29 ரமலான் 1433 ஹி (அ) 17 ஆகஸ்ட் 2012 அன்று கூறப்பட்ட சில கருத்துக்கள்…..
இடம்      : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு     : ரமலான் மாதத்தின் பின் நல்ல செயல்களில் நிலைத்திருத்தல்.
கதீப்       : அப்துல் முஹ்ஸின் முஹம்மத் அல்காஸிம். 

இமாம் அவர்கள்  ரமலான் மாதத்தின் பின் நல்ல செயல்களில் நிலைத்திருத்தலின் அவசியம் பற்றியும், நிச்சயமாக ஒவ்வொரு அடியானும் நல்லமல்களில் தொடர்ந்து கவனமாகவும், விடா முயற்சியுடனும் ஈடுபடுவது என்பது அவனது நல்ல செயல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கான அத்தாட்சியாகும் எனவும் உபதேசித்தார்கள்.



      அளவற்ற அருளாளன் அல்லாஹ் தனது அடியார்களுக்கு அவர்கள் தங்களது நன்மை ஏடுகளை அதிகப்படுத்திக் கொள்ளும் பொருட்டு பல சிறப்புக்குரிய காலங்களையும் நேரங்களையும் வழங்குகிறான். இது நிரந்தரமற்றதாக குறுகியதாக வழங்கி இதனை நன்மையின் ( பகலில் நோன்பு, கொடை, தானதருமம், இரவில் தஹஜ்ஜுத், குர்ஆன் திலாவத், பிராரத்தனைகள் )   மூலம் பயன்படுத்திக் கொண்டவர்களை ஈடேற்றம் பெற்றவர்களாகவும், கவனயீனர்களை நன்மையை இழந்தவர்களாகவும் மாற்றுகிறான். இந்த பொன்னான காலத்தில் எத்தனையோ பாவிகள், பின்தங்கியவர்கள் இக்காலத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் ஈடேற்றம் பெறுகின்றனர்.
o    74:38. ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.

      இமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னுதைமிய்யா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் படிப்பினை என்பது முடிவுகளின் பூரணத்துவத்தைக்கொண்டதாகும், மாற்றமாக துவக்கத்தின் குறைகளைக்கொண்டல்ல என கூறினார்கள்.

      தவ்பா,இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்பானது நல்அமல்களின் முடிவுரையாகும்.

      நல்அமல்கள் அனைத்தும் முடிவுகளைக்கொண்டே தீர்மானிக்கப்படும். 

அலி ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் நீங்கள் அமல்கள் செய்வதில் கவனம் செலுத்துவதை விட அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என கூறினார்கள்.

o    5:27. (நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) 'நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்' என்று கூறினார். அதற்கு (முன்னவர்) 'மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்' என்று கூறினார்.

o    15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 

      ரமழானில் நல்அமல்கள் செய்தவர்கள் அதில் நிலையாக இருக்கட்டும்.
o    (நல் அமல்களில் சிறந்தது செயல்கள் குறுகியதானாலும் நிரந்தரமாக, நிலையாக இருப்பதாகும்.) நபிமொழி புகாரி,முஸ்லிம். 

இமாம் அன்நவவீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நிலையான குறுகிய செயல் நிலையற்ற அதிக செயல்களைவிட சிறப்பானதாகும். நிலையான குறுகிய  அமல் மூலம் படைத்தவனை வழிப்படுவது, திக்ர் எனும் நினைவுகூர்வது, கண்காணிப்பு, தூய்மையான எண்ணம் போன்றவைகள் நிலையாக இருக்கும். நிலையான குறுகிய செயல் நிலையற்ற அதிக செயல் மூலம் பெறக்கூடிய பயனை விட அதிக பயனைத்தரும். ரமழான் மாதத்தில் நல்அமல்கள் என்பது நிரந்தரமானதாகும். மேலும் நோன்பு நோற்றல், அல்குர்ஆன் ஓதுதல், இரவில் நின்று வணங்குதல், தர்மம்.செய்தல், பிரார்த்தனை புரிதல், போன்ற அமல்கள் அனைத்தும் ஏனைய காலங்களிலும் உள்ளது. ஒருவருடைய செயல் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அடையாளம் நன்மையின் பின் நன்மைகள் தொடர்வதாகும். ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கான அடையாளம் நன்மையின் பின் பாவங்கள் தொடர்வதாகும். பாவத்தை நன்மை அழித்துவிடும் நன்மையை நன்மை உயர்த்திவிடும். என கூறினார்கள்.

o    7:156. 'ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும் (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்' என்று கூறினான். 

ஸகாதுல் பித்ர்
      ரமலான் மாத இறுதியில் நோன்பாளியை பரிசுத்தமாக்குவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாகவும் ஸகாதுல்பித்ரை அல்லாஹ் மார்க்கமாக்கியுள்ளான்.
      இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஈத்தம்பழம், கோதுமை, போன்ற தானியங்களிலிருந்து ஒரு ஸாஉ அளவை ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண், சிறியோர், பெரியோர், அடிமை, சுதந்திரமானவன் அனைவர் மீதும் ஸகாதுல் பித்ராக கடமையாக்கினார்கள்.என கூறினார்கள்.
      கருவில் உள்ள சிசுவுக்கும் கொடுப்பது விரும்பத்தக்கதாகும்.
      அவரவர் இருக்குமிடத்தில் வினியோகம் செய்வதே சிறப்பாகும். தேவைப்படுமிடத்து வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யலாம். பெருநாள் தினத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும் வினியோகிக்கலாம். இருப்பினும் பெருநாள் தொழுகைக்கு போகும் போது வினியோகிப்பது விரும்பத்தக்கதாகும்;. 

ஈதுல்பித்ர் நோன்புப்பெருநாள்
      பெருநாள் என்பது அருள்புரியப்பட்ட  மாதத்தில் செய்த நல்அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக வரும் மகிழ்ச்சியாகும்.
      பெருநாள் தின முதல் இரவு முதல் பெருநாள் தொழுகை வரை தக்பீர் சொல்வதும் மேலும் அழகான ஆடை அணிந்து பேரீத்தம் பழம் உண்டு ஒரு பாதையால் சென்று மறு பாதையால் வருவதும் நபிவழியாகும்.
      பெருநாள் தொழுகை தவறியவர் அதே முறையில் தனியாகவோ கூட்டாகவோ இரண்டு ரக்அத் தொழவும்.
பெருநாள் என்பது அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கிய அருளின் மகிழ்ச்சியாகும். இத்தினத்தில் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூறல் வேண்டும்.
o    (நிச்சயமாக  பெருநாள் தினம் என்பது உண்ணல்,குடித்தல் திக்ர் போன்றவைகளில் ஈடுபடும் நாளாகும்.) நபிமொழி அபூதாவூத்.

      பெருநாளில் இஸ்லாமிய வரைமுறைகளை மீறாமல் நடக்கவேண்டும்.    

0 comments:

Post a Comment

 
Top