22 ரமலான் 1433 ஹி  --- 10 ஆகஸ்ட் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்..
இடம் : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு : இஃதிகாபும் அதன் ஒழுங்குமுறைகளும்.
கதீப் : இமாம் ஹுஸைன் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷெய்க் .

இமாம் அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமும் இஃதிகாப் இருக்கும்பொழுது கடைபிடிக்கவேண்டிய, மற்றும் தவிர்ந்துகொள்ளவேண்டிய விடயங்களையும், பெண்களுக்கு சில அறிவுரைகளையும் கூறினார்கள்.
இரவும் பகலும் அதன் பயணத்தை வேகமாகத் தொடர்ந்து கொண்டிருப்பதை உடன் உணரும் நாம் எஞ்சி இருக்கக்கூடிய நாட்களை நன்மைகள் பல செய்து அல்லாஹ்வின் அன்பைப்பெற்று ஈருலகிலும் வெற்றிபெற முயற்ச்சிக்க வேண்டும்.
o    33:70. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
o    33:71. (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழி படுகிறாரோ அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.

ரமலான் மாதத்தின் இறுதிப் பத்தின் சிறப்புகள் அதிகம் உள்ளது.அதில் ஒரு இரவு ஆயிரம் (1000) மாதங்களைவிடச் சிறப்புக்குரியது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தின் இறுதிப்பத்து வந்துவிட்டால் இரவில் நின்று வணங்குவதுடன் உடன் குடும்மபத்தினர்களையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுவார்கள்.
o    (( யார் ஈமான்கொண்டு அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாக லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குகிராரோ அவரது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.)) நபிமொழி

இஃதிகாப் இருத்தல்

இஃதிகாபின் ஒழுங்குமுறைகள் …
      நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். அவர்களது மனைவிமார்களும் நபியவர்கள் உயிருடன் இருக்கும்போதும் மரணித்த பின்னரும் இஃதிகாப் இருந்துள்ளார்கள்.
இஃதிகாபின் உயரிய நோக்கம் :-
      படைக்கப்பட்டவைகளின் தொடர்பை தவிர்த்து அல்லாஹ்வை வணக்கத்தின் மூலம் நெருங்குவதற்க்காக அல்லாஹ்வின் இல்லமாம் பள்ளிவாயலில் தரித்திரித்தலாகும்.
      இதன் குறுகிய காலப்பகுதியானது ஒரு இரவும் ஒரு பகலுமாகும்.
      பெண்கள் கணவரின் அனுமதியின்றி இஃதிகாபில் இருக்கமுடியாது.
      மேலும் அவசியமின்றி பள்ளியைவிட்டு வெளியேராதிருக்க வேண்டும்.
      அல்லாஹ்வின்பால் நெருங்குதல்.
      அதிகமாக பிரார்த்தனை செய்தல். 
      (அல்லாஹும்ம இன்னக அபுவ்வுன் துஹிப்புல் அப்வ பஃகுஅன்னீ '' யாஅல்லாஹ் நிச்சயமாக நீ மன்னிப்பவன் மன்னிப்பை விரும்புபவன் என்னை மன்னிப்பாயாக !!!'' )) என்று கூறுதல்.
      அல்குர்ஆனை அதிகமாக ஓதுதல்.
      பள்ளிவாயலின் ஒழுங்குமுறை, மகிமை, அந்தஸ்து, சுத்தம் போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளல். 
      தன்னை சந்திப்பதற்காக வருபவரிடம் பேசுவதில் தவறில்லை.
      இஃதிகாபின் உயரிய நோக்கத்தை எந்நேரமும் மனதில் கொள்ளல்.
 
இமாமவர்கள் தனது இரண்டாவது குத்பாப் பேருரையில் , புனித மக்கா நகரில் நடைபெறவுள்ள இஸ்லாமிய ஒன்றுகூடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி இதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிம் தலைவரும் அவருக்குரிய உன்மையான கடமைப்பாட்டை உணரந்து சுய இலாபங்களை மறந்து சமூகத்துக்கு உரிய சேவைகளை செய்வதற்காக அல்குர்ஆனையும் அல்ஹதீஸையும் சட்டவாக்க நூலாகக்கொள்ளுமாறு உபதேசித்தார்கள்.
o    17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.
o    (( உங்களுக்கு அல்குர்ஆனையும், எனது வழிமுறையையும் விட்டுச்செல்கிறேன் இவையிரண்டையும் பற்றிப்பிடித்து பின்பற்றும்  காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள்.)) நபிமொழி

0 comments:

Post a Comment

 
Top