13 ஷவ்வால் 1433 ஹி (அ) 31 ஆகஸ்ட் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்…..
இடம் : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு : இஸ்லாத்தின்  எதிரிகள் யார் என்பதை அறியாமை தோல்வியே !
இமாம் : ஸலாஹ் அல்புதைர்.
இமாம் அவர்கள் இஸ்லாத்தின்  எதிரிகள் யார் என்பதை அறியாமை தோல்வியே ! எனும் தலைப்பில் இஸ்லாமிய நாடுகள் அநீதிக்குள்ளாக்கப்படுவது, முஸ்லிம்கள் அநியாயமாக கொலைசெய்யப்படுவது, பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குட்ப்படுத்த படுவது, நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவது எல்லாம் எதிரிகளின் தந்திரங்கள், சூழ்ச்சிகளினாலாகும். எனவே முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையுடன் எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து தங்களையும் புனித இஸ்லாத்தையும் பாதுகாப்பதற்காக மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என உபதேசித்தார்கள்.
முஸ்லிம்களே ! அல்லாஹ்வை தக்வா எனும் இறையச்சத்தின் மூலம் பயந்துகொள்ளுங்கள். இதனூடாக சோதனைகள், எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்புப்பெறுவீர்கள்.
o   3:120.'நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். 
மிகப்பெரும் தோல்வி என்னவெனில் - எதிரிகள் யார் ? அவர்களது சூழ்ச்சிகள் என்ன ? என அறியாமலிருப்பது .மேலும் அவர்களது சூழ்ச்சிகளை தடுப்பதற்கான முயற்ச்சியின்மை போன்றவைகளாகும்.
எதிரிகளுக்கு எதிரான  ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், பதாதைகள், சுலோகங்கள், விமர்சனங்கள், போராட்டங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளைக் சமகாலத்தில் காணலாம். இவைகளெல்லாம் வெறும் போலியானவையும், சதிமோசமுமேயன்றி வேறில்லை.
வரலாறுகள் என்றும் இவைகளை உண்மைப்படுத்தும்.
இஸ்லாமிய எதிரிகள் சென்ற காலத்திலும், சமகாலத்திலும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக செய்யும் சூழ்ச்சிகளை பார்க்கும்போது அவை அனைத்தும் சதிமோசம், தந்திரோபாயம், சூழ்ச்சிகள் நிறைந்து அமைந்திருப்பதை அவர்களது முன்னோர்களின் வரலாறுகளில் நிதர்சனமாகக் காணலாம்.
o   5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; 'நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
ஜிஹாத் எனும் சுலோகத்தை சுமப்பவர்கள் (நோக்கம் சரியாக இருப்பினும், பிழையாக இருப்பினும் அவர்கள்) மீது எதிரிகளின் அடாவடித்தனங்கள்,  கொலை மற்றும் பூண்டோடு அழித்தல் போன்ற பட்டியல்கள் நீண்டு செல்கிறது. அதே நேரத்தில் இஸ்லாமிய எதிரிகள் ஜிஹாத் எனும் பெயரில் சுலோகம் ஏந்தும் போது அவர்களுக்கு பாதுகாப்பும் அரவரணைப்பும் கிடைக்கிறது. வெளித்தோற்றத்தில் அவர்களை எதிர்ப்பதுடன் உள்ளாரந்த தொடர்புகளை வைத்துக்கொள்வார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம் நாட்டில் ஆண்கள் கொலை செய்யப்பட்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டு பள்ளிவாயில்கள் அழிக்கப்பட்டு இஸ்லாமிய நூல்கள் எரிந்து கொண்டிருக்கும் நிலையிருக்கிறது.
இஸ்லாமிய எதிரிகளது ஆதரவுகளும், எதிர்ப்புக்களும் சுயநல சிந்தனையுடன்தான் இருக்கும். தங்கள் அதிகாரத்தை விரிவாக்கும் நோக்கில் உண்மையான மத அடையாளங்களை அழித்து இஸ்லாத்துக்கு நேர்மாற்றமான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் இஸ்லாமிய விரோதப் போக்கிற்க்கான பெரும் சான்றுகளாகும்.
முஸ்லிம்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய அடிப்படைகளையும் பாதுகாப்பதற்காகவும், இஸ்லாத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும்  மிக மோசமான அச்சுறுத்தல்களை தடுப்பதற்காகவும்  மிகவும் கவனத்துடன் ஆயத்தமாக வேண்டும்.  இது அல்லாஹ் இஸ்லாமிய சமுகத்துக்கு கடமையாக்கிய ஒன்றாகும்.   
o   9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
o   ((உங்களது நாவு, ஆத்மா, செல்வம், கைகளினால்; இறைநிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள்.)) நபிமொழி நூல் அஹ்மத் - அறிவிப்பாளர் - அனஸ் ரலியல்லாஹு அன்ஹு. 
o   3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
முஸ்லிம்களே ! இஸ்லாமிய எதிரிகள், புராணக் கதைகளுடன்,  இஸ்லாத்துக்கு எதிராக பல பாவமான நாசகார செயல்களில் கொடுங்கோலனின் தலைமையில்  ஷாம் தேச மக்களுக்கு எதிராக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவைகளை எதிர்க்க அந்நியவர்களின் உதவியை நாடுவதன் மூலம் எப்பயனும் எட்டப்போவதில்லை. அவர்களுடைய உதவிகள்  உண்மையான உதவியின்றி அவர்களுடைய சுய இலாபங்களுக்காகவே இருக்கும். 
இஸ்லாமியர்களே! ஷாம் தேசமக்களை தோல்வியுறச் செய்யவேண்டாம்!!! எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியுமான உதவிகளை வாரி வழங்குங்கள். அவர்களுக்கு உதவாமல் இருப்பது பெரும் ஆபத்தும், குறையுமாகும்.
o   4:84. 'நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன். இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
ஏதிரிகளின் சூழ்ச்சிகளை அறிந்து முறையாக எதிர்கொள்ளக்கூடிய சக்தியையும் நல்வழிகாட்டலையும் எம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன் !!!
யா அல்லாஹ் ஷாம் தேசமக்களுக்கு உதவிபுரிவாயாக !!!

0 comments:

Post a Comment

 
Top