அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...

நாள்   - 17 ஸபர் 1435 ஹி (அ) 20 டிசம்பர் 2013
இடம்  - மஸ்ஜிதுந்நபவி
இமாம் - அலி அப்துர்ஹ்மான் அல் ஹுதைபி.
தலைப்பு -  கௌரவம் என்பது அல்லாஹ்வுக்கு வழிபடுவதிலாகும். 

இமாம் அலி அப்துர்ஹ்மான் அல் ஹுதைபி அவர்கள்  கௌரவம் என்பது அல்லாஹ்வுக்கு வழிபடுவதிலாகும் எனும் தலைப்பில், அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை வேண்டி நற்செயல்கள் செய்து, தடுக்கப்பட்டவைகள், பாவங்களைவிட்டும் தவிர்ந்து கொள்வதில் அவசரப்படுவதின் அவசியத்தைப்பற்றி எடுத்துக் கூறினார்கள். இவைகள்தான் ஈருலகிலும் கௌரவத்தை ஈட்டித்தரவல்லதாகும். அல்லாஹ்வின் அருளால் அடியார்கள் மீது இலகுவான, சிறப்புக்குரிய பல வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு, பெற்றோருக்குப் பணிவிடைசெய்தல், உறவினர்களை சேர்ந்து நடத்தல் போன்ற இன்னும் பல வணக்கங்களை  தூய்மையான இஸ்லாமிய ஷரீஅத் உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். இறுதியில் முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கு மத்தியிலும் உபதேசம் செய்தல், அன்பைப் பரிமாறிக்கொள்ளுதல்  போன்றவைகள் கட்டாயமாக அமையப்பெற வேண்டுமென்பதைக் கூறி  முடித்துக் கொண்டார்கள்.


ஒரு அடியானின் கௌரவம் அல்லாஹ்வுக்கு அடிபணிவதிலும்,
ஒரு முஸ்லிமுடைய சக்தி அல்லாஹ்வின் மீது முழுமையான தவக்குல் எனும் நம்பிக்கை வைப்பதிலும்,
போதுமென்ற மனப்பான்மை தனது தேவைகளை தொடராக  அல்லாஹ்விடத்தில் முன்வைப்பதிலும்,
வெற்றி தொழுகையில் அழகாக நிறைவேற்றுவதிலும்,
இறுதி முடிவு அல்லாஹ்வை அஞசுவதிலும்,
உளவிருத்தியும், மகிழ்ச்சியும் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதிலும், உறவினர்களை சேர்ந்து நடப்பதிலும், படைப்பினங்களுடன் அழகியமுறையில் நடந்துகொள்வதிலும்,
உள்ளத்தில் அமைதி அல்லாஹ்வை அதிகம் திக்ர் எனும் இறைநினைவில் அதிகம் ஈடுபடுவதிலுமாகும்.

       மனிதனுடைய அனைத்துக் கருமங்களும் ஒழுங்குபடுவதும், ஸ்திரத்தன்மையடைவதும் இஸ்லாம் அனுமதித்துள்ள காரணிகளைப் பயன்படுத்தி இஸ்லாம் தடுத்துள்ள காரணிகளை தவிர்ந்து கொள்வதுடன், சோம்பேறித்தனமில்லாமல் காரியங்களை உடனுக்குடன் நிறைவேற்றி அனைத்து காரியங்களையும் முழுதைமயாக அல்லாஹ்விடம் பரம்சாட்டுவதிலாகும்.

       ஒரு அடியானுடைய நஷ்டம் அவன் உலகத்துக்கு அடிபணிந்து, உலகத்தையே பொருந்திக்கொண்டு, மறுமையை மறந்து, அல்லாஹ்வுக்கு தான் அடிமையென்பதை புறக்கணிப்பதிலாகும். 
· 10:7. நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ –
·         10:8. அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
·         32:22. எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.

       சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்த முன்னைய சமுகத்தாரிடமிருந்து படிப்பினைகனை அல்லாஹ் வைத்துள்ளான். அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட நாள் வாழ்கையைக் கொடுத்து, அவர்களுக்கு கீழ் நதிகளை ஓட வைத்தான். அவர்கள் கோட்டைகளைக் கட்டி நகரங்களை உருவாக்கினார்கள். செவி, பார்வை, உடல் சக்தியின் மூலம் இன்பம் அனுபவித்தார்கள்.மேலும் அல்லாஹ் அவர்களுக்கு பூமியை வசப்படுத்தியும் அதற்கான காரணங்களையும் வசப்படுத்திக்கொடுத்தான்.
       இவ்வளவு இன்பங்களை அனுபவித்தும் அவர்கள் மனத்திருப்தியடையவில்லை.
· 46:26. உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும் பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
   ஈடேற்றமடைந்தவன் பிறர் மூலம் படிப்பினை பெற்றவனாவான்.
   துரதிஷ்டமானவன் இவன் மூலம் பிறர் படிப்பினை பெறுவார்கள்.
·         31:33. ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.
       உங்களது சக்திக்குட்பட்ட முறையில் நல்லமல்கள் செய்து  அல்லாஹ்வை சந்திப்பதற்கு ஆயத்தமாகுங்கள்.
       உலக ஆசையும் பேராவலும் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.

·         23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: 'என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான்.
·         23:100. 'நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக' (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
       அனைத்து நன்மைகளின் இருப்பிடம் நபிவழியின் நிழலில்    அல்லாஹ்வுக்கு மாத்திரம் வணங்கி வழிபடுவதுடன், தூய்மையான எண்ணத்துடன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அன்பு கொள்வதிலாகும்.
       அல்லாஹ்வுடைய திருப்தி, சுவர்க்கத்தில் நுழைதல், ஈருலக வாழ்கையில் ஈடேற்றம் ஆகியவைகள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலாகும்.
       பகுத்தறிவுள்ளவர்கள் வணங்குவதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர்

 1:56. இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

       வணக்கத்தின் மூலம் பகுத்தறிவுள்ளவர் அதிக பயன் பெறுவர்
       வணக்கத்தின் பூரணத்துவம் அல்லாஹ்வை முழுமையாக அன்புகொள்வதாகும்.
       அடிமைத்துவம், பணிவு ஆகியவைகளின் பூரணத்துவம் நபிவழியின் நிழலிலாகும்.
       அல்லாஹ் தனது அடியார்களின் மீதுள்ள அன்பினால் தன்னை  இலகுவாக அடைந்து கொள்வதற்காக பலவகையான நன்மைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய பல வணக்கங்களை வழங்கியுள்ளான்;.
·         2:151.  இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
·         2:239. நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
வணக்கங்கள் பல உள்ளன. ஒன்றில் மூலம் நன்மையை அடைந்துகொள்ள தவறும்போது இன்னுமொரு வணக்கத்தின் மூலம் நன்மைகளை அடைந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளான்.
உதாரணம் - பெற்றோருக்கு பணிவிடை செய்யும் சந்தர்ப்பத்தை இழந்தவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்தல், தர்மங்கள் வழங்குதல், ஹஜ்ஜை நிறைவேற்றல், அவ்விருவருடைய உறவினர்களை சேர்ந்து நடத்தல், அவ்விருவருடைய நண்பர்களை சங்கைப்படுத்தல் போன்ற செயல்கள் மூலம் அதனை அடைந்து கொள்ளலாம்.
·         (( ஒரு மனிதர் நபியவர்களிடம் எனது பெற்றோர்களுடைய மரணத்தின் பின்னர் அவர்களுக்காக என்மீது ஏதும் உள்ளனவா ? என வினவிய போது ஆம் அவ்விருவருக்காகவும் பிரார்த்தித்தல், பாவமன்னிப்புக்கோரல், அவ்விருவருடைய உடன்படிக்கைகளை நிறைவேற்றல், அவ்விருவருடைய உறவினர்களை சேர்ந்து நடத்தல், அவ்விருவருடைய நண்பர்களை சங்கைப்படுத்தல் ஆகியவைகளாகும் என பதலளித்தார்கள்.)) நபிமொழி - அறிவிப்பாளர் - அபூ உஸைத் அல் ஸாஇதீ ரலியல்லாஹு அன்ஹு.
       தாயை இழந்தவர்கள் தாயின் சகோதரியைக் கவனிக்கட்டும்.
       தர்மம் செய்ய இயலாதவர்கள் தானாக உழைத்து தான் அதனை பயன்படுத்தி  அதன் மூலம் தர்மத்தின் நன்மையை அடைந்துகொள்ளட்டும். நபிமொழியிலிருந்து...
       பாவத்தை விட்டும் தன்னைக்காத்துக்கொள்வதும் தர்மமாகும்
       அனைத்து வணக்கங்களையும் நபிவழியின் நிழலிலே அமைத்துக் கொள்ளுங்கள்.
       நல்ல வணக்கங்கள் சிறியதாக இருந்தாலும் அவைகளை நிறைவேற்றுவதில் தாமதம் வேண்டாம்.
       பாவங்கள் சறியதாக இருந்தாலும் அதனை துற்சமாக மதிக்கவேண்டாம். அவைகளுக்கும் விசாரணையும், கூலியும் உள்ளன.
       பித்அத் எனும்  நூதன செயல்களை எச்சரிக்கையுடன் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அது நன்மைகளை அளித்துவிடும் அல்லது நன்மையின் கூலிகளை குறைத்துவிடும். 
·         47:33. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.
ஹராமாக்க(தடுக்க)ப்பட்டுள்ள அனைத்தையும் எச்சரிக்கையுடன் தவிர்ந்து வெறுத்து துரமாக்கிவிடவும். ஏனெனில் அது உள்ளத்தை மரணிக்கச்செய்யும், நிபாக் எனும் நயவஞ்சகத்தனத்தை உறுதிப்படுத்தும், அல்லாஹ்வைப் புறக்கணிப்பதால் அவன் துர்பாக்கியவான்களின் பட்டியலில் எழுதப்படுவான். அது நயவஞ்சகத்தனத்துக்கு உரமாக அமையும். மேலும் அது இறுதி முடிவு கெட்டதாக அமைவதற்கான காரணிகளில் உள்ளதாகும்.
·         19:59. ஆனால் இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.

·         19:60. தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
உயர்ந்த அந்தஸ்த்துகளை அடைந்து கொள்வதற்காக   நன்மையின் பால் போட்டி போடுவதில் முந்திக்கொள்ளவும்.
·         56:10. (மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
·         56:11. இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
·         56:12. இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
·         56:13. முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்
·         56:14. பின்னவர்களில் ஒரு சொற்பத்தொகையினரும்
       உண்மையிலும் நன்மையிலும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகவும் இஸ்லாமிய சகோதரத்துவத்துடனும்  இருந்துகொள்ளுங்கள்.
·         9:71. முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
       முஸ்லிம்களுடைய விடயங்களில் கரிசணை காட்டல், உரிமைகளை நிலைநாட்டுதல், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிராரத்தித்தல், பயன்தரக்கூடிய விடயங்களிலும், தீங்குகளை தடுக்கும் விடயத்திலும்,  ஆர்வத்துடன் செயல்படுதல் போன்றவைகள் ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகளில் உள்ளனவாகும்.

இறைவணக்கங்களில் ஈடுபட்டு ஈடேற்றம் பெற்றவர்களின் கூட்டத்தில் எம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கிவைப்பானாக. ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top