1 ரமலான் 1433 ஹி
--- 20 ஜூலை
2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்
இடம் :
மஸ்ஜிதுந்நபவி மதீனா
முனவ்வரா
தலைப்பு :
மன்னிப்பு
மற்றும் கருணை
மாதம்
கதீப் : இமாம் ஹுஸைன்
அப்துல் அஸீஸ்
ஆலுஷ்ஷெய்க்
ரமலான் மாதம் மன்னிப்பு மற்றும் கருணை மாதம். அது பல சிறப்புக்களைக்கொண்ட மாதம். இது வருடத்தில் ஒரு முறை மாத்திரம் வரும். இதில் முஸ்லிம்கள் பல நல் அமல்கள் செய்து பாவங்களை
தவிர்ந்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இம்மாதத்தின் மூலம் உங்களுக்கு சுபசோபனம் உண்டாகட்டுமாக ! இம்மாதத்தில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவதற்க்கு அல்லாஹ் நம்அனைவருக்கும் அருள் புரிவானாக.
ரமழான் மாதத்தை அடைந்துகொள்வதென்பது மிகப்பெரிய அருளாகும்.இது பல அருள்களையுடைய மாதமாகும். மேலும் பாவங்களை அழித்து அந்தஸ்த்துக்களை உயர்த்தும். இதுபற்றி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகையில்
o
(( யார் ஈமான் எனும் இறைவிசுவாசத்துடன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவராக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கிராரோ அல்லாஹ் அவருடைய முன்சென்ற பாவங்களை மன்னித்துவிடுவான்.) நபி மொழி புகாரி,முஸ்லிம்
o
((மேலும் ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவனவாயல் திறக்கப்பட்டு நரவாயில்கள் மூடப்பட்டு ஷெய்தான் விலங்கிடப்படுவான்.)) நபி மொழி புகாரி,முஸ்லிம்
இந்த மாதத்தில் அடைந்துகொள்ளக்கூடிய பெரிய வெற்றி யாதெனில் இம்மாதத்துடைய நேரங்களை நல்லமுறையில் பயன்படுத்தி நன்மையான கருமங்களைச் செய்வதற்க்கு முந்திக்கொள்வதாகும். இதனைத் தவறவிட்டவனைப்போன்ற
பாவி எவரும் இருக்கமுடியாது.
இம்மாதத்தில் செய்யக்கூடிய நல்அமல்கள் ஏராளம் உள்ளன.அவற்றில் சில...
நோன்பு நோற்பது
o
2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
அல்குர்ஆன் ஓதுதல்
o
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;
அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிதல்
o
((மூன்று நபர்களுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். அதில் ஒன்றுதான் நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் துஆ….)) நபிமொழி.
இம்மாதத்தை பயன்படுத்த அல்லாஹ் நமக்கு அருள் புரியட்டும்.
0 comments:
Post a Comment