அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால் ..
நாள் - 03 ஸபர் 1435 ஹி (அ) 06 டிசம்பர் 2013
இடம் - மஸ்ஜிதுந்நபவி
இமாம் - அலி அல் ஹுதைபி
தலைப்பு-
உலகை பேராசை கொள்வது பற்றிய எச்சரிக்கை
இமாமவர்கள் அல்லாஹ்வைப்
புகழ்ந்து நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறியவர்களாக ... பாவங்களைத் தவிர்ந்து
கொள்வதன் மூலமும், அல்லாஹ்வுக்கு பொருத்தமாக இருப்பதன் மூலமும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்
என உபதேசம் செய்து விட்டு உலகை பேராசை கொள்வது பற்றிய எச்சரிக்கை எனும் தலைப்பில் உபதேசம்
செய்தார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே
! ஈமான் எனும் விசுவாசத்துடனும், உறுதியுடனும்
அல்லாஹ் விரும்பக்கூடிய பண்புகளையுடையவர்களுக்கு நன்மாராயம் உண்டாகட்டுமாக
! அதற்க்கு மாற்றமாக கெட்ட பண்புகளையுடையவர்களுக்கு கேடு உண்டாகட்டுமாக !
இந்த சமுகத்தில் ஆரம்ப நிலையிலுள்ளவர்களின் சீர்திருத்தம் ஸுஹ்த்
எனும் (துறவறம்) உலகப்பற்றற்ற தன்மை மற்றும் உறுதியிலும் இருந்தது. இவர்களின் அழிவு
அளவு கடந்த பேராசையிலிருந்தது.
கட்டாயமாக இருக்கவேண்டிய (துறவறம்) உலகப்பற்றற்ற தன்மையாவது
அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவைகளை விட்டும் தன்னைக்
கட்டுப்படுத்திக்கொள்ளல், மனிதர்களுடைய ஆத்மா மற்றும் சொத்துக்களுக்கு எவ்விதத்திலும்
தீங்கு ஏற்படாமல் ஒரு முஸ்லிம் ஈடேற்றம் பெறல், ஹராமான (தடுக்கப்பட்ட) வருமானங்களை
விட்டும் தடுத்துக்கொள்ளல், தெளிவற்ற (சந்தேகத்திக்கிடமான)வைகளில் எச்சரிக்கையாயிருத்தல்,
மனிதர்களுடன் சம்பந்தப்பட்ட அமானிதம், பொறுப்பு போன்ற உரிமைகளை கொடுத்துவிடல், ஆகியவைகளாகும்.
இதனைவிட மேலதிகமாக
உலகப் பற்றற்ற தன்மையுடன் நடந்துகொள்வதானது சிறப்பான ஒரு அழகிய செயலாகும். இது மாரக்கம்
வலியுறுத்தக்கூடிய ஒரு விடயமுமாகும். இதன் மூலம் அல்லாஹ் நற்கூலியை வலிமைப்படுத்தி,
அந்தஸ்த்துக்களை உயர்த்தி, உலக கெடுதிகளை விட்டும் பாதுகாத்து, இறுதி முடிவை நல்லதாக
அல்லாஹ் ஆக்கிவைப்பான்.
·
64:16. ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து
கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்;
(அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்;
எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
ஒரு அடியான் அல்லாஹ்வுடைய
அருளால் வெற்றி எனும் ஸ்தானத்தை அடைந்து கொள்வான். அல்லாஹ் அவனது தூதரையும், அவர்ளுடன்
முஃமின்களான இறைவிசுவாசிகளையும் இந்தப்பண்புகளுடன் இணைத்துக்கூறுகின்றான்.
·
9:88. எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் இருக்கும் முஃமின்களும்,
தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்;
அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
விரிந்த மனப்பாங்கு,
சாந்தமான உள்ளம், அழகிய நன்நடத்தை, அழகிய நற்பண்புகள், ஆகியவைகள் (துறவறம்)உலகப்பற்றற்ற
தன்மையை ஏற்படுத்தும். இந்தப்பண்புகள் அல்லது இவைகளில் ஒன்றுடன் அகீதா எனும் அடிப்படை
சரியான நிலையில் இருக்கும் பட்சத்தில் இந்தப்பண்புகளையுடையவரை சாந்தமாக சுவர்க்கத்தில்
நுழைய வைக்கும்.
அனஸ் ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் கூறுகையில் (நாங்கள் நபியவர்களுடன் அமர்ந்திருந்தபோது நபியவர்கள் எங்களை
நோக்கி தற்பொழுது உங்களுக்கு முன்னால் சுவர்க்கவாசியான ஒரு மனிதர் வருவார் என்றார்கள்.
அப்பொழுது மதினாவாசிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் வுழுசெய்த தண்ணீர் தாடியிலிருந்து வடியக்கூடிய
நிலையில் இடது கையில் தனது பாதணியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தார். இரண்டாவது நாளும்
நபியவர்கள் இதேபோன்று கூறியதும் அதே நபர் முதல் விடுத்தம் வந்தது போன்று அதே மனிதர்
நுழைந்தார். மூன்றாவது நாளும் நபியவர்கள் இதேபோன்று கூறியதும் அதே நபர் முதல் விடுத்தம்
வந்தது போன்று அதே மனிதர் நுழைந்தார். நபியவர்கள் எழுந்ததும் அப்துல்லாஹ் இப்னு அமர் அவர்கள் அந்த மனிதரை தொடர்ந்து சென்று அம்மனிதரிடம்
நிச்சயமாக நான் எனது தந்தையுடன் வாக்குவாதப்பட்டு மூன்று நாட்களுக்கு வீட்டினில் நுழையமாட்டேன்
என சத்தியம் செய்து விட்டேன். எனவே அந்நாட்கள் முடியும் வரை எனக்கு தங்குமிடவசதி அளிப்பீர்களா
? எனக்கேடக அதற்கு அவர் ஆம் என பதிலளித்தார்கள்.
அனஸ் ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் கூறுகையில் (( அப்துல்லாஹ் அவர்கள் அந்த மூன்று இரவுகளைப்பற்றிக் கூறுகையில்
இரவில் எந்த வணக்கங்கள் செய்வதையும் ஸுப்ஹுத்தொழுகை வரை நான் காணவில்லை எனினும் தூக்கத்தில்
திடுக்கிட்டால் மறுபுரம் திரும்பி அல்லாஹ்வை நினைவு கூர்ந்து தக்பீர் சொல்வார்கள்.
மேலும் அவரிடமிருந்து நல்லவைகளையே கேட்டேன் என்றார்கள்.
மூன்று இரவுகள்
கழிந்தும் அவரது செயல்களில் குறிப்பிடத்தக்க எதனையும் கண்டுகொள்ளாததால் யா அப்தல்லாஹ் ! எனக்கும் எனது தந்தைக்கும் எந்தக்கோபங்களோ
வெறுப்புக்களோ இருக்கவில்லை. ஆனால் நபியவர்கள் மூன்று தடைவ தற்பொழுது உங்களுக்கு முன்னால் சுவர்க்கவாசியான
ஒரு மனிதர் வருவார் என்றார்கள் அந்த மூன்று தடைவையும் நீங்கள் தான் வெளிப்பட்டீர்கள்.
இதனால் தான் உங்களிடத்தில் தங்கியிருந்து உங்களது நற்செயல்களை நோட்டமிட்டு அதனை நான்
பின்பற்றலாமென எண்ணினேன். ஆனால் பெரிய வணக்கங்கள் எதனையும் காணவில்லையே ! நபியவர்கள்
உங்களைப்பற்றி கூறிய நிலைக்கு எது காரணமாயிருந்தது ? என வினவினார். அதற்க்கவர் நீ என்னிடம்
பார்த்த வணக்கங்களைத்தவிர வேறு எந்த வணக்கங்களும் இல்லை என்று கூறி அவரை அழைத்து ஆனால்
எனது உள்ளத்தில் எந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஏமாற்றுதல்களோ, அல்லாஹ் எவருக்காவது வழங்கியுள்ள
நல்லவைகளைப்பார்த்து பொறாமை கொள்ளக்கூடிய பண்புகளோ என்னிடமில்லை என்றார்கள். அதற்கு
அப்துல்லாஹ் அவர்கள் இப்பண்புகள் தான் உங்களை
இந்நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றது என்றார்கள். நூல்- அஹ்மத் நஸாஈ.
அப்துல்லா இப்னு அமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகையில் நான்
நபியவர்களிடம் யா ரஸுல்லாஹ் ! மனிதர்களில் சிறந்தவர் யார் என வினவினேன். அதற்க்கு நபியவர்கள் ( பரிசுத்தமான உள்ளம், உண்மையே பேசக்கூடிய
நாவுடைய ஒவ்வொரு முஃமினான இறைவிசுவாசியுமாகும்.) என்றார்கள். மேலும் யாரஸுலல்லாஹ்
! பரிசுத்தமான உள்ளம் என்றால் என்ன என வினவினோம்.
அப்பொழுது நபியவர்கள் (பொறாமை, கெடுதி, சதிமோசம், கபடமற்ற தூய்மையான உள்ளத்தையுடைய
இறைவிசுவாசியாகும்.)எனப்பதலளித்தார்கள். நூல்-இப்னு மாஜஹ்.
ஹராம் ஹலால் என்று
பாராமல் உலகை அதிகம் ஒன்று சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையானது உளநோய்களில்
ஒன்றாகும், அழிவுக்கான காரணிகளில் ஒன்றாகும், உணவு விஸ்தீரணம் அற்றுப்போவதற்கான காரணிகளில்
ஒன்றாகும். மேலும் தாமதமாகவும் அவசரமாகவும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்கும் இது ஒரு
காரணியாகும்.
உலோபித்தனம்
இது அல்லாஹ்வை
கோபப்படுத்தக்கூடிய கெட்ட பண்புகளில் ஒன்றாகும்.
(தாராள மனதுடையவர் அல்லாஹ்வுக்கும், மனிதர்களுக்கும்,
சுவர்க்கத்துக்கும் அன்மித்தவராவார். நரகத்தை விட்டும் தூரமானவராவார். கருமித்தனமுடையவர் (உலோபி – கஞ்சன்) அல்லாஹ்வுக்கும்,
மனிதர்களுக்கும், சுவர்க்கத்துக்கும் தூரமானவராவார். நரகத்துக்கு அன்மித்தவராவார்.
தாராள மனதுடைய ஜாஹில் எனும் அறியாமையுடையவர்,
கருமித்தனமுடைய ஆபித் எனும் வணக்கவாதியை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குறியவனாகும்.)
நபிமொழி அறிவிப்பவர் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு - நூல் திர்மதி.
கஞ்சத்தனம் –
இது கடமையான ஸகாத்,
செலவினங்கள் போன்றவற்றை நிறைவேற்றாமல் தடுப்பது, யாசிப்பவர்கள் மற்றும் விருந்தினர்களை
நம்பிக்கையிழக்கச்செய்வது, செல்வத்தின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மையின் வாயில்களை
தடுப்பது போன்றவைகளாகும்.
·
92:8. ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத்
தேவையற்றவனாகக் கருதுகிறானோ
·
92:9. இன்னும்இ நல்லவற்றை பொய்யாக்குகிறானோ
·
92:10. அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
·
92:11. ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள்
அவனுக்குப் பலன் அளிக்காது.
·
9:67. நயவஞசகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில்
சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாவங்களை தூண்டி. நன்மைகளை விட்டும் தடுப்பார்கள்.
(அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை
மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே
ஆவார்கள்.
அதிக கருமித்தனம் –
இது கஞ்சத்தனத்தைவிடவும்
மிகவும் கெட்டவையாகும். இது மனிதர்களுடைய உரிமைகள்,
சொத்துக்களை அடைந்து கொள்வதற்கான பேராசையாகும்.
உலகின் மீது அளவு கடந்த மோகம், பொறாமை காரணமாக அநியாயமாக எல்லைமீறி பிறருடைய
சொத்துக்களை அபகரித்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதாகும். இது அல்லாஹ்வுடைய
வேதனையை துற்சமாக எண்ணுவதும், அல்லாஹ்வைப் பற்றிய பயமின்மையும், அல்லாஹ்வுடைய கடுமையான
தண்டனையை மறந்தமையுமே இவற்றுக்கான காரணிகளாகும்.
நபியவர்கள் இதனை
கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அநியாயம்
செய்வதை உங்களுக்கு எச்சரிக்கை செய்கினறேன். நிச்சயமாக அநியாயம் என்பது மறுமையில் பல
அநியாயங்களாகும். மேலும் அதிக கருமித்தனத்தை பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் முந்தைய சமுதாயம் இதனால்தான் அழிக்கப்பட்டார்கள்.
அவர்கள் அநியாயமாக இரத்தங்களை ஓட்டினார்கள், அனுமதிக்கப்படாத (விபச்சாரத்;)தை ஆகுமாக்கிக்கொண்டார்கள்.)
நபிமொழி, அறிவிப்பாளர் - ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு, நூல் முஸ்லிம்.
அதிக கருமித்தனத்தின்
காரணமாக ஆக்கிரமிப்பு, அநியாயம், விபச்சாரம், உறவினர்களைத் துண்டித்து நடத்தல், தேசத்துரோகச்செயல்கள்,
ஹலால் - ஹராம் பாராமல் சொத்துக்களை அபகரித்தல், கொலைகள் நடைபெறும். ஆனால் பேராசை நிறைவுறாது
பூமி அதன் தங்க வெள்ளி பொக்கிசங்களை வெளியாக்கவேண்டுமென்ற அதிக பேராசை தொடர்ந்து கொண்டே
இருக்கும். அனைத்தையும் தன்னுள்ளே சுருட்டிக்கொள்வார்கள். இவ்வாறு பேராசையுள்ள ஒவ்வொருவரும்
பொதுச்சொத்துக்களை தங்களுடையதென எண்ணிக் கொள்வார்கள்.
தங்கம், வெள்ளி
இவைகள் மூலம் எந்தப்பயனையும் அடைந்து கொள்ளப்போவதில்லை. பின்னர் ஒரு கொலையாளி, குடும்ப
உறவை முறித்துக்கொண்டவன், கள்வன் ஆகியோர் வந்து இதனால் தான் கொலைசெய்தேன், குடும்ப
உறவை முறித்துக்கொண்டேன், எனது கை வெட்டப்பட்டது என ஒவ்வொருவரும் கூறுவார்கள். இது
மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்.
·
18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்;
என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும்.
(அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
அளவு கடந்த உலக
நம்பிக்கை வணக்கங்களை பலவீனப்படுத்தும். மறுமை நினைவை மறக்கச்செய்யும்.
நிச்சயமாக நப்பாசை
உண்மையை மழுங்கடிக்கச்செய்யும்.
படிப்பினை.
·
இச்சைகளைப்
பயந்து கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.
·
அல்லாஹ்வுடைய
கட்டளைகளை மகிமைப்படுத்துங்கள். அதில் அத்துமீறி விடவேண்டாம்.
·
ஒவ்வொரு
முஸ்லிமுடையவும், அண்டை வீட்டினரின் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
·
இன்று முயற்சியும்
செயலுமாகும். நாளை கணக்கும் கூலி வழங்குவதுமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
·
9:105. (நபியே! அவர்களிடம்:) 'நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக
உங்கள் செயல்களை அல்லாஹ்வும், அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்;
மேலும் இரகசியங்களையும் பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள்
- அப்பொழுது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்' என்று கூறும்.
( மறுமை
நாளில் நான்கு கேள்விகள் கேட்கப்படாமல் ஒரு அடியானுடைய இருபாதங்களும் ஓரிடத்தைவிட்டடு
இன்னுமொரு இடத்துக்கு அசையமாட்டாது.
1- வாழ்நாளை எவ்வாறு பயன்படுத்திக்கொண்டாய் ?
2- வாலிபப்பருவத்தை எவ்வாறு பயன்படுத்துக்கொண்டாய்
?
3- செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்துக்கொண்டாய்
? எவ்வாறு அதனை செலவு செய்தாய் ?
4- அறிவின் மூலம் என்ன அமல்கள் செய்தாய் ? என்பவைகளாகும்.)
நபிமொழி.
எனவே உங்களது சக்திக்குடப்பட்ட முறையில் உங்களது ஆத்மாவுக்காக அதி சிறப்புக்குரியவைகளை முன்னேற்ப்பாடு
செய்யுங்கள். உலகமமதையால் அழிக்கப்பட்டவர்களைப்போன்று ஏமாந்துவிடாதீர்கள்.
அல்லாஹ் விரும்பக்கூடிய முறையில் உலகை பயன்படுத்தி ஈடேற்றம்
பெற்றவர்களாக எம்மனைவரையும் ஆக்கிவைப்பானாக. ஆமீன் !!
அல்ஹம்துலில்லாஹ் ! பதிவு அருமை !!
ReplyDelete