15 ரமலான் 1433 ஹி --- 03 ஆகஸ்ட் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய
கருத்துக்கள்
இடம் : மஸ்ஜிதுந்நபவி மதீனா முனவ்வரா
தலைப்பு
: ரமழான் விடைபெறும் நேரம் அன்மித்துவிட்டது.
கதீப் : இமாம் ஸலாஹ் அல்புதைர் .
ரமழான் விடைபெறும்
நேரம் அன்மித்து விட்டது. எனவே எஞ்சியுள்ள நாட்களை இஸ்திஃபார் (தவ்பா); எனும் பாவமன்னிப்பு
தேடி அதிகமான நன்மைகளைச் செய்து பாவங்களை விட்டும் தவிர்ந்து அல்லாஹ்வின் அன்பை, பொருத்தத்தை
பெற்றுக்கொள்ள முயற்ச்சிப்போமாக........
o 3:102.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும்
(அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
ரமழான் விருந்தாளி விடைபெறும் நேரம் அன்மித்துவிட்டது.
அது தரும் முழுமையான சன்மானத்தைப் பெற்றுக்கொள்ள முயற்ச்சிப்பீராக !
o ((நபி
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏனைய காலங்களைவிட ரமழான் மாதத்தில் நன்மைகளை
அதிகப்படுத்திக்கொள்ள அதிக முயற்ச்சி செய்வார்கள்.)) நபி மொழி முஸ்லிம்.
இஸ்திஃபார்(தவ்பா) எனும் பாவமன்னிப்பை அதிகம் வேண்டுவீராக.
இம்மாதத்தில் ஏழைகள், நோயாளிகள், தேவையுள்ளவர்கள்
அனைவரையும் ஸதகா எனும் தானதர்மம் மூலம் மகிழ்விப்பீராக.
o 9:119.
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
o 16:90.
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும்
கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும் மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள்
செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக
அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
மீதமுள்ள ரமலானின் நாட்களை நல்ல முறையில்
கழிக்க அல்லாஹ் நமக்கு அருள் புரியட்டும்
0 comments:
Post a Comment