12 துல்கஃதா 1433 ஹி (அ) 28 செப்டம்பர் 2010 அனறு கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்……..

இடம் : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு :அல்லாஹ்வின் அருள்களும் நன்றி செலுத்துதலும்.
இமாம் : அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி.

இமாம் அவர்கள்  அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள அருள்களில் சிலவற்றைப் பட்டியலிட்டு, அதற்கு மனிதர்கள் நன்றிக்கடன் செய்வதின் அவசியத்தை எடுத்துக்கூறினார்கள், அல்லாஹ்வுக்கு எவ்வாறு நன்றி செலுத்த வேண்டும் என்பதையும் கூறினார்கள். அல்லாஹ்வையும் அவனது அருள்களையும் மறந்தவர்களின் நிலை பற்றி எச்சரிக்கை செய்தார்கள்.


அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியுள்ள அருள்களை மட்டிடமுடியாது
o    16:18. இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியுள்ள அருள்கள் சிலதை மனிதர்கள் அறிவார்கள். இன்னும் சிலதை அறியமாட்டார்கள்.
அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துதல் என்பது உண்மையான உளசுத்தியுடன் இருப்பதோடு, பாவங்களைவிட்டும் தூரமாகி நன்மையின்பால் நிலைத்திருப்பதாகும். மேலும், அவனது அருள்களை பெருமையாக எடுத்துக்கூறவேண்டும். அவ்வருள்களை நன்மையின்பால் மாத்திரமே பயன்படுத்தவேண்டும்.
எவர் அல்லாஹ்வை முழுமையாக ஈமான் எனும் இறைவிசுவாசம் கொண்டு பாவங்களை முற்றுமுழுதாக தவிர்ந்துகொள்கிராரோ அவர் அல்லாஹ்வுக்கு நன்றியுடையவராவார். இதுவே நன்றி செலுத்துவதில் மிகவும் சிறப்புக்குறியதாகும்.
அருள்களில் சிறியது பெரியது என்றில்லை. அனைத்து அருள்களுமே நன்றிக்குறியதும், நினைவுகூறப்பட வேண்டியவைகளாகும்.
பாவங்களில் மூழ்கி இறை நிராகரிப்பாளனாக இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.
o    76:2. (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
o    76:3. நிச்சயமாக நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.

அல்லாஹ்வுடைய அருள்களுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் அபிவிருத்தியையும் , புறக்கணிப்பதன்மூலம் அல்லாஹ்வுடைய தண்டனையையும் மனிதன் பெற்றுக்கொள்வான்.
o    14:7. '(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்' என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).
o    எவர் மாலையில் “அல்லாஹும்ம மா அஸ்பஹ பீ மின் நிஃமதின் அவ்பிஅஹதின் மின் கல்கிக மின் நிஃமதின் பமின்க வஹ்தக லாஷரீகலக  பலகல்ஹம்து வலகஷ்ஷுக்ரு” என்று கூறுகிராரோ அவர் அன்றைய இiவுக்கான நன்றியை செலுத்தியவராவார். எவர் இதனை காலையில் கூறுகிராரோ அவர் அன்றைய காலைக்கான நன்றியை செலுத்தியவராவார்.)) நபிமொழி.

அல்லாஹ்வுடைய அருள்களில் சில....
முஸ்லிம்கள் அனைவருக்கும்
Ø  இஸ்லாம்
Ø  ஈமான் 
Ø  அல்குர்ஆன் .

ஸவூதி அரேபிய நாட்டுக்குறியதான விஷேட அருள்களாவன
Ø  பாதுகாப்பு
Ø  நிலையான ஸ்திரத்தன்மை
Ø  சங்கைக்குறிய இரண்டு ஹரம்களான மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந்நபவி அமையப்பெற்றிருத்தல்.
Ø  புனித அல்குர்ஆன் இறக்கப்பட்ட இடம்.
Ø  உலகிற்க்கு ஓரிரைக்கொள்கை, நீதி, சமாதானம், சமத்துவம், உன்மையான மனித கௌரவம் போன்றவற்றை தெளிவுபடுத்தவென இஸ்லாமிய சூரியன் (முஹ்ம்மத் நபி) உதித்த இடம்.
o    21:107. (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.

நன்றிசெலுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைளில் சில...

இரண்டு புனித மஸ்ஜிதுகளுக்கும் செய்யும் சேவைகள் மூலம் அல்லாஹ் இந்த நாட்டுக்கு வரக்கூடிய தீமைகள், அனர்த்தங்கள் அனைத்தையும் முற்றுமுழுதாக இல்லாமல் செய்தோ அல்லது வரக்கூடிய விபரீதங்களை சாதாரனமாக மாற்றியோ அருள்புரிகிறான்.
o    2:251. 'அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால் (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங் கருணையுடையோனாக இருக்கிறான்.

நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் ஒளியை அனைக்க நினைப்பவர்களுக்கான பதிலடி ....
புனிதமஸ்ஜிதுந்நபவியின் மிகப்பெரும் அபிவிருத்திக்கான அறிவிப்பானது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் அந்தஸ்துக்கு பங்கம் விளைவிக்க நினைக்கும் நய்யாண்டிகளுக்கு பெறும் தோல்வியாகும். ((இருபுனித மஸ்ஜிதுகளுக்குமான சேவைசெய்யக்கூடிய அனைவரினதும் தியாகங்களை ஏற்று இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்குமான சேவையாக ஏற்றுக்கொள்வானாக.))
எல்லா விடையங்களிலும் நபி வழிமுறையை (ஸுன்னாவை)  தேடி  தமது வாழ்வில் பின்பற்ற முயற்சித்தல்.
முஸ்லிம்களைப்பொருத்தவரையில் இஸ்லாமிய மாரக்கமின்றி உலகமோ , அந்தஸ்த்துக்களோ எதுவும் கிடையாது.
o    9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
o    5:5. மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.
o    2:151. இதே போன்று நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
o    2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெறுவதற்கான எல்லாவிதமான வழிமுறைகளையும் பின்பற்ற முயற்ச்சிப்பதோடு அவனது கோபத்தையும், சாபத்தையும் கொண்டுவரக்கூடிய அனைத்துவிதமான வகைகளை விட்டும் முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ளல்.
o    34:37. இன்னும் உங்களுடைய செல்வங்களோ உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.

அல்லாஹ்வுடைய அருள்களை உணர்ந்து உரியமுறையில் நன்றி செலுத்தக்கூடியவர்களாக இருப்பதற்க்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top