26 துல்கஃதா 1433 ஹி (அ) 12 அக்டோபர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்…..
இடம்      : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு : ஒரு அடியானின் அந்தஸ்து அல்லாஹ்வுக்கு அடிபணிவதாகும்.
இமாம்     : அலி அப்துர்ரஹமான்  அல்ஹுதைபி.
இமாம் அவர்கள் ஒரு அடியானின் அந்தஸ்து அல்லாஹ்வுக்கு அடிபணிவதாகும். ஒரு அடியான் அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்க்கும், ஈருலகிலும் வெற்றி பெறுவதற்க்கும் அல்லாஹ்வுக்கு அடிபணிதல் என்பது இன்றியமையாததாகும் என விளக்கினார்கள். மேலும் இறை வணக்கத்துக்கான இலகுவழிகளை எடுத்துக்கூறி அல்லாஹ் மனிதர்களுக்கு கடினமான, அவர்களது சக்திக்கு இயலாத எதனையும் கடமையாக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி உபதேசித்தார்கள்.


 முஸ்லிம்களே ! அல்லாஹ்வுக்கு வழிப்படுவதன் மூலம் அவனது அன்பை பெறுங்கள். அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவைகளை தவிர்ந்து கொள்வதன் மூலம் அவனது கோபத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
ஒரு அடியானின் அந்தஸ்து அல்லாஹ்வுக்கு அடிபணிவதிலும்,
அவனது சக்தி அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைப்பதிலும்,
செல்வம் என்பது தனது தேவைகள் அனைத்தையும் அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொள்வதிலும்,
வெற்றி என்பது அல்லாஹ்வை அழகிய முறையில் வணங்குவதிலும்,
 இறுதி முடிவு அழகியமுறையில் அமைவது அல்லாஹ்வை முறையாக அஞ்சுவதிலும்,
உள்ளம் விரிவடைவது படைப்பினங்களுக்கு நன்மை செய்தல் - உறவினர்களை சேர்ந்து நடத்தல் - பெற்றோர்களை அழகியமுறையில் நடாத்துதல் போன்றவைகளிலும்,
உளஅமைதி அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர்வதிலும்,
 மனிதகாரியங்கள் ஒழுங்குபடுவது – மனித நிலைமைகள் நேர்த்தியாவது அல்லாஹ் தடுத்தவற்றை தவிர்த்து அவன் அனுமதித்தவற்றின் மூலம் முயற்சிப்பதுடன் அனைத்து விடயங்களையும் அல்லாஹ்விடம் பாரம்சாட்டுவதன் மூலமுமாகும்.
ஒரு அடியானின் தோல்வி என்பது  இவ்வுலகில் நம்பிக்கை வைத்து மனநிறைவுபெறுவது, மறுமையை மறப்பது, அல்லாஹ்வுக்கு வழிப்படுவதை பறக்கணிப்பதனாலாகும்.
o   10:7. நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ.
o   10:8. அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
o   32:22. எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம். 

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த சமுகத்திடம் பல படிப்பினைகள் உள்ளன.
அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுள்களைக் கொடுத்தான். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச்செய்தான். மேலும் அவர்கள் அரண்மனைகளையும், நகரங்களையும் கட்டினார்கள். உடல், பார்வை, செவிப்புலன் போன்றவைகளில் அதிசக்தி பெற்றிருந்தார்கள். இப்புவியை அவர்களுக்கு இயலுமைப்படுத்தி, பூமியைவசப்படுத்தி பலவசதிகளையும் இன்பங்களையும்  கொடுத்தான். 
o   46:26. உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. 
மகிழ்ச்சியானவன் பிறர்மூலம் படிப்பினை பெற்றவனாகும். கவலைக்கிடமானவன் இவன் மூலம் பிறர் படிப்பினை பெறுவதாகும்.
o   31:33. ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.
உங்களால் முடியுமான நல்அமல்களை செய்து அல்லாஹ்வை சந்திப்பதற்கு ஆயத்தமாகுங்கள்.
o   23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: 'என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான்.

o   23:100. 'நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக' (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
-அறிந்துகொள்ளுங்கள் ! அனைத்து நன்மைகளையும் அடைந்துகொள்ள உண்மையாக அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களையும் அன்புகொள்வதுடன், கலப்பற்ற எண்ணத்துடன் நபியவர்கள் காட்டிய முறைப்படி அல்லாஹ்வுக்கு  மாத்திரம் வணக்கங்களை; நிறைவேற்றுவதாகும்.
அல்லாஹ்வை வணங்குவதன் மூலமே அல்லாஹ்வின் அன்பு, சுவர்க்கம், ஈருலகிலும் ஈடேற்றத்தையும் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில் இதற்காகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். 
o   51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
வணக்கத்தின் பூரணத்துவம் என்பது முழுமையான பாசத்துடன் நபியவர்களின் வழிமுறைகளுக்குட்பட்டதாக இருப்பதாகும்.
அல்லாஹ் தனது அடியார்கள் நன்மைகளை கொள்ளை அடித்துக் கொள்ளவேண்டுமென்பதற்காக சிறப்புக்குறிய காலங்களையும் நேரங்களையும் வழங்கியுள்ளான்.
o   2:151. இதே போன்று நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
o   2:239. ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
அல்லாஹ் வணக்கங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அவனது அன்பையடைந்து கொள்ளும் வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளான். இதில் சிலவற்றை அடைந்துகொள்ள முடியாதவர்களுக்கு இன்னும் பல வழிமுறைகளையும் வழங்கியுள்ளான். உதாரணமாக பெற்றோரை இழந்தவர்கள் அவர்களுக்காக பிரார்த்தணை புரிவதன் மூலமும் அவர்களுக்காக தர்மம் செய்வது, ஹஜ் கடமையை நிறைவேற்றுவது,  அவர்களுடைய உறவினர்களை சேர்ந்து நடப்பது, அவர்களது நண்பர்களை நேசிப்பது போன்றவைகளைக் கூறலாம்;.
o   ((ஒரு மனிதர் நபியவர்களிடம் யாரஸுலல்லாஹ் ! எனது பெற்றோரின் மரணத்திற்க்குப்பின்னர் அவர்களுக்குப் பணிவிடைசெய்யவேண்டியவை ஏதும் உள்ளதா ? என்று கேட்டபோது ஆம் '' அவ்விருக்காகவும் பிரார்த்திப்பது, பாவமன்னிப்புக்கோருவது, மரண சாசணங்களை நிறைவேற்றுவது, அவர்களது உறவினர்களை சேர்ந்து நடப்பது, அவர்களது நண்பர்களை நேசிப்பதாகும் என பதிலளித்தார்கள்.)) நபிமொழி – நூல் அபூதாவூத்- அறிவிப்பாளர் - அபூ உஸைத் அல்ஸாஇதி.
தாயின் சகோதரி (அத்தை) தாயின் அந்தஸ்தில் உள்ளார்.
o   (( ஒரு மனிதர் நபியவர்களிடம் யாரஸுலல்லாஹ் ! ''அல்லாஹ்வின் தூதரே'' நான் ஒரு பெரிய பாவத்தை செய்துவிட்டேன் எனக்கு பாவமன்னிப்பு உள்ளதா ? என வினவியபோது உனது தாய் இருக்கிறாளா? என வினவியபோது இல்லை எனக்கூற தாயின் சகோதரியை விசாரித்து அவளுக்குப் பணிவிடைசெய்வாயாக ! என உபதேசித்தார்கள்.)) நபிமொழி – நூல் திர்மிதி அறிவிப்பாளர் - இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு.
பணம் செல்வத்தின் மூலம் தர்மம் செய்ய இயலாதவர்கள் தனது உடலால் நல்அமல்கள் செய்து தான் பயனடைவதன் மூலம் தர்மம்செய்யட்டும்
o   ((ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்வது கடமையாகும். அப்பொழுது நபியவர்களிடம் அதற்க்கு சக்தி இல்லாதவர் என்ன செய்வார் என வினவியபோது தனது உடலால் நல்அமல்கள் செய்து தான்பயனடைவதன் மூலம் தர்மம்செய்யட்டும் அதற்கும் இயலாதவர் என்னசெய்வார் என வினவியபோது தேவையுடையவர்களுக்கு உதவிசெய்யட்டும். அதற்க்கும் இயலாதவர் நன்மையை ஏவட்டும்.  அதற்க்கும் இயலாதவர் தீங்குகளை விட்டும் தன்னைத்தடுத்துக்கொள்ளட்டும். இதுவும் ஒரு தர்மமாகும்.)) நபிமொழி - நூல் முஸ்லிம் - அறிவிப்பாளர் - ஸஈத் இப்னு அபீபுர்தா ரலியல்லாஹுஅன்ஹு.
o   ((எவர் பஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் கூட்டாக நிறைவேற்றிவிட்டு சூரிய உதயம்வரை அவ்விடத்திலிருந்து அல்லாஹ்வை திக்ர் எனும் நினைவுகூர்ந்து இரண்டு ரக்அத் தொழுதால் ஒரு பூரணமான ஹஜ்ஜும் உம்ராவும் செய்த நன்மை கிடைக்கும்.)) நபிமொழி
 ஹஜ் கடமையை நிறைவேற்றியவர் மேலதிகமாக சுன்னத்தான ஹஜ் செய்யாத விடத்து அரபா நோன்பு நோற்பது மார்க்கமாகும்.(( அது சென்ற வருட மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவங்களை மன்னிக்கச்செய்யும்.)) நபிமொழி.
 உழ்ஹிய்யா எனும் குர்பானி கொடுத்தல்.
 துல்ஹஜ் பத்து தினங்களில் அல்லாஹ்வை நெருங்குவதற்காக பல நல்வணக்கங்களில் ஈடுபடுதல்.
o   ((துல்ஹஜ் பத்து நாட்களும் உலக நாட்களில் மிகவும் சிறந்த நாட்களாகும். அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவதை விடவுமா ? என வினவியபோது ஆம் என்றார்கள். ஆனால் ஒருவர் அல்லாஹ்வுக்காக தனது உயிர், பொருள் ஆகியவற்றைக்கொண்டு சென்று போர் புரிந்து மீண்டும் திரும்பி வராமல் இருப்பவரைத் தவிர எனக்கூறினார்கள்.)) நபிமொழி புகாரி அறிவிப்பவர் - இப்னுஅப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.
-     முஸ்லிம்களே ! சிறப்புக்குறிய துல்ஹஜ் மாத நாட்களில் சிறப்புக்குரிய நல்அமல்களில் ஒன்று திக்ராகும். இதனை முன்னோர்களான ஸலப்ஸாலிஹீன்கள் சத்தமாக் கூறுவார்கள். இப்னுஉமர் - அபூஹுரைரா  ரலியல்லாஹுஅன்ஹுமா அவர்கள் கடைத்தெருவுக்குச்சென்று சத்தமாக தக்பீர் கூற உடன் மக்களும் சேர்ந்து கூறுவார்கள். 
அல்குர்ஆன் ஓதுதல்.
o   (( யாரஸுலல்லாஹ் ! (அல்லாஹ்வின் தூதரே) இஸ்லாமிய சட்டங்கள் அதிகரித்துவிட்டது. எனவே அனைத்தும் பொதிந்ததாக உள்ள ஒரு வாயிலைக்கூறுங்கள். என வினவியபோது  இறைநினைவில் என்றும் உனது நாவு ஈரத்தன்மையுடன் இருக்கட்டும் - என்றார்கள்.
இறைநினைவில் சிறந்தது  அல்குர்ஆனை ஓதுவதாகும். 
o   33:41. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.
o   33:42. இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
o   133. இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது
அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை முறையாக அஞ்சிக்கொள்ளுங்கள். இஸ்லாத்தின் நம்பகத்தன்மையைப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் இருக்கக்கூடிய இந்தக்காலம் யுத்தம் செய்வது ஹராமாக்கப்பட்ட சங்கையான ஹஜ்ஜுடைய மாதம். ஏவர் ஹாஜிகளாக உள்ளாரோ அவர்  ஹஜ்ஜுக்குத் தேவையானவைகளை இலகுபடுத்திய அல்லாஹ்வைப் புகழ்ந்து அல்குர்ஆனின் போதனைகளை ஹஜ்ஜின்போது பின்பற்றுவதற்க்கு மனஉறுதிகொள்ளவும்.
o   2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது) தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
o   (( எவர் ஆபாச வார்தைகளைத்தவிர்த்து ஒழுக்கமாக ஹஜ்ஜை நிறைவேற்றுகிராரோ அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக அன்று பிறந்த பாலகன் போன்று திரும்புகிரார்.)) நபிமொழி
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜீக்குறிய கூலி சுவர்க்கமாகும்.
ஹாஜிகள் ஹஜ்ஜின்போது நபிவழியையே பின்பற்றட்டும்.
o   ((ஹஜ்ஜின் வணக்க வழிமுறைகளை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்.)) நபிமொழி
ஹஜ் சம்பந்தமான விடயங்களை அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதற்காக நம்பத்தகுந்த அறிஞர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
ஹாஜிகள் முஸ்லிம்களுக்கு தீங்கு செய்வதைத் தவிர்த்து நன்மை செய்வதற்க்கு அவர்களுக்கு முடியுமான முயற்சிகளைச்செய்யவும்.
ஹஜ்ஜுக்கு செல்லாதவர்கள் அவர்களுக்குரிய வழிமுறைகளில் ஈருலகிலும் வெற்றிபெறும் நோக்கில் நன்மைகளைச் செய்யவும்.                         
யா அல்லாஹ் ! ஹாஜிகள் நபிவழிமுறைப்படி ஹஜ் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கிவைப்பாயாக ! ஹாஜிகள் அல்லாதவர்களை இக்காலத்தில் செய்யவேண்டிய நல்அமல்கள் செய்து பாக்கியம் பெற்றவர்களாக ஆக்குவாயாக !!!    

                         ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top