24 ஆகஸ்ட் 2012 (அ) 06 ஷவ்வால் 1433 ஹி அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்….
 இடம்    : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு: ரமழான் மாதத்தின் பின் எப்படி நடந்துகொள்ளவேண்டும்.
இமாம்   : ஹுஸைன் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷைய்க்.

இமாம் அவர்கள் ரமழான் மாதத்தின் பின் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், இறைவணக்கத்தில் நிலைத்திருக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறினார்கள்.

  

o   3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
o   4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
o   33:70. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
o   33:71. (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். 

காலங்கள் முடிந்து, நாட்கள் ஏற்ற இறக்கங்களாக மாறி வருவது   பெரும் படிப்பினைக்குரிய விடயமாகும்.
o   10:6. நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.

ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் ஈமானிய உணர்வுடன் பிரார்த்தணை, அடிபணிதல் போன்ற வணக்கங்களில் அதிகமாக ஈடுபட்டனர். அதனால் அவர்களின் உள்ளங்கள் விரிவடைந்து அமைதி பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் நன்றியும் உரித்தாகும்.
நிச்சயமாக உண்மையான, நிரந்தரமான வெற்றி, ஈடேற்றம் என்பது ஈமான் - தக்வா – வழிப்படுதல் போன்றவைகளில் நிலைத்திருப்பதாகும். இதனை அல்குர்ஆன் பல இடங்களில் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
o   11:112. நீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக;வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான்.
o   41:6. 'நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான். ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்' என்று (நபியே!) நீர் கூறும்.

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிறிய வார்த்தையில் விரிவான விளக்கத்தை போதித்தார்கள்.
o   ஒரு முறை நபியவர்களிடம் யாரஸுலல்லாஹ் ! உங்களுக்கு பின்னர் நான் யாரிடமும் கோட்காத இஸ்லாத்தில் உள்ள அழகிய சொல்லைக் கற்றுத்தாருங்கள் என வினவியபோது நபியவர்கள் கூறுவீராக ! ஆமன்து பில்லாஹி தும்மஸ்தகிம் ( நான் அல்லாஹ்வை விசுவாசிக்கிறேன் என்று கூறுவீராக. பின் அதில் நிலைத்தருப்பாயாக ) என கற்றுக்கொடுத்தார்கள். நபி மொழி- அறிவிப்பாளர் : ஸுப்யான் அத்தகபீ.

பரிபூரண ஈமான், சரியான நம்பிக்கை, கட்டாயக்கடமைகளை நிறைவேற்றல், தடுக்கப்பட்டவைகளைத் தவிர்ந்து கொள்ளல், சிறப்பபுக்குரிய செயல்களைச் செய்தல் போன்ற அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக இந்த உபதேசம் கட்டளை பிறப்பிக்கிறது.
இது மரணிக்கும் வரை உயிருடன் இருக்கும் காலமெல்லாம் பின்பற்றவேண்டிய செயலாகும்.
o   15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!
o   ((''உங்களுடைய செயல்கள் அனைத்தும்' நபிவழிக்கு உட்பட்டதாக நேர்த்தியாக இருப்பதற்க்கு நெருங்குங்கள்.)) நபிமொழி நூல் முஸ்லிம்.
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதற்க்கும், நல் அமல்கள் செய்வதற்கும் சந்தர்ப்பம் கிடைப்பது அல்லாஹ்வுடைய மிகப்பெரிய அருளாகும். அதற்க்காக நன்றி செலுத்துவதோடு அந்நன்மைகளைப் பாதுகாப்பதற்காக அயராது முயற்ச்சிக்கவேண்டும்.

ஒரு முஸ்லிம் கட்டாயமாக தவிர்ந்து கொள்ளவேண்டியவை

படைக்கப்பட்டவைகளுக்கு சொல்லால், செயலால், அல்லது அவர்களுடைய உடமைகள், மானம் போன்றவற்றில் எல்லை மீறுவதை கண்டிப்பாக தவிர்ந்துகொள்ளவேண்டும். ஏனெனில் படைக்கப்பட்டவைகளின் உரிமைகள் அல்லாஹ்விடத்தில் மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு எல்லை மீறுவது அநியாயமிழைக்கப்பட்டவரிடமிருந்து மன்னிப்புக கிடைக்காதவரை அல்லாஹ்விடமிருந்து நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியாத பெரும் கடன்சுமை போன்றதாகும்.
o   33:58. ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
o   ((எவர் தனது சகோதரர் விடயத்தில் கொடுப்பனவுகள் உள்ளவராக இருக்கிராரோ அவர் தீனார், திர்ஹம் போன்றவைகளால் நிறைவேற்றமுடியாத சந்தர்ப்பம் வருவதற்க்கு முன் தீர்த்துக்கொள்ளவும்.  இல்லையேல் அவரவர் அநியாயத்துக்கு பகரமாக தனது நன்மைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். இவ்வாராக நன்மைகள் முடிவுரும் தருவாயில் பிரருடைய பாவச்சுமைகளை அவன்மீது சுமத்தப்படும்.))நபிமொழி – நூல் -  புகாரி.
தனது நன்மைகளை இழந்து பிறருடைய பாவச்சுமைகளை சுமப்பதுதான் பெரும் கைசேதமாகும்.
o   (( ஒரு நாள் நபியவர்கள் தனது தோழர்களிடம் கடன் தீர்க்க முடியாதவர் '(வங்குரோத்துக்காரர்) யார் ? என வினவியபோது செல்வம், பொருள் இல்லாதவர் என ஸஹாபாக்கள் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் எனது சமுதாயத்தில் கடன் தீர்க்கமுடியாதவர் யாரெனில் ஒருவர் நாளை மறுமையில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவைகளுடன் வருவார். யாஅல்லாஹ் ! இவர் என்னை ஏசினார், இல்லாததையெல்லாம் இட்டுக்கட்டினார், அடித்தார், அநியாயமாக இரத்தத்தை ஓட்டினார், பணத்தை எடுத்துக்கொண்டார் என பல முறைப்பாடுகள் அவர் மீது முன்வைக்கப்படும். ஓவ்வொருவருடைய முறைப்பாட்டுக்குரிய அளவுக்கு இவருடைய நன்மைகளை கொடுக்கப்படும். இவ்வாறாக நன்மைகளையெல்லாம் முடிந்து முறைப்பாடுகள் எஞ்சியிருக்கும்போது முறைப்பாட்டாளர்களின் பாவங்களை இவர்மீது சுமத்தப்பட்டு நரகில் வீசப்படுவார். இவர்தான் உண்மையான கடன் தீர்க்க முடியாதவர் எனக்கூறினார்கள்) நபிமொழி- அறிவிப்பாளர்- அபூஹுரைரா ரலியல்லாஹுஅன்ஹு – நூல்- முஸ்லிம்.
அல்லாஹ்வுடைய கட்டளைகளை பின்பற்றி எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை வழிப்படுவதில் நிலையாக இருந்து வெற்றிபெறுங்கள்.
o   46:13. நிச்சயமாக எவர்கள் 'எங்கள் இறைவன் அல்லாஹ்வே' என்று கூறி பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
o   46:14. அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்; அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்.
 ------------------------------------------------------------------------------------------------------------------
ரமழான் மாதத்தின் பின் சுன்னத்தான நல்அமல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குவது மார்க்கமாகும்.
-     ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்றல். இவைகளைத் தொடராகவோ அல்லது தனியாகவோ நோற்கலாம். ஆனால் களாஃ நோன்புகள் இருக்கும்போது சுன்னத்தானவைகளை முற்படுத்தக்கூடாது என்ற ஷரீஅத் சட்டத்தைப் பேணிக் கொள்ளவும்.
o   ((யார் ரமழான் மாதம் நோன்பு நோற்று அதனை அடுத்துவரும் ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிராரோ அவர் காலம் பூராக நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.)) நபி மொழி முஸ்லிம்.
முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்வதுடன் அறிந்தவைகளை அவர்களுக்கு மத்தியில் பகிர்ந்துகொள்ளவும்.
அல்லாஹ்வுடைய இல்லமாம் பள்ளிவாயில்களில் தொலைபேசிமூலம் புகைப்படம் எடுத்தல், தொழுகையாளிகளின் சிந்தனைகளை திருப்பக்கூடிய முறையில் நடந்து கொள்ளல் போன்ற அனைத்து விடயங்களையும் தவிர்ந்து அல்குர்ஆன் ஓதுதல்,  திக்ர் செய்தல் போன்ற நல்ல செயல்களில் ஈடுபடவேண்டும்.
ஒரு முஸ்லிமிடம் இருக்கவேண்டிய நல்ல பன்புகளை வாழ்வில் எடுத்துநடப்பதோடு புனித மஸ்ஜிதுந்நபவியில் அனாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். 
ரமழான் மாதத்தின் மூலம் பெற்றுக்கொண்ட பயிற்சியினை வாழ்க்கையில் பின்பற்றக்கூடியவர்களாக இருப்பதற்க்கு அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்புரிவானாக. ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top