27 ஷவ்வால்
1433 ஹி (அ) 14 செப்டம்பர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்….
இடம் : மஸ்ஜிதுந்நபவி மதீனா முனவ்வரா
தலைப்பு : இப்லீஸ்
எனும் ஷைத்தானின் ஊசலாட்டங்கள்.
இமாம் : ஸலாஹ் அல்புதைர்
இமாம் அவர்கள் “ இப்லீஸ் எனும் ஷைத்தானின் ஊசலாட்டங்களின் சில
தோற்றங்களை எடுத்துக்கூறி, அதன் பின்னால் செல்லக் கூடியவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து
பற்றியும், அதிலிருந்து பாதுகாப்புபெறுவதற்கான வழிமுறைகள் ”பற்றியும் உபதேசித்தார்கள்.
முஸ்லிம்களே ! அல்லாஹ்வை தக்வா எனும் இறையச்சத்தின் மூலம் பயப்படுங்கள். இதுவே முயற்சியின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடியவற்றில் சிறந்ததாகும்.
முஸ்லிம்களே ! அல்லாஹ்வை தக்வா எனும் இறையச்சத்தின் மூலம் பயப்படுங்கள். இதுவே முயற்சியின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடியவற்றில் சிறந்ததாகும்.
o
3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்;
மேலும் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
ஊசலாட்டம் (வீண்
சந்தேகம்) என்பது ஆதமுடைய மக்களை வழிகெடுப்பதற்கான ஷைத்தானின் சூழ்ச்சியாகும். தன்னை
வழிப்படக்கூடியவர்களை சந்தேகம், பிரமைகள், ஊகங்களைக் கொண்டு ஷைத்தான் வட்டமிடுவான்.
மேலும் கற்பனை, குழப்பம், மிகைப்படுத்தல் மூலம்
பதற்ற நிலையை ஏற்படுத்தி தேவையற்ற வேண்டப்படாத சிரமங்களை அவர்கள் மீது ஏற்படுத்துவான்.
ஷைத்தானின்
சூழ்ச்சிகளில் சில ...
1) ஈமான் எனும் இறைவிசுவாசத்துடன் நேரடித் தொடர்புடைய படைப்பின்
உருவாக்கம், மீள் உயிர்ப்பித்தல், அர்ரஹ்மான் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைப்பெற்று)
விட்டான் என்பன போன்ற விடயங்களில் இது எவ்வாறு
சாத்தியமாகும் ??? என்று வீண் சந்தேகங்களை
ஏற்படுத்துவான்.
o
(( உங்களிடம் ஷைத்தான் வருகைதந்து இதனை யார் படைத்தான் ? இதனை யார் படைத்தான் ? என்று
கேள்வி கேட்டு இறுதியில் உன்னைப் படைத்தவனை (உனது ரப்பை) படைத்தது யார் ? என்று கேட்பான்.
இந்த நிலைக்கு வந்தால் அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோரி அதிலிருந்து உங்களை தடுத்துக்கொள்ளுங்கள்.))நபிமொழி
புகாரி,முஸ்லிம்
2) வுழு, குளிப்பு போன்ற
சுத்தம் பற்றியவைகளில் வீண் சந்தேகத்தை ஏற்படுத்துதல். (சிலர் வுழுசெய்யும்பொழுது
உறுப்புக்களை பலமுறை கழுவி சிரமப்படுவதைப்போன்று)
அறிஞர் இப்னுல் ஜவ்ஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்.
ஒரு மனிதர் தண்ணீரில் பலமுறை முங்கி குளித்துவிட்டு நான் குளித்துவிட்டேனா இல்லையா
? என சந்தேகம் கொள்பவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது நீ சென்றுவிடு
உனக்கு தொழுகை கடமையில்லை என்று பதிலளித்தார். அது எவ்வாறு முடியும் ? என்று மற்றவர்
கேட்டதற்க்கு கீழ்வரும் நபிமொழியை எடுத்துரைத்தார்கள்.
o
((மூன்று
நபர்களை விட்டும் எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது.
1- பைத்தியக்காரன்
தெளிவு பெறும்வரை
2- உறக்கத்தில்
உள்ளவன் விழிக்கும்வரை
3- பையன்
(சிறுவர்) பருவவயதை அடையும் வரை )) அதாவது தண்ணீரில் பலமுறை முங்கி குளித்துவிட்டு
நான் குளித்துவிட்டேனா இல்லையா ? என சந்தேகம் கொள்பவன் பைத்தியக்காரனாவான் என்பது விளக்கமாகும்.
3) கழிவறையில் அதிக
நேரம் இருக்கச் செய்தல்.
4) சிறுநீர் மூலம் ஈரத் தன்மை ஏற்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துதல்.
o
((சிறுநீர் கழிக்கும்பொழுது இலகுவான முறையில் அமர்ந்து கிப்லாவை முன்னோக்காமல்
இருப்பது நபிவழியாகும்.))
5) தொழுகையில் வீண் சந்தேகத்தை ஏற்படுத்துதல். உதாரணமாக.(முதல்
தக்பீரில் நிய்யத் சொல்வதில் சிரமபப்படுவது, பலவிடுத்தம் சத்தமிட்டுக் கூறுவது , மேலும்
தக்பீரதுல் இஹ்ராம், ஸுரதுல் பாத்திஹாவை பலவிடுத்தம்
சொல்லுதல். போன்றவை.
6) தொழுகையில் வுழு முறிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துதல்.
தொழுகையில்
சத்தமிட்டு நிய்யத் சொல்வது நபிவழியல்ல. பலமுறை மீட்டி மீட்டிக் கூறுவது ஷைத்தானின்
ஊசலாட்டமாகும். சத்தத்தை உயர்த்துவது மனிதர்களை நோவிப்பதாகுதம். இதனை வணக்கமாகக்கொள்வது
மறுக்கப்பட்டதாகும்.
o
அபூஹுரைரா ரலியல்லாஹீ அன்ஹு அவர்கள் அறிவிக்கிரார்கள். (( உங்களது வயிற்றிலிருந்து ஏதும் வெளிப்பட்டதா
இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதன் வாடயையோ அல்லது சத்தத்தையோ உணராதவரை பள்ளியைவிட்டு
வெளியேரவேண்டாம். )) நபிமொழி முஸ்லிம்.
ஷைத்தானின் சூழ்ச்சியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான
வழிமுறைகள்....
Ø
அல்லாஹ்விடம்
பாதுகாப்புக்கோருதல்.
Ø
நபிவழி பற்றிய
அறிவை வளர்த்துக் கொள்ளல்.
Ø
திக்ர் எனும்
இறைநினைவின் மூலம் பாதுகாப்புப்பெறல்.
Ø
பிரார்த்தனையை
அதிகப்படுத்திக் கொள்ளல்.
Ø
அல்குர்ஆனை
அதிகம் ஓதுதல்.
Ø
தொழுகையைப்
பேணிபாதுகாத்துத் தொழல்.
Ø
வெறுக்கப்பட்ட
அனைத்து ஒன்றுகூடலையும் தவிர்த்துக்கொள்ளல்.
Ø
கெட்ட நண்பர்கள்,
சங்கீத மேடைகள், வெறுக்கத்தக்கவாடைகள் உள்ள இடங்களைவிட்டும் தூரமாதல்.
அனைத்துவிதமான தீங்குகளைவிட்டும் முழுமையாக அல்லாஹ்வின் மீது
நம்பிக்கை வைத்து பாதுகாப்புக்கோருவோமாக. இறைபாதுகாப்புப் பெற்றவனே முழுமையான பாதுகாப்புப்பெற்றவனாவான்.
0 comments:
Post a Comment