அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால் .
நாள் :- 26 முஹர்ரம் 1435 ஹி (அ) 29 நவம்பர் 2013
இடம் :- மஸ்ஜிதுந்நபவி
இமாம் :- அலி அல் ஹுதைபி
தலைப்பு :- நபியவர்களின் அழகிய பண்புகள்

இமாமவர்கள் நபியவர்களின் அழகிய பண்புகள் எனும் தலைப்பில் மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப் பெரிய அருள்களில் ஒன்றுதான் நபியவர்கள் தூதராக அனுப்பப்பட்டதாகும் என்பதை விளக்கினார்கள். அதில்   நபியவர்களது அழகிய பண்புகளையும் நற்குணங்களையும், அவர்களது சில நேர்முக வர்ணனைகளையும் எடுத்துரைத்தர்கள்.


முஸ்லிம்களே ! அல்லாஹ்வுடைய அருள் அனைத்து விடயங்களிலும் சூழ்ந்திருப்பதை நினைத்து அவைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.
·         2:64. உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.
·         24:21. அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான்.
அடியார்களே ! அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருளாக நபியவர்ளைத் தூதராக அனுப்பப்பட்டிருப்பதை சிந்தித்துப்பாருங்கள். அவர்களை மனித இனம் மற்றும் ஜின் இனம் ஆகிய இருவகுப்பினருக்கும் அத்தாட்சியாகவும், நேர்வழி பெற்றவர்களுக்கு ஒளியாகவும், புவியிலுள்ள அனைவருக்கும் வெற்றியாகவும் ஆக்கியுள்ளான்.
·         21:107. (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் --அவர்களை ஈமான் எனும் விசுவாசம் கொண்டவர்களுக்கு ஈருலகிலும் அருளாக இருப்பதோடு, அவர்களை விசுவாசம் கொள்ளாதவர்களுக்கும், அவர்களின் கெடுதிகளைக் குறைப்பதுடன் புவியில் தீங்கிழைத்தல் எதிர்ப்பு>அநியாயம் போன்றவற்றைத் தடுப்பதன் மூலம்-- அருளாக இருப்பார்கள்.
இவர்கள் தூதராக அனுப்பப்பட்டதற்குப் பின் புவியிலுள்ளவர்களின் நிலைமையில் --இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம்-- மாற்றம் ஏற்பட்டதை அவதானிக்கலாம்.
மனிதர்கள் பாதுகாப்படைந்தார்கள். படைத்தவனை அஞ்சி. உறுதி,அன்பு, பிராகாசம் மற்றும் அறிவுடன் வணங்கி வழிப்பட்டார்கள். இதன்;மூலம் உணவு விஸ்திPரணம்> பொதுவாக அருள் அபிவிருத்தி, உள்ளத்தில் அமைதி, சமுகத்தில் ஒற்றுமை பரஸ்பரம் மிளிர்ந்ததை நிதர்சனமாகக் காணலாம்.
மேலும் பித்னா எனும் பிரச்சனைகள் களையப்பட்டு, முஸ்லிம்கள் அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்பட்டதோடு, முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகளும் நீதமாக அழகிய முறையில் பாதுகாக்கப்பட்டது.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தூதுத்துவத்தின் மூலம் அய்யாமுல் ஜாஹிலிய்யாக் கால அனாச்சாரங்கள்,  அநியாயங்கள்    அடாவடித்தனங்கள் அனைத்தையும் விட்டுப் பாதுகாப்புப் பெற்று ஒரு மகிழ்ச்சியான வாழ்கையை மனிதர்கள் அடைந்ததனால் இம்மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றி அதனைப் பாதுகாக்க கூடியவர்காளாக மாறினார்கள்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ் மிகப்பெரிய அத்தாட்சிகளில் ஒன்றாக ஆக்கியிருக்கின்றான். மேலும் அவர்களை முழுமைப்படுத்தி அழகுபடுத்தியுமிருக்கின்றான். மனித குலத்தில் படைப்பிலும் அழகிலும் குணத்திலும் முழுமையடைந்தவர்களாகும். படைப்பில் அழகு என்பது நடத்தை,பண்பு, குணம் ஆகியவைகளில் முழுமையைத் தெளிவுபடுத்துகின்றது.
அல்குர்ஆன் இறங்கிய போது அல்குர்ஆனையே தனது பண்பாக ஆக்கிக்கொண்டார்கள்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகையில் (( நபியவர்களுடைய பண்பு அல்குர்ஆனாக இருந்தது. ))
அமீருல் முஃமினீன் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களுடைய வர்ணணையைக் கூறுகின்றபோது (( நபியவர்கள் அதிக நெட்டையாகவோ, அதிக குட்டையாகவோ இருக்காமல் மனிதர்களில் நடுத்தர உயரமுள்ளவராக இருந்தார்கள். அவர்களது முடி முற்றிலும் சுருண்டவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை, இரண்டுக்கும் இடைப்பட்ட விதத்தில் இருந்தது. அவர்களது முகத்தில் வட்டவடிவமான சிவப்புக்கலந்த வெந்நிறமுடையவராக திகழ்ந்தார்கள். இருகண்களின் (கருவிழி) கருமையாய் இருக்கும். இமைகள் நீண்டிருக்கும். மூட்டுக்களும் முதுகெலும்பும் உறுதிவாய்ந்தவையாக இருக்கும். அண்ணலாரை   (முதற்தடவை) திடீரென காண்போர் அச்சம் கொள்வர்.  அவர்களோடு பழகி அவரை அறிந்து கொண்டவர் அவர்களை நேசிக்கத் தொடங்குவர். (பின்னர்) அவர்களைப்போன்று இதற்கு முன்பும் பின்பும் (எவரையும்) பார்த்ததில்லை என்று (நற்குணங்களை)  வர்ணிக்கத்  தொடங்கிவிடுவார்;. )) என்றார்கள்.
அனஸ் ரலியல்லாஹுஅன்ஹுஅவர்கள் கூறுகையில் ((மனிதர்களில் மிகவும் அழகானவராகவும், வீரராகவும், கொடையாளியாகவும் இருந்தார்கள்.)) நூல் புகாரி முஸ்லிம்.
ஹஸன் இப்னு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது : நான் எனது மாமா ஹின்த் இப்னு அபீ ஹாலா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அங்க அடையாளங்களைப்பற்றி வினவினேன். அவர்கள்  நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப்பற்றி வர்ணிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நபியவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும் பிறரால் மதிக்கப்படுபவராகவும் இருந்தனர். அவர்களது முகம் பவுர்ணமி இரவின் சந்திரன் போல் பிரகாசிக்கும். நடுத்தரமான உயரமுடையவர்களை  விட சற்று கூதலாகவும், நெட்டையான மனிதர்களை விட சற்று குறைவானவர்களாகவும் இருந்தனர். தலை நடுத்தரத்தை விட சற்று பெரிதாக இருந்தது. தலை முடி சற்று சுருண்டிருந்தது. தலையில் தற்செயலாக வகிடு படிந்து விடுமாயின் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். முடியை வளர விட்டிருந்தால் அது காதின் சோனையைத் தாண்டிவிடுவதும் உண்டு. மேனி ஒளி வீசிக் கொண்டிருக்கும். படர்ந்த நெற்றி, அடர்ந்த புருவம், இரு புருவங்களும் சேர்ந்திருக்காது. இரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு நரம்பிருக்கும். கோபம் ஏற்படும் போது அது எம்பிக்கொள்ளும். அவர்களை முதன் முதல் காண்போர் மூக்கு நீண்டதாக காண்பர். ஆனால் கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.  (அதையே நீண்டதென எண்ணிக் கொள்வர் ) தாடி அடர்ந்திருக்கும். கன்னங்கள் மிருதுவாக இருக்கும். வாய் அகன்றிருக்கும். பற்கள் இடைவெளி விட்டவையாக இருக்கும்.  அவர்களின் கழுத்து சுத்தமான வெள்ளியால் செதுக்கப்பட்ட உருவத்தைப்போல் அழகாயிருக்கும். அவர்களின் அவையங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும் சதை பிடிப்புள்ளதாகவும் இருக்கும். வயிரும் நெஞ்சும் சமமானதாக இருக்கும். நெஞ்சு விரிந்திருக்கும்.   இரண்டு தோள்புஜங்களுககு மத்தியில் இடைவெளி அதிகமாக இருக்கும். மூட்டுக்கள் உறுதிவாய்ந்தவையாக இருக்கும். ஆடைகளை அகற்றும்போது உடல் பிரகாசிக்கும். நெஞ்சுக்கும் தொப்புளுக்கும் மத்தியில் கோடுகள் போன்ற (நீண்ட) முடியிருக்கும். மார்பகத்திலும், வயிற்றிலும் முடியிருக்காது. முழங்கைகள், தோள்புஜங்கள், நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் முடியிருக்கும். இரு உள்ளங்கையின் மூட்டுக்கள் நீளமாக இருக்கும். உள்ளங்கை விரிந்திருக்கும். உள்ளங்கையும் பாதமும் சதைபிடிப்புடன் இருக்கும். கை, கால், விரல்கள் பொருத்தமான அளவிலிருக்கும். பாதங்கள் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் சமமாய் இருக்கும். அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை. நடக்கும் போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள். பாதத்தைப் பலமாக எடுத்து மெதுவாக வைப்பார்கள். அகலமாக அடி எடுத்து வேகமாக நடப்பார்கள். நடக்கும்போது மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் (அவர்கள் நடை) இருக்கும். யாராவது அழைத்தால் திரும்பும் போது (முகத்தை மட்டும் திருப்பாமல்) முழுமையாகத் திரும்புவார்கள். அவர்களின் பார்வை பூமியைப் பார்த்தே இருக்கும். (நடக்கும் போது) அவர்களின் பார்வை வானத்தைப் பார்ப்பதை விட பூமியைப் பார்ப்பது அதிகமாக இருந்தது. ஒரு பொருளைச் சாதாரணமாக பார்ப்பார்கள். தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு  அவர்கள் பின்னால் வருவார்கள். ( தன்னை) சந்திப்பவர்களுக்கு அவர்களே ஸலாம் கூறி ஆரம்பிப்பார்கள். 
இன்னும் சில நபியவர்களது நேர்முக வர்ணணையிலிருந்து ...
-      எந்நேரமும் சிந்தனையுடன் இருப்பார்கள்.
-      தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடமாட்டார்கள்.
-      அதிக விளக்கமுள்ள பேச்சுக்களை பேசுவார்கள்.
-      அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை மகிமைப்படுத்துவார்கள்
-      வீட்டுக்குள் வந்ததும் நேரங்களை மூன்றாக பிரித்துக்கொள்வார்கள். 1- அல்லாஹ்வுக்குரியது 2- தனது குடும்பத்துக்குரியது 3- தனக்குரியது இதனை தனக்கும் மக்களுக்கும் மத்தியில் பயன்படுத்திக் கொள்வார்கள்.
-      சமுக மட்டத்திலுள்ள அனைத்து தரப்பினருடைய விடயத்திலும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
-      தனது தோழர்களுடன் உடன் இருந்து நல்லவைகளைப் பாராட்டி ஊக்கமூட்டுவார்கள். தடுக்கப்படவேண்டியவைகள் இருந்தால் கண்டித்து சரிசெய்வார்கள்.
-      புன்முறுவலுடன் காணப்படுவார்கள்.
-      நற்குணமுடையவர்களாக இருந்தார்கள்.
·         68:4. மேலும் (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
-      இதுபோன்று இதற்கு முன்னர் யாரும்  அழைக்கப்படவில்லை.
-      அவர்களது வாழ்கையில் அழகிய வழிமுறை இருக்கின்றது.
·         33:21. அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய அழகிய வழிமுறைகளைப் பின்பற்றிய நல்லவர்களாக எம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !!! ஆமீன்

0 comments:

Post a Comment

 
Top