03 துல்ஹஜ் 1433 ஹி
(அ) 19 அக்டோபர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்……
இடம் : மஸ்ஜிதுந்நபவி
மதீனா முனவ்வரா
தலைப்பு : ஹஜ் மற்றும் துல்ஹஜ் மாத
பத்துநாட்களின் சிறப்புக்கள்.
இமாம் : அப்துல் பாரீ அவ்வாழ்
அத்துபைதி .
இமாம் அவர்கள் ஹஜ் மற்றும் துல்ஹஜ் மாத பத்துநாட்களின் சிறப்புக்கள் என்ற தலைப்பில் அல்லாஹ்வின் வீட்டை தரிசிக்க வரும் ஹாஜிகளுக்கு
அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள பல சிறப்புக்களையும் ஹஜ்ஜை நாடியுள்ள ஹாஜிகளுக்கான பயன்மிக்க
பல உபதேசங்களை எடுத்துக்கூறினார்கள். குறிப்பாக ஹஜ் வணக்கங்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்
அவர்கள் காட்டிய வழிமுறையில் அமைந்திருக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறியதுடன் துல்ஹஜ்
மாத முதல் பத்து நாட்களின் மகிமை, சிறப்பு பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.
அல்லாஹ்வை அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்.
o
3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை
அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட)
முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
- நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்;
அவர்களின் அழைப்பை ஏற்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அல்லாஹ்வை துதித்து
மேன்மைப்படுத்தி தல்பியாவை முழங்கியவர்களாக இப்புனித பூமியை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்துகொண்டிருக்கிறார்கள்.
மேலும் இவ்வுலகம் இருக்கும்வரை வந்துகொண்டிருப்பார்கள்.
இந்த சமுகத்துக்கு எதிரான சூழ்சிகள், தந்திரோபாயங்கள் எத்தனை வகைவகையாக மேற்கொள்ளப்பட்டபோதும் அவைகள்
அனைத்தையும் தவிடுபொடியாக்குமளவுக்கு இஸ்லாம் சக்திவாய்ந்தது என்பதை இந்த ஈமானிய உறவுகளின்
ஒன்றுகூடல் வெளிப்படையாக பரம்சாட்டுகிறது. பகல், இரவு நிலைத்திருக்கும் காலமெல்லாம்
இந்த சமுகம் நிலையான இறைகட்டளை (அல்குர்ஆன்) மற்றும் தூதுத்துவத்தைக் கொண்டுள்ளது.
மற்றும் நீதம், கருணை, இறைநம்பிக்கை, அதன் அடிப்படை போன்றவைகள் மூலம் செயல் வடிவம்
கொடுக்கக்கூடிய சிறப்புமிக்க சமுதாயமாகும்.
நிச்சயமாக அல்லாஹ்வின் வீட்டுக்கு வரக்கூடிய கூட்டத்தினரின்
பாதுகாப்பை அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்.
o ((மூன்று வகுப்பினர் அல்லாஹ்வின் பொறுப்பில் (பாதுகாப்பில்) உள்ளனர். நபிமொழி))
o அல்லாஹ்வின் இல்லங்களான பள்ளிவாயிலுக்குச் செல்பவர்.
o அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்பவர்.
o ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டவர்.
ஹாஜிமார்களே ! உங்களின் ஒவ்வொரு எட்டுக்கும் கூலி வழங்கப்படும்.
ஏகத்துவ நாதங்களான (லப்பைக்கல்லாஹும்ம லப்பைக்) ஆஜராகி விட்டேன் யா அல்லாஹ் ! என்று
கூறும்போது பிரபஞ்சம் அனைத்தும் உங்களுடன் சேர்ந்து படைத்தவனின் ஏகத்துவ நாதத்தை முழங்குகிறது.
ஹாஜிகள் ஹஜ்ஜுக்கான கூலி பற்றிய நபிமொழியைக் கேட்கும்போது அதனை
அடைந்து கொள்வதற்கான அவர்களது முயற்சியும் ஆசையும் அதிகரிக்கும்.
o (( ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குரிய பரிசு சன்மானம் சுவர்க்கமாகும்.)) நபிமொழி.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைய வேண்டுமெனில் அது கலப்படமற்ற
தூய்மையான அல்லாஹ்வுக்கு மாத்திரம் அமைந்திருத்தல் வேண்டும்.
o (( எவர் ஒரு செயலை செய்து அதில் என்னைத் தவிர வேறுயாரையும் இணைத்துக்கொள்வாரோ அவரையும்
அவரது செயலையும் விட்டுவிடுவேன்.)) ஹதீதுல்குத்ஸி. நூல்: முஸ்லிம்.
நபியவர்கள் இணைவைப்பை எச்சரித்துள்ளார்கள்.
o ((யா அல்லாஹ் ! புகழ் மற்றும் கபடம் அற்ற ஹஜ்ஜாக ஆக்கித்தருவாயாக !)) எனப் பிரார்த்திப்பார்கள்.
நபிமொழி - நூல் - இப்னு மாஜஹ்.
ஹாஜிகள் தங்களது வணக்கங்கள் மூலம் ஆச்சரியப்படாமல் அல்லாஹ்வுடைய
அருள்களுக்கு முன் தங்களது வணக்க வழிபாடுகள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அல்லாஹ்வின்
அருளுக்கு ஈடாக மாட்டாது என்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
o 14:34. (இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக்
கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி
முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.
அடியார்களே ! ஹஜ் வணக்கங்கள் புனிதத் துவமானது. நிறைவேற்றப்படும்
இடங்களும் புனிதமானது. எனவே அதன் மகிமைக்கு மாசு ஏற்படாவண்ணம் நடந்துகொள்வது ஹஜ்ஜின்
மகிமையில் ஒன்றாகும்.
மிகக்கொடுமையானது என்னவெனில் இந்த மிகப்பெரும் சிறப்புக்குரிய
நிகழ்ச்சியில் அதன் புனிதத்துவத்தை சீர்குலைக்கவும், ஆபத்தான நச்சுக் கருத்துக்களை
இலவசமாக விநியோகிக்கவும், தவறான சிந்தனைப் போக்கை விதைக்கவும், சொத்துக்களை சூறையாடவும்
கெட்ட எண்ணமுடையவர்கள் இந்தப்புனித பூமிக்கு வருவதாகும்.
o 22:25. மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு
மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.
ஹஜ்ஜுடைய போதனைகளில் :- சொல், செயல் மற்றும் எல்லா வணக்கங்களிலும் நபிவழிமுறையை பின்பற்றி அதற்கு முரன்படாமல் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும்
o ((ஹஜ் வணக்கங்களை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்.)) நபிமொழி.
உபரியான (சுன்னத்தான) வணக்கங்களில் பொடுபோக்காக இருப்பது கட்டாயக்
கடமைகளிலும் பொடுபோக்குத்தன்மையை ஏற்படுத்தும். அத்துடன் ஹஜ் வணக்கங்களையே பாதிக்குமளவுக்கு
சென்றுவிடும். எனவே நபிவழியை அறிந்து செயல்படுவதன் மூலம் அனைத்து நன்மைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
ஹஜ்ஜுடைய போதனைகளில், வணக்கவழிபாடுகளில் ஞானமில்லாத (தெரியாத)
செயல்களிலும் இது அல்லாஹ்வின் கட்டளை என்பதற்காக முற்;றாக அடிபணிந்து வழிப்படுவதாகும்.
உதாரணம்:- உமர் ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடும்போது – அல்லாஹ்வின்மீது ஆணையாக நிச்சயமாக
நீ ஒரு கல் எந்த நன்மையையும் எந்த தீங்கையும் செய்யமுடியாது. நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை
நான் காணவில்லையெனில் நான் உன்னை முத்தமிடமாட்டேன் எனக்கூறி முத்தமிடுவார்கள். நபிமொழி
– நூல் - புகாரி.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இருப்பதற்க்கு அதற்காக செலவிடும்
பணம் ஹலாலானதாக இருக்கவேண்டும். ஹராமானவற்றை தவிர்ந்திருக்க வேண்டும்.
ஹஜ்ஜுடைய நாட்களில் திக்ர், அல்குர்ன் ஓதுதல், பாவமன்னிப்பு,
தவ்பா, நன்மையான செயல்களைச் செய்தல், அழைப்புப் பணியில் ஈடுபடுதல் போன்றவைகளில் நேரங்களை செலவுசெய்தல் வேண்டும்
o நபியவர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜைப்பற்றி கேட்கப்பட்டபோது – உணவு விநியோகித்தல்
, ஸலாத்தைப்பறப்புதல் என பதிலலித்தார்கள்.
முன்னோர்களான நல்லவர்கள் ஹஜ் வணக்கத்துகென புறப்பட்டால் திக்ர்;,
தஸ்பீஹ், தஹ்மீத் போன்றவைகளில் எல்லா நேரங்களிலும் ஈடுபடுவார்கள்.
ஹாஜி இப்புன்னிய பூமியில் அமைதியாக, வணக்கவழிபாடுகளின் ஓழுக்கங்களைப்
பேணி பிறருக்கு நோவினை செய்யாது பிரார்த்தனை போன்ற வணக்கங்களில் ஈடுபடுவார்கள்.
- தல்பியாவை (லப்பைக்கல்லாஹும்;ம
லப்பைக் ........) அதிகமாகக்கூறுதல் வேண்டும். இது அடிமைத்தனத்தையும், அல்லாஹ்வுக்கு
வழிப்படுதலையும் தெளிவுபடுத்துகிறது.
ஹஜ்ஜின் போது நல்ல தோழமைகளைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.உடல் உறுப்புக்கள் அனைத்தையும் பாவத்தைவிட்டு பாதுகாத்துக்கொள்ள
வேண்டும்.
பெரியவர்களை மதித்து நடத்தல், சிறுவர்களை இரக்கமாக நடத்துதல்,
இயலாதவர்களுக்கு உதவுதல், உடல் உடை சுத்தங்களைப்பேணுதல் வேண்டும்.
o 2:222. பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக
இருப்போரையும் நேசிக்கின்றான்.'
இஸ்லாமிய சமுகம் பிறருக்கு எந்த வகையிலும் நோவினை செய்யக்கூடாது
என்பதை செயல் ரீதியாக போதிக்கிறது. பெருநாள், வெள்ளிக்கிழமைகளில் குளிப்பதையும், நறுமணம்
பூசுவதையும் நன்மைக்குரியதாக ஆக்கியுள்ளது.
துல்ஹஜ் முதல் பத்துநாட்களின்
சிறப்புக்கள் மற்றும் செய்ய வேண்டிய அமல்கள்
அல்லாஹ் காலங்கள் சிலதை சிறப்புக்குறியாதாக்கி அதன்மூலம் நன்மைகளை
அதிகப்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கியுள்ளான்.
- ((துல்ஹஜ் பத்து நாட்களும் உலக நாட்களில் மிகவும் சிறந்த நாட்களாகும் என நபி (ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விடவுமா ? என வினவப் பட்ட போது ஆம் என்றார்கள். ஆனால் ஒருவர் அல்லாஹ்வுக்காக தனது உயிர், பொருள் ஆகியவற்றைக்கொண்டு சென்று போர் புரிந்து மீண்டும் திரும்பி வராமல் இருப்பவரைத் தவிர எனக் கூறினார்கள்.)) நபிமொழி புகாரி அறிவிப்பவர் - இப்னுஅப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.
இந்நாட்களில் எல்லாவிதமான நல்லசெயல்களில் ஈடுபடல். திக்ர், துஆ,
நபிலான தொழுகைகள், அல்குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல், பெற்றோருக்கு பணிவிடைசெய்தல்,
இரவில் நின்றுவணங்குதல், நோன்புநோற்றல் - குறிப்பாக அரபாதினத்தில் நோன்பு நோற்றல்.
o (( அரபா நோன்பு சென்ற வருட மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவங்களை மன்னிக்கச்செய்யும்.))
நபிமொழி.
உழிஹிய்யா கொடுத்தல்.
தக்பீர் கூறுதல்.
o (( உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் துல் ஹஜ் பிறை கண்டது முதல் குர்பானியை நிறைவேற்றும்
வரை தங்களது முடிகளையும் நகங்களையும் வெட்டாமலிருக்கட்டும்.))
ஹாஜிகள் தங்களது ஹஜ் வணக்கங்களை முறையாக நிறைவேற்றிட பூரண உடல்
உள ஆரோக்கியத்தை அல்லாஹ் வழங்குவானாக. ஏனையவர்கள் இக்காலத்தின் மகிமையை உணர்ந்து நல்
அமல்கள் புரிந்த பாக்கியவான்களாக ஆக்கியருள்புரிவானாக ! ஆமீன் !!!
0 comments:
Post a Comment