அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்…
நாள் - 10 ஸபர் 1435 ஹி (அ) 13 டிசம்பர் 2013
இடம் - மஸ்ஜிதுந்நபவி
இமாம் - ஹுஸைன் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷைக்.
தலைப்பு - சமுக வாழ்வில் பாதுகாப்பின் அவசியம்.
இமாம் ஹுஸைன் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷைக் அவர்கள் சமுக வாழ்வில்
பாதுகாப்பின் அவசியம் எனும் தலைப்பில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை கட்டாயமாக இருக்கவேண்டுமென்பதையும்,
அதனை அடைந்துகொள்வதற்கான முயற்சி செய்ய வேண்டுமென்பதையும் எடுத்துக்கூறினார்கள். மேலும்
பாதுகாப்பை அடைந்து கொள்வதற்கான காரணிகளையும், பாதுகாப்பின் சில அடிப்படை விடயங்களையும்
தெளிவுபடுத்தினார்கள். முஸ்லிம்ளுடைய அனைத்து நாடுகளிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடிய
ஒரு செயல் நிலைநாட்டப்படுவதையும், அல்குர்ஆன், அல்ஹதீஸ் இரண்டிலும் ஒற்றுமையாக ஒன்றுபடவேண்டிய
அவசியத்தையும் ஆர்வமூட்டினார்கள். பாதுகாப்பை அடைந்துகொள்வதற்கான உத்தரவாதம் இதுவாகும்.
·
4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.
அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும்
படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி
உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள்
ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக்
கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே
இருக்கின்றான்.
·
3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய
முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக
அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
·
33:70. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;
(எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
·
33:71. (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை
உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும்
அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு
விட்டார்.
பாதுகாப்பு என்பது
மனிதனின் கட்டாய,அத்தியாவசியத்தேவைகளில் ஒன்றாகும். இதனை புத்திஜீவிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக
ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அனைவரும் இதனை நடைமுறைப்படுத்துவதைக் காணலாம்.
·
29:67. அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்)
இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை
அவர்கள் பார்க்கவில்லையா?
பாதுகாப்பு என்பது
பெரும் பாக்கியமாகும். அது இல்லாமல் போவது மிகப்பெரும் சாபமாகும்.
மனிதர்கள் அவர்களது
உயிர், குடும்பத்தினர், மானம், சொத்துக்கள், அனைத்தினது அமைதியை பாதுகாப்பின் மூலமே அடைந்து கொள்கின்றனர்.
இது அனைத்து கட்டமைப்புக்களுக்குமான
அடிப்படையும் நிலைத்திருப்பதற்குமான அத்திவாரமுமாகும்.
பாதுகாப்பில் ஆத்மாவின்
அமைதியும், நிலைமைகளின் ஸ்திரத்தன்மையும் உண்டாகின்றது.
·
(உங்களில் எவர் காலையில் உடலாரோக்கியத்துடனும், அவனது சமுகத்தில்
பாதுகாப்புடனும் அன்றையதின உணவைப் பெற்றுக்கொண்டவனாகவும் இருக்கின்றாரோ அவருக்கு உலகமே
பரிசாகக் கிடைத்தது போன்றாகும்.) நபிமொழி.
அறிஞர்களில் ஒருவர்
கூறுகையில்.. ( பாதுகாப்பு மகிழ்ச்சியாகும். நீதி நேர்மை வலுவான படையணியாகும்.) என்கிறார்.
பாதுகாப்புடன்
உள்ள வறுமையானது பாதுகாப்பற்ற செல்வத்தை விட சிறந்ததாகும்.
ஆகவே ,முஸ்லிம்களே ! பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எல்லாவிதமான
முயற்சிகளிலும் ஈடுபடுங்கள்.
பாதுகாப்புக்கான
வழிமுறைகள்.
·
ரப்புல்
ஆலமீன் அல்லாஹ்வின் தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தை நிலைப்படுத்துவதாகும்.
·
வழிப்படுதலை
அல்லாஹ்வுக்கு உறுதிசெய்வதாகும்.
ü
24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள்
புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது
போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக
பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும். அவர்களுடைய
அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும். அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்;
'அவர்கள் என்னோடு (எதையும் எவரையும்) இணைவைக்காது அவர்கள் என்னையே வணங்குவார்கள்.
·
அல்லாஹ்வுடையவும்,
அவனது தூதருடையவும் போதனைகளில் நிலையாயிருத்தல்.
ü
6:81. நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர்
யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (கூறுங்கள் எனவும் கேட்டார்)
ü
6:82. எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல்
என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோஇ அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும்
அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.
·
வஹியின்
நிழலிலும் நபிவழியிலும் வாழ்வை அமைத்துக்கொள்ளல்.
ü
106:3. இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
ü
106:4. அவனே அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு
அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
(இவற்றுக்கு சரியான ஆதாரமாக உதாரணமாக இந்த அரேபிய தீபகற்பத்தைக்
கூறலாம். ஸ்திரமற்ற நிலையிலிருந்த இந்நாடு முன்னோர்களின் அழைப்புப்பணியைத் தொடர்ந்து
அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ் ஆகிய இரு அடிப்படைகளிலும் நிலைபெற்று நாடு ஸ்திரத்தன்மையடைந்து.
நிலைமைகள் சீராகி பாதுகாப்பு மலர்ந்திருப்பதை கண்கூடாகக் காணலாம்.)
பாதுகாப்பு
இல்லாமல் போவதற்கான பிரதான காரணிகள்;.
(பாதுகாப்பான சூழ்நிலைக்குப் பின் பயமும், ஸ்திரத்தன்மைக்குப்
பின் ஒரு குழப்பமான நிலையும் ஏற்படுவதற்கான காரணங்கள்...)
அல்லாஹ்வுடைய ஷரீஆவைப்
பின்பற்றுவதில் தயக்கம், புறக்கணிப்பு.
நபிமார்களின் தலைவர்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் போதனைகளை பின்பற்றுவதில் தயக்கம், புறக்கணிப்பு.
·
16:112. மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்;
அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது. அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள்
யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின்
அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த
(தீச்) செயல்களின் காரணமாக அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து
அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.
·
42:30. அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள்
கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம். எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
(( இவ்வுலகிலும் மறுமையிலும் ஏற்படக்கூடிய நோய்க்கும், கெடுதிக்கும்
காரணம் பாவங்களே.)) இமாம் இப்னுல் கைய்யிம் அவர்களின் கூற்று.
பாதுகாப்பான சூழல்
இல்லாமல் போவது மிகப்பெரும் சாபமும் சோதனையுமாகும்.
(அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! எங்களில் நல்லவர்கள் இருக்கும்
நிலையில் நாங்கள் அளிக்கப்படுவோமா ? என வினவியபோது ஆம் கெடுதிகள் அதிகரித்தால் அழிக்கப்படுவீர்கள்
எனப்பதிளலித்தரர்கள்.)) நபிமொழியிலிருந்து...
பாதுகாப்பான
நிலையை அடைந்துகொள்வதற்கான காரணிகள்.
·
நன்மையிலும்
பயபக்தியிலும் ஆட்சியாளரும், பொதுமக்களும் ஒருவருக்கொருவர் உதவியாயிருத்தல்.
·
ஒவ்வொருவரும்
தங்;களுக்குரிய பணிகள், பொறுப்புக்களை நிறைவேற்றும் விடயத்தில் ஆர்வத்துடன் செயல்படல்.
·
அல்லாஹ்வுடையவும்
அவனது தூதருடையவும் கட்டளைகளை சமுகத்தில் நிலைநாட்டுவதற்காக ஒத்தாசை வழங்குவதில் அனைவரும்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளல் வேண்டும்.
·
தங்களது
செயல்கள், பண்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்திலும் இஸ்லாமிய சட்டங்களை அணுகுமுறையாக எடுத்துக்கொள்ளல்.
இவ்வாறு இருந்தால் செழுமை, பாதுகாப்பு, பாசம், பரஸ்பரம் அனைத்தும்
உருவாவதோடு சமுகத்தின் அனைத்து நிலைமைகளும் உறுதியடையும்.
(( உங்களில்
சிறந்த தலைவர் யாரெனில் நீங்கள் அவரை அன்புகொள்வீர்கள் அவரும் உங்களை அன்புகொள்வார்.
நீங்கள் அவருக்காக பிரார்த்திப்பீர்கள் அவரும் உங்களுக்காக பிராரத்திப்பார். உங்களில்
கெட்ட தலைவர் யாரெனில் நீங்கள் அவரைக் கோபிப்பீர்கள். அவரும் உங்களைக் கோபிப்பார்.
நீங்களும் அவரை சபிப்பீர்கள். அவரும் உங்களை சபிப்பார். அதற்கு நாங்கள் யாரஸுலல்லாஹ்
! நாங்கள் அவர்களை விட்டுவிடவா ? என வினவியபோது இல்லை அவர் தொழுகையை நிலைநாட்டுபவராக
இருந்தால் வழிப்படுங்கள் என்று நபியவர்கள் பலதடவைகள் கூறினார்கள். மேலும் அறிந்து கொள்ளுங்கள்
! உங்களில் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவரிடத்தில் அல்லாஹ்வுக்கு மாற்றமான
தவறுகள் எதனையும் கண்டால் அந்த அல்லாஹ்வுக்கு மாற்றமான தவறுகளை வெறுக்கவும். அவருக்கு
வழிப்படுவதை விட்டும் வெளியேறிவிடவேண்டாம்.)) என நபியவர்கள் கூறினார்கள்.
·
ஒரு முஸ்லிம்
தலைவர் சமுக சீராக்கலுக்காக முயற்சிப்பது கடமையாகும்.
·
சமுகத்தில்
அனைத்து தரப்பினரிடமும் எல்லா விடையங்களிலும் நீதமாக நடந்து கொள்ளல் வேண்டும்.
·
வாழ்க்கையில்
எல்லாவகையான அநீதிகளுக்காகவும் போராடவேண்டும்.
(( எனது
உம்மத்தில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவர் சமுகத்தை சிறமப்படுத்தினால் அவரையும்
சிரமப்படுத்துவாயாக… எவர் அவர்களுடன் இரக்கமாக நடந்துகொள்கிறாரோ அவருக்கு நீ இரக்கம்
காட்டுவாயாக ! என அல்லாஹ்விடம், நபியவர்கள் பிராத்தித்தார்கள்.)) நூல் முஸ்லிம்.
·
பொறுப்பாளர்கள்
மக்களுடைய தேவைகள், அலுவல்கள், நிலைமைகள் அனைத்தையும் கேட்டறிந்து அவைகளை நிறைவேற்றுவதற்கு
முயற்சிக்க வேண்டும்.
சமகாலத்தில்
சமுகத்தில் ஏற்பட்டுள்ள கெடுதிகளுக்கான காரணம்.
பொறுப்பாளர்கள்
மக்களுடைய விடயத்தில் பொறுப்பின்மையுடன் நடந்து கொள்ளல்.
பாதுகாப்பு
உருவாவதற்கான அடிப்படைக் காரணிகளாவன...
o
அல்லாஹ்வுக்கு
மாற்றம் செய்யாத விடயஙகளில் மக்கள் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடத்தல்.
o
ஒற்றுமைக்காக
ஆர்வத்துடன் முயற்சிப்பதுடன் பிளவுகளை களைந்தெறிய வேண்டும்.
4:59. நம்பிக்கை
கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் உங்களில்
(நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்.
o
சமுகத் தொடர்பை
மிகவும் கவனமாகக் கையாளவேண்டும்.
o
மக்களுக்கு
மத்தியில் ஈமானிய சகோதரத்துவம், பரஸ்பரத்தை உறுதிப்படுத்தல் வேண்டும்.
o
சமுகத்துக்கு
மத்தியில் உள்ள கருத்துவேறுபாடுகள், குரோதம், இயக்கவெறி போன்றவைகளை களைந்தெறிய வேண்டும்.
3:103. இன்னும்
நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள்
பிரிந்தும் விடாதீர்கள்.
o
நன்மையிலும்
பயபக்தியிலும் ஒருவருக்கொருவர் உதவியாயிருத்தல்.
5:2. நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி
செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து
கொள்ள வேண்டாம்.
o
நன்மையை
ஏவி தீமையைத் தடுக்கக்கூடிய செயலை ஆட்சியாளர்கள் மிகவும் கரிசனையுடன் நடைமுறைப்படுத்தவேண்டும்.
3:104. மேலும் (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும்,
நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும்
உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
பாதுகாப்பு எனும் அருளை உணர்ந்தவர்களாகவும், பாதுகாப்படைந்தவர்களாகவும்
எம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! ஆமீன் !!!
0 comments:
Post a Comment