ஜுஸ்வு 17

(ஸுரா 21 வசனம்01 முதல் ஸுரா 22 வசனம் 78 வரை)



1) நவீன யுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆனால் குர்ஆனில் தெளிவாக கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகள்
a) வானங்கள் , பூமி முதலில் இணைந்திருந்தன.
b) எல்லா உயிரினத்திலும் தண்ணீர் மூலக்கூறு உண்டு
c) கரு வளர்ச்சியின் நிலைகள்
d) அனைத்தும்
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

2)  ------ மற்றும் -----லிருந்து அல்லாஹ் தூதர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறான்
                a) ஆண்கள்,,,,,,,,,,பெண்கள்
                b) ஜின்கள்,,,,,,,,,,,மனிதர்கள்
                c) மலக்குகள்,,,,,,,,,,மனிதர்கள்
                d) உயிருள்ளவை,,,,,,உயிரற்றவை
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

3)  கவசங்கள் செய்யும் முறையை முதலில் அறிந்தது
                a) நூஹ் நபி             b) இப்ராஹிம் நபி
                c) தாவூது நபி           d) சுலைமான் நபி
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

4)  கஃபாவை, அதனை சுற்றி வருவோர் மற்றும் தொழுவோருக்காக பரிசுத்தப்படுத்தும் படி யாரிடம் கூறப்பட்டது
                a) இப்ராஹிம் நபி
                b) முஹம்மது நபி
                c) ஜிப்ரீல்
                d) ஆதம் நபி
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

5)  மனிதர்கள் புறக்கணித்தவர்களாக மறதியில் இருக்கும் விசயம்
                a) தொழுகை
                b) ஜகாத்
                c) திக்ருல்லாஹ்
                d) கேள்வி கணக்கு ( ஹிஸாப்)
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

6)  அகிலத்தாருக்கான அருள் ( ரஹ்மத்தன் லில் ஆலமீன்) யார்?
            a) இப்ராஹிம் நபி
                b) முஹம்மது நபி
                c) ஜிப்ரீல்
                d) ஈஸா நபி
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

7)  நம் இரட்சகனிடத்தில் ஒருநாள் என்பது நாம் கணக்கிடும் ------ போன்றது
                a) 1000 நாட்கள்
                b) 1000 வாரங்கள்
                c) 1000 மாதங்கள்
                d) 1000 வருடங்கள்
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

8)  “அறுவடை செய்யப் பட்ட அரிதாள்கள் போல கரிந்தது” – எதன் உதாரணம்?
                a) சோம்பலுடன் தொழுகை
                b) சொல்லிக்காட்டும் தர்மம்
                c) அழிக்கப்பட்ட ஊர்கள்
                d) நிராகரிப்போரின் நன்மைகள்
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

  

9)  யஃஜுஜ் , மஃஜுஜ் கூட்டம் திறக்கப்பட்டவுடன் ஒவ்வொரு ----லிருந்தும் இறங்கி வருவார்கள்
                a) பள்ளம்               b) ஊர்
                c) பகுதி                 d) மேடு
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

10)  கரு வளர்ச்சியின் அடுத்தடுத்த நிலைகள்
a) இந்திரியம், முட்டை, கரு
b) வெள்ளை, மஞ்சள், கரு
c) உயிரற்ற நிலை, இடைப்பட்ட நிலை, உயிர் நிலை
d) நுத்ஃபத், அலகத், முள்க()த்
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

11)  ----- தவிர மற்ற சிலைகளை இப்ராஹிம் நபி உடைத்தார்
                a) தன் தந்தை செய்த சிலை
                b) ஆண் சிலை
                c) பெண் சிலை
                d) பெரிய சிலை
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

12)  மனிதர்களில் சிலரை, சிலரை கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால்...
                a) ஊர்கள் அழிக்கப்பட்டிருக்கும்
                b) நன்மைகள் குறைந்திருக்கும்
                c) வணக்கஸ்தலங்கள் இடிக்கப்பட்டிருக்கும்
                d) நோய்கள் பெருகியிருக்கும்
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)
13)  இப்பாகத்தில் விசுவாசிகளின் தந்தை என அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
                a) ஆதம் நபி
                b) நூஹ் நபி
                c) இஸ்மாயீல் நபி
                d) இப்ராஹிம் நபி
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

14)  இவர்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்
                a) விசுவாசம் கொண்டோர் , யூதர்கள்
                b) ஸாபியீன்கள் , கிருத்தவர்கள்
                c) மஜுஸி , இணைவைப்போர்
                d) அனைத்தும்
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

15)  “லா இலாஹ இல்லா அன்த,சுபஹானக,இன்னீ குன்து மினல்ளாலிமீன்”- இத்துஆவை கேட்டது
                a) இப்ராஹிம் நபி
                b) துன்னூன் ( யூனுஸ் நபி)
                c) நூஹ் நபி
                d) ஜகரிய்யா நபி
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

16)  திருக்குர்ஆனின் 22 வது அத்தியாயம் ஆரம்பிப்பது
                a) அலிஃப் லாம் மீம்
                b) அலிஃப் லாம் ரா
                c) ஹா மீம்
                d) மேற்கூறியவற்றில் ஏதுமில்லை
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

17)  எல்லா ஆத்மாக்களும் சுவைக்க வேண்டியது
                a) கடல் உணவு
                b) மரணத்தை
                c) நன்மையை
                d) மறுமையை
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

18)  நபிமார்கள் என்பதன் அரபி சொல்
                a) அவ்லியா             b) ரஸுல்
                c) அன்பியா             d) நபாயா
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

19)  உள்ளச்சத்தோடு குர்பானி கொடுத்தால் மட்டுமே அப்பிராணியின் மாமிசத்தின் ஒரு பகுதி அல்லாஹ்வை அடையும்           
                a) சரி                      b) தவறு
விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

20)  அல்லாஹ் மார்க்கத்தில் எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை
                a) சரி                      b) தவறு

விடை              ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)



0 comments:

Post a Comment

 
Top