05 துல்கஃதா 1433 ஹி (அ) 21 செப்டம்பர் 2012 அன்று கூறப்பட்ட
சில முக்கிய கருத்துக்கள்
இடம் : மஸ்ஜிதுந்நபவி மதீனா முனவ்வரா
தலைப்பு :நபி முஹம்மது
ஸல்ல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுடைய மகிமையைப்பாதுகாத்தல் (நபியை நேசித்தல்) .
இமாம் : ஹுஸைன் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷைய்க்.
இமாம் அவர்கள் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய
மகிமைக்கு பாதகம் ஏற்படுத்தப்படும் போது அதனைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை
என்றும்,
உண்மைக்கும் பொய்க்கும், (நேர்வழிக்கும், வழிகேட்டுக்கும்) இடையிலான போராட்டம்
யுகமுடிவு நாள்வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும்,
வழிகேட்டின் சத்தம் எவ்வளவு
உயர்ந்தபோதும் உண்மையே (நேர்வழியே) வெல்லும் என்றும்,
நபி முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹிவஸல்லம்
அவர்களுக்கு உதவுவதென்பது அவர்களுடைய வழிமுறைகளையும், அடிச்சுவுடுகளையும் பின்பற்றுவதன்
மூலமே முடியும் எனவும் உபதேசித்தார்கள்.
உண்மைக்கும் பொய்க்கும்,
(நேர்வழிக்கும், வழிகேட்டுக்கும்) இடையிலான போராட்டம் காலத்துக்குக் காலம், இடத்துக்கிடம் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இருப்பினும் உண்மையே வெல்லும். வழிகேடு முடிவுற்று அழிந்தே தீரும்.
o 17:81.
(நபியே!) இன்னும் 'சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து
போவதேயாகும்' என்று கூறுவீராக.
அல்லாஹ் அவனது இறைவிசுவாசிகளான
அடியார்கள் அனைவரையும் அல்லது சிலரை பாவத்தின்மூலம் எல்லை மீறிய கெட்டவர்களைக் கொண்டு
பரிசோதிப்பான். இது அல்லாஹ்வுடைய சட்டவாக்கத்தில் உள்ளதாகும். இதுபோன்ற சோதனை(நிகழ்வு)களெல்லாம்
பெரும் ஞானத்துடனும் தூரநோக்குடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
o 29:2.
'நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்' என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல்
விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
o 29:3.
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் ஆகவே
உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக
அறிவான்.
o 3:140.
உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால் அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது;
இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக்
காரணம் ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும் உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக்
கொள்வதற்குமே ஆகும்; இன்னும் அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
இஸ்லாமிய சமூகம்
அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விடயம் நாம் நிலையான தூதுத்துவத்தையும், மலைத்தொடர்போன்ற
தெளிவான அடிப்படைக் கோட்பாடுகளையும் உடையவர்கள். முஸ்லிம்களுக்கு எத்தனை சோதனைகள்,
துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்ட போதும் இறுதியில்
முஃமின்களான இறைவிசுவாசிகளுக்கே வெற்றியாகும்.
இந்த அல்லாஹ்வுடைய சட்டம் நிலையானதாகும்
o
3:120.நீங்கள் பொறுமையுடனும் பயபக்தியுடனுமிருந்தால்
அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள்
செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
o 12:110.
(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து
விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் உடன் இருந்தவர்களுடனும் பிரஅவ்ன்
கடுமையாக நடந்து கொண்டபோது ?
o 7:128.
மூஸா தம் சமூகத்தாரிடம்: 'அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்;
நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம்.தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு
அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்'
என்று கூறினார்.
உண்மைக்கும் பொய்க்கும், இடையிலான போராட்டம் அநியாயத்திற்கு
முற்றுப்புள்ளியாகும்.
o 7:136.
ஆகவே அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு
இருந்ததால் அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.
o 7:137.
எனவே எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும்
மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும்
அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும் உறுதியாகவும் இருந்த காரணத்தால் அவர்கள்
மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும்
அவனுடைய சமூகத்தாரும் உண்டு பண்ணியிருந்தவற்றையும் கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம்
தரைமட்டமாக்கி விட்டோம்.
இது போன்ற
சோதனை,துன்ப சந்தர்ப்பங்களில் இறைவிசுவாசியுடைய நிலை எவ்வாறு இருக்க வேண்டும்?
உண்மையான, நேர்மையான உள்ளத்துடன் அல்லாஹ்வின்பால் மீள்தல்.
காலங்கள் பல கடந்தபோதும் ஈருலகிலும் வெற்றி என்பது உண்மையான
இறை விசுவாசிகளுக்கே என்ற உறுதியான நம்பிக்கை கொள்ளல்.
o 3:173.
மக்களில் சிலர் அவர்களிடம்; 'திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு
விட்டார்கள். எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்' என்று கூறி (அச்சுறுத்தி)னர்;
ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: 'அல்லாஹ்வே எங்களுக்குப்
போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்' என்று அவர்கள் கூறினார்கள்.
o 3:174.
இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்) மேன்மையையும் பெற்றுத்
திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின்
விருப்பத்தைப் பின்பற்றினார்கள். அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
உண்மையான உதவி அல்லாஹ்விடமே உள்ளது என்ற உறுதியான நம்பிக்கையுடன்
மனிதர்கள் தன்னால் இயலுமானதை செய்தல்.
அல்லாஹ்வுடைய உதவி தாமதமாகுவதன் மூலம் பல (அல்லாஹ்வின் பக்கம்
மக்களுடைய தொடர்பு அதிகரிப்பது போன்ற) ஞானங்கள் மறைந்துள்ளதை நடைமுறையில் உணர்ந்துகொள்ளல்.
o 22:40.
அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக
அல்லாஹ் வலிமை மிக்கோனும் (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.
o 22:41.
அன்றியும் இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால்
இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான
காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள்.மேலும் சகல காரியங்களின்
முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து பொறுமை கொள்ளல்.
o ((அறிந்து
கொள்ளுங்கள் ! நிச்சயமாக உதவி பொறுமையுடனும், விடுதலை சோதனையுடனும், இலேசு, கஸ்டத்துடனும்
உள்ளது.) நபிமொழி.
நபியை தூற்றுபவர்களுக்கான எதிர்ப்பு
நபியை தூற்றுபவனை அல்லாஹ் அனைத்து விதமான நன்மைகளை விட்டும்
இழக்கச்செய்கிறான். ஈருலகிலும் தண்டனையும் வழங்குவான்.
o 108:3.
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.
o 94:4.
மேலும் நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
o 93:5.
இன்னும் உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது
நீர் திருப்தியடைவீர்.
o 15:95.
உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
நபியுடைய அந்தஸ்தைப் பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின்
கடமையாகும். அதன் போது இஸ்லாமிய வரைமுறை மீறாது, தனது சக்திக்கு உட்பட்டு சமூகத்துக்கு
கேடுவராத வண்ணம் பயன் தரும் விதத்தில் முயற்சிக்க
வேண்டும்.
நபியை தூற்றுபவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தலின் போது உணர்ச்சி
பூர்வமான முறையில் அல்லாமல் அறிவுபூர்வமாக செய்தல் கடமையாகும். எல்லைமீறாமல் மென்மையாக
இருக்கவேண்டும்.
o
33:48. அன்றியும் காஃபிர்களுக்கும்
முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து)
விடுவீராக; அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக!
அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்..
o ((யஹுதிகளின்
ஒரு குழு நபியவர்களிடம் வந்து உனக்கு சாபம் உண்டாகட்டும் என்று கூறியபோது உடன் ஆயிஷா
ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உங்களுக்கு சாமும், கேடும் உண்டாகட்டும் என்று கூறியதற்க்கு நபியவர்கள் ஆயிஷாவே ! நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்.
எல்லா விடயத்திலும் மென்மையை விரும்பக்கூடியவன் என்றார்கள். அப்பொழுது ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா நபியவர்களிடம் அவர்கள் சொன்னதைக்
கேட்கவில்லையா ? என்று கேட்டபோது ஆம் அவர்கள் கூறியதுபோன்று உனக்கும் அதேபோன்று உண்டாகட்டும்
என்று கூறிவிடுவாயாக என பதிலளித்தார்கள்.)) நபிமொழி புகாரி,முஸ்லிம்
நாம் நபியுடைய அந்தஸ்தை உள்ளத்திலும் (நடைமுறைவாழ்விலும்) செயலிலும்
எடுத்து நடக்கவேண்டும்.
o 15:94.
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக;
இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!
o 15:95.
உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
ஆட்சியாளர்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள், தொலைத்தொடர்பு சாதனங்களையுடையவர்கள்
அனைவர் மீதும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைவிடயங்களையும், நபியுடைய உண்மையான வரலாறுகளையும்
உலகத்துக்கு எடுத்துரைப்பது கடமையாகும்.
நபியவர்களை
நேசித்தல்.
- (( எனது ஆத்மா எவன் கைவசம் உள்தோ அவனின் மீது ஆணையாக! எவர் தனது ஆத்மா, குழந்தைகள், சொத்துக்கள், மனிதர்கள் அனைவரையும் விட என்னை நேசம் கொள்ளவில்லையோ அவன் பூரண இறைவிசுவாசியாகமாட்டான்.)) நபிமொழி.
உண்மையான இறைவிசுவாசம் சொல்லிலும் செயலிலும் உள்ள நன்மக்களாக
நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கிஅருள் புரிவானாக.
ஆமீன் !!!
நல்ல , பயனுள்ள உரை
ReplyDelete