குவதை விட்டுவிட்டு அறிந்து தெரிந்து செயல்படுவது கட்டாயக் கடமை என்பதை தெளிவுபடுத்தினார்கள்.


முஸ்லிம்களே ! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். தக்வாவின்  மூலம் அபிவிருத்தியை அடைந்துகொள்வீர்கள். அறிவின் மூலம் அழிவைத் தவிர்த்துக் கொள்வீர்கள்.
o    65:4. மேலும் எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.

மார்க்கத்தில் தெளிவு பெறுவதென்பது முயன்று பெற்ற பெறுமதி மிக்க  ஒன்றாகும். பிக்ஃ எனும்  மார்க்க சட்டக்கலை என்பது சிறப்புமிக்க  பல பயன்பாடுகளைக் கொண்டதாகும்.
o    ((எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவனுக்கு அல்லாஹ் மார்க்கத்தில் தெளிவை வழங்குகிறான்.)) நபிமொழி அறிவிப்பாளர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு- நூல் புகாரி முஸ்லிம்.
o    9:122. முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும் (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

மார்க்க அறிவு சிறப்புக்குரியதாகும். மார்க்கத்தைப் பற்றிய அறியாமை பெரும் குற்றமாகும்.
அறிவில்லாமல் நிறைவேற்றப்படும் செயல்கள் அனைத்தும் பயனற்றதாகும்.
உமர் இப்னு அப்துல்அஸீஸ் றஹ்மதுல்லாஹிஅலைஹி அவர்கள் கூற்று- (அறிவில்லாமல் நிறைவேற்றப்படும் செயல்கள் மூலம் பயன்பாட்டை விட சீர்கேடே அதிகமானதாகும்.)
அத்தவ்ரி  றஹ்மதுல்லாஹிஅலைஹி அவர்கள் கூற்று: அறிவுள்ள கெட்ட அறிஞரையும், அறிவற்ற வணக்கவாதியையும் அஞ்சிக்கொள்ளுங்கள். இவர்கள் இருவரின் மூலம் ஏற்படக்கூடிய கெடுதி அனைவருக்குமான பிரச்சினையாகும். 

உலகில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், வீண் அனுஷ்டானங்கள், வழிகேடுகள், நூதன செயல்கள் அனைத்திற்கும் மூலகாரணம் புனித மார்க்கத்தில் தெளிவு பெறுவதை, அறிந்து கொள்வதை விட்டமையாகும்.
-மார்க்கத்தில் வணங்கும் முறைகள் மாத்திரம் போதுமானதன்று. வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழிமுறைக்குட் பட்டதாக அமைந்திருக்க வேண்டும்.
முன்சென்ற நல்லவர்கள் கூறுகையில்....
(( சொல் செயல் மூலமும், சொல்லும் செயலும் எண்ணத்தின் மூலமும், சொல்லும் செயலும் எண்ணமும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறையில் அமைந்திருந்தால் மாத்திரமே நிலையானதாக அமையும்.))
மார்க்கத்தில் சுத்தம், தொழுகை,  ஸகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் பற்றி அறிந்து கொள்வது கட்டாயமாகும்.
ஓவ்வொருசெயலையும் அதனை செய்வதற்க்கு முன் (வழிகேட்டையும், அழிவையும் தவிர்த்துக்கொள்வதற்காக) அது பற்றிய அறிவை பெற்றுக்கொள்ளல் அவசியமாகும். (உ-ம் :திருமணம், வியாபாரம் )
-குறிப்பாக இது ஹஜ்ஜுடைய காலம் ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடியவர்கள் அது பற்றிய முழுமையான தகல்களை அறிந்து நபியவர்கள் காட்டியமுறையில் ஹஜ் கடமையை நிறைவேற்றவேண்டும். இதன் மூலம் அல்லாஹ்வுடையவும் அவனது தூதருடையவும் பெற்றுக் கொள்ளமுடியும்.
ஹஜ் பற்றிய விளக்கங்களை நம்பிக்கைக்குறிய அறிஞர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.அறிஞர்கள் ஹஜ் விளக்க வகுப்புக்களை ஏற்பாடு செய்வதன்மூலம் ஹாஜிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.

o    ((ஹஜ்செய்யும் வழிமுறையை என்னிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.)) நபிமொழி

முஸ்லிம்களே ! அல்லாஹ்வை அஞ்சி அவனுக்கு மாறுசெய்யாமல் வழிப்படுங்கள்.
o    9:119. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். 

அறிவுகளில் மிகவும் பெறுமதியானது அல்லாஹ்வைப் பற்றிய ஏகத்துவம் எனும் இல்முத்தவ்ஹீத் எனும் அறிவாகும். இதனை அல்பிக்ஹுல் அக்பர் (மிகப்பெரும் ஞான விளக்கம்)என இமாம் அபூஹனீபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயர்சூட்டினார்கள்.
அல்லாஹ்வைப்பற்றிய முறையான அறிவைப் பெற்றுக் கொண்டவர்கள் படைக்கப்பட்டவைகளுக்கு அது அறிஞரானாலும், தலைவரானாலும், அரசனானாலும் ஒருபோதும் சிரம்பனியவோ அடிபணியவோ மாட்டார்கள்.
o    (( மனிதன் மனிதனுக்கு சிரம்சாய்த்தல் என்பது நேர்வழியல்ல)) நபிமொழி அறிவிப்பாளர் அனஸ் ரலியல்லாஹுஅன்ஹுநூல்: அஹ்மத்.

எவர் அல்லாஹ்வை உரிய முறையில் வணங்குகிறாரோ அவர் ஒருபொழுதும் கப்ர் மண்ணறைகளை வலம் வரமாட்டார். ஏனெனில் வலம்வருதல் என்பது கஃபாவுக்குமாத்திரமே உரியது. மேலும் கப்ர் மண்ணறைகளின் மீது அறுத்துப் பலியிடவோ, பிரார்த்தணை புரியவோ, கழுத்துக்களில் நூல்களைக் தொங்கவிடவோ மாட்டார். ஏனெனில் இவைகள் அனைத்தும் தவ்ஹீத் எனும் ஏகத்துவத்துக்கு பங்கம் விளைவிக்க கூடியவைகளாகும்.
-      உண்மையாக அல்லாஹ்வை மகிமைப்படுத்தக்கூடியவர்கள்  நிலையான நித்திய ஜீவன் அல்லாஹ் இருக்க நிலையற்ற அழிந்து போகக்கூடியவைகளிடம் உதவி, விமோசனம் தேடமாட்டார்கள்.
எனவே இஸ்லாம் எனும் தூய மார்கத்தில் இருக்கக்கூடிய நீங்கள் மார்க்கத்தில் தெழிவுபெற்று அனைத்துவிதமான அழிவுக்கும் காரணமான அறியாமையைவிட்டும் ஒதுங்கி நடக்கவேண்டும்.
அறிந்து நல்அமல்கள் செய்யும் நல்லடியார்களாக இருப்பதற்க்கு அல்லாஹ் துணைபுரிவானாக. ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top