அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால் …
நாள்   - 24 ஸபர் 1435 ஹி (அ) 27 டிசம்பர் 2013
இடம்  -  மஸ்ஜிதுந்நபவி
இமாம் -  ஸலாஹ் அல்புதைர்.
தலைப்பு - ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிம் சகோதரருக்கு செய்யவேண்டிய கடமைகள். 


இமாம் ஸலாஹ் அல் புதைர் அவர்கள் ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிம் சகோதரருக்கு செய்யவேண்டிய கடமைகள் எனும் தலைப்பில், ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமுடைய துன்ப, துயர நேரங்களில் ஆறுதலளிக்க வேண்டுமென்பதை பற்றிக் கூறியதுடன், முஸ்லிமுடைய மிக முக்கிய கடமைகளில் ஒன்றான பிற முஸ்லிமுடைய நிலைமைகளை அறிந்துகொள்ளல், தனது சக்திக்குட்பட்ட முறையில் உதவுதல், போன்றவைகளை விளக்கினார்கள். மேலும் சமகாலத்தில் சில நாடுகளில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய துன்பங்கள், துயரங்கள்  சோதனைகள் ஆகியவைகளை எடுத்துக்கூறி அவர்களுக்காக கட்டாயமாக உதவவேண்டும் என்பதை ஆர்வமூட்டியும், வீண்விரயம் செய்வதை எச்சரிக்கையும் செய்தார்கள்.


•      அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் துயரங்கள் விலகிச்செல்லும்.
ü  39:61. எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது; அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.
•      இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கடுமையான சோதனைகள், பசிக்கொடுமை, அழிவுதரும் அனர்த்தங்கள், பனிப்புயல்கள், கொடிய புயல், கண்டித்தக்க போர்கள் ஆகியவைகளால் மக்கள் மிகவும் வேதனைப்பட்டு, உடல்கள் கடினமான நிலையை அடைந்திருப்பதை அவதானிக்கலாம். வாழ்வின் வேதனை மரண வேதனையை விட கடுமையானதாக மாறிவிட்டது.
•      வெறுச்சோடிய நகரங்கள், தெரியும் உடல்கள், நிர்வாண குழந்தைகள், முறையிடும் உள்ளங்கள், அழு குரல்கள் ஆகியவைகளைப் பார்க்கும் போது உள்ளம் பதறுகின்றது, கண்கள் கண்ணீரை வடிக்கின்றது.
•      பயம், பசி, நோய் போன்றவைகளால் மக்கள் படும் அவலங்கள் அழிவுக்கு இட்டுச் செல்கின்றது.

       கருணை, இரக்கம், இறைவிசுவாசம், இறைபக்தியுடையவர்களே! உங்களிடமுள்ளவைகளிலிருந்து தர்மம் செய்யுங்கள். தர்மம் செய்பவர்களது கூலி அல்லாஹ்விடம் உள்ளது.
ü  12:88.  நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்.
ü  ((ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரராகும். அவர் பிறருக்கு அநியாயம் செய்யமாட்டான். பிறரிடம் அவனைக் காட்டிக் கொடுக்கவும் மாட்டான். எவர் தனது சகோதரனுடைய தேவையை நிறைவேற்றுகின்றானோ அல்லாஹ் அவனுடைய தேவையை நிறைவேற்றுகின்றான். எவர் ஒரு முஸ்லிமுடைய கஷ்டத்தைப் போக்குகின்றானோ அல்லாஹ் அவனது மறுமைநாள்  கஷ்டங்களை போக்கிவிடுவான். எவர் பிறருடைய குறையை மறைக்கின்றானோ அல்லாஹ் மறுமையில் அவனது குறையை மறைக்கின்றான்.)) நபிமொழி – நூல் புகாரி, முஸ்லிம்
       கஷ்டவேளையில் உதவி செய்வது கட்டாயக்கடமை என்பது  (பர்ழு கிபாயா- குறிப்பிட்டசிலர் நிறைவேற்றினாலும் அனைவரது கடமையும் நிறைவேறிவிடும்.) ஏகோபித்த முடிவாகும். இப்னு அப்துல் பர் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்றாகும்.
       ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அளவுக்கேற்ப உதவிகள் அமையப்பெறும். ஈமான் பலவீனமடையும் போது உதவிகளும் பலவீனமடையும். ஈமான் உறுதியடையும் போது உதவியும் உறுதிபெறும்.  இமாம் இப்னுல் கய்யிம் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்றாகும்.
ü  (( நிச்சயமாக அல்லாஹ் மறுமையில் ஆதமுடைய மகனே ! நான் நோய்வாயப்பட்டிருந்தேன் நீ என்னை  நோய் விசாரிக்கவில்லை எனக்கேட்பான். அதற்கு அம்மனிதன் யா அல்லாஹ் நீதான் அகிலத்தாரின் இரட்சகன் எவ்வாறு உன்னை நான் நோய் விசாரிப்பேன் ? என்பான். அதற்கு அல்லாஹ் நீ அறியவில்லையா ? எனது அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். அவனை நோய்விசாரித்திருந்தால் அவனிடத்தில் என்னைக் கண்டுகொணடிருப்பாய் எனபான்.
மேலும் ஆதமுடைய மகனே ! நான் உன்னிடம் உணவளிக்கக்கேட்டிருந்தேன் நீ எனக்கு உணவளிக்கவில்லை. அதற்கு அம்மனிதன் அதற்கு அம்மனிதன் யா அல்லாஹ் நீதான் அகிலத்தாரின் இரட்சகன் எவ்வாறு உனக்கு நான் உணவளிப்பேன் என்பான். அதற்கு அல்லாஹ் நீ அறியவில்லையா ? எனது அடியான் உணவளிக்கத்தேடினான் நீ அவனுக்கு உணவளிக்கவில்லை நீ அவனுக்கு உணவளித்திருந்தால் என்னைக் கண்டுகொணடிருப்பாய் என்பான். மேலும்
ஆதமுடைய மகனே ! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டிருந்தேன் நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை. அதற்கு அம்மனிதன்; யா அல்லாஹ் நீதான் அகிலத்தாரின் இரட்சகன் எவ்வாறு உனக்கு நான் நீர் புகட்டுவேன் என்பான். அதற்கு அல்லாஹ் எனது அடியான் உன்னிடம் தண்ணீர் கேட்டான். நீ அவனுக்கு நீர் புகட்டவில்லை. அவனுக்கு நீர் புகட்டியிருந்தால் உன்னை கண்டுகொண்டிருப்பாய் என்பான்.)) நபிமொழி – அறிவிப்பாளர் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு - நூல் முஸ்லிம்.

யா அல்லாஹ் ! முஸ்லிம்களின் நிலையறிந்து அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றக்கூடியவர்களாக எங்களை ஆக்கிவைப்பாயாக. ஆமீன் !!!   

0 comments:

Post a Comment

 
Top