1)
மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
2) விடைகளைக் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தேடவும்
---------------------------------------------------------------------------
ஜுஸ்வு 20
(ஸுரா
27 வசனம்60 முதல்
ஸுரா 29 வசனம் 44
வரை)
1) இறுதி நாளின் அடையாளங்களில்
ஒன்று
a) எகிப்தில் சூறாவளி b) பேசும் பிராணி
c) பலஸ்தீனில் கொடிய நோய்
d) தொடர் மழை
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
2) பிர்அவ்ன்
------ ஐ மாளிகை கட்டும்படி
ஏவினான். அம்மாளிகையின்
நோக்கம்--------
a) ஹாமான் ,,,,,,,,, மூஸா நபியின் இறைவனை எட்டிப்பார்க்க.
b) காரூன் ,,,,,,,, மூஸா நபியின் இறைவனை எட்டிப்பார்க்க
c) ஹாமான்,,,,,,,,,, சூனியக்காரர்கள் கூடுவதற்காக
d) காரூன்,,,,,,,,,,,, சூனியக்காரர்கள் கூடுவதற்காக
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
3) மூஸா நபியை கொலை செய்ய ஆலோசனை செய்தது
a) காரூன்
b) ஊர்த் தலைவர்கள், பிரதானிகள்
c) ஹாமான்
d) அவரது இனத்து மனிதன்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
4) நாம் அல்லாஹ்வை விசுவாசம்
கொள்வதால் இவ்வுலக சோதனையிலிருந்து தப்பலாம்.
a) சரி b) தவறு
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
5) “எனக்கும்
உமக்கும் இக்குழந்தை
கண் குளிர்ச்சியாக
இருக்கும். இதனைக் கொலை செய்ய வேண்டாம்”- எனக் கூறியது
a) மூஸா நபியின் தாயார்
b) பிர்அவ்னின் மனைவி
c) ஹாமான்
d) மூஸா நபியின் சகோதரி
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
6) காரூன் ----- நபியின் கூட்டத்தைச்
சேர்ந்தவன்
a) ஷுஐப் b) யாஃகூப்
c) ஹுத் d) மூஸா
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
7) “ரப்பி இன்னீ ளலம்து நஃப்ஸி பஃபிர்லீ”
எனக் கூறியது
a) ஷுஐப் நபி b) மூஸா நபி
c) இப்ராஹிம் நபி d) லூத் நபி
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
8) நூஹ் நபியின் வயது
a) 1050 வருடங்கள் b) 950 வருடங்கள்
c) 125 வருடங்கள் d) 500 வருடங்கள்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
9) ஸுர் ஊதப்படும் நாளில் ------- மேகங்கள்
போல் நகரும்.
a) மலைகள் b) மரங்கள்
c) கிரகங்கள் d) கடல்கள்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
10 ) மூஸா நபி எகிப்திலிருந்து
வெளியேறி ------- ஐ நோக்கி சென்றார்
a) பலஸ்தீன் b) மக்கா
c) மத்யன் d) சிரியா
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
11) அல்லாஹ்வையன்றி
மற்றவரைப் பாதுகாவலர்களாக
எடுத்துக் கொண்டவர்களின்
உதாரணம்
a) ஈயின் இறகு b) கானல் நீர்
c) சிலந்திப் பூச்சியின் வீடு d) கரையான் புற்று
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
12) காரூனுக்கு
கொடுக்கப்பட்ட தண்டனை
a) பூமிக்குள் புதைந்து போதல்
b) அடித்து கொல்லப்படல்
c) கொடிய வறுமை
d) கடலில் மூழ்கடிக்கப்படல்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
13) இக்குர்ஆன் -------க்கு, எதில் அவர்கள் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ
அதில் பெரும்பாலானவற்றை
விவரித்து கூறுகிறது.
a) யூதர் b) கிருத்தவர்
c) பனீ இஸ்ராயீல் d) காஃபிர்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
14) மூஸா நபி அவரது தாயாரிடம் திரும்பக் கிடைக்கப்
பெற்றது
a) தாயாரின் கண் குளிர்ச்சிக்காக
b) தாயார் கவலை அடையாதிருக்க
c) தாயார் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என அறிய
d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
15) ஒரு விசுவாசியின் பெற்றோர்
இறை நிராகரிப்பில்
இருக்கின்றனர். அப்பெற்றோருக்கு
அவர் பொருளுதவி
செய்யக்கூடாது
a) சரி b) தவறு
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
16) மூஸா நபி ஒருவனை ------ ஆல் கொலை செய்தார்
a) கால் b) கத்தி
c) கை d) ரம்பம்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
17) அநியாயம்
செய்யும் ஊராரை அழிக்கும் முன் அல்லாஹ் அங்கு தூதரை கண்டிப்பாக
அனுப்புவான்
a) சரி b) தவறு
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
18) இப்ராஹிம் நபியும் ----- நபியும் சம காலத்தில்
வாழ்ந்தவர்கள்
a) லூத் b) ஷுஐப்
c) இஸ்ஹாக் d) a & c
e) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
19) மூஸா நபி குறைந்த்து ----- வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென
நிபந்தனையிடப்பட்டார்
a) 5 b)
11
c) 3 d)
8
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
20) “அல் கஸஸ்“ என்பதன் பொருள்
a) அறிவியல்
b) சத்தியம்
c) ஒரு ஊரின் பெயர்
d) சரித்திரம்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
0 comments:
Post a Comment